நீரிருந்தும் நீர்ப்பறவைகள் இல்லா நீரோடையை நீர்ப்பறவைகள் இயக்குநர் பார்வையிட்டார். posted byM.N.L.முஹம்மது ரபீக், (காயல்பட்டினம்.)[22 March 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 26395
குறிப்பு:
வழக்குரைஞரும், வரலாற்று ஆய்வாளரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான தீன் அவர்கள் தாராளமாக தண்ணீர் இருக்கும் இந்த நீரோடையைப் பார்த்து அதிர்ச்சியுற்றார். இவ்வளவு தண்ணீர் இருந்தும் நீர்ப்பறவைகள் ஒன்று கூட இல்லாதது ஒன்றே போதும் ஓடையில் இரசாயணக்கழிவும், அமிலமும் கலந்திருப்பது என்பதற்கான அடையாளம்.
இதில் மீன்கள், தவளைகள் போன்ற எதுவுமே உயிர் வாழாது சொல்லப் போனால் விஷத்தை தவிர ஒரு புழு பூச்சிகள் கூட வாழ தகுதியற்ற ஓடை எனவும், மேலும் செம்மண்ணின் சுவடே இல்லாத அந்த இடத்தில் காணப்படும் செந்நிறமும் ஆபத்தான அமிலம் அல்லது கலக்கும் நச்சுப்பொருளால் ஏற்பட்ட அடையாளமே என மிகவும் கவலையுற்றவராக சொன்னதைக் கேட்டு நம் மனது கனத்தது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross