காயல்பட்டினம் புறவழிச்சாலை – காட்டு பக்கீர் அப்பா தர்ஹா அருகிலும், கடையக்குடியிலுமுள்ள கழிவுநீர் ஓடையையும், அது கடலில் கலக்குமிடத்தையும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பார்வையிட்டனர்.
காயல்பட்டணம்.காம் இணையதள ஏற்பாட்டில், “எழுத்து மேடை மையம்” அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக காயல்பட்டினம் வந்திருந்த ஆவணப்பட இயக்குநரும், பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தைச் சேர்ந்தவருமான - சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆர்.ஆர்.சீனிவாசன், கவிஞரும் - சுற்றுச்சூழல் ஆர்வலரும் - திரைப்பட இயக்குநருமான அமீர் அப்பாஸ், வழக்குரைஞரும் – வரலாற்று ஆய்வாளரும் – சுற்றுச்சூழல் ஆர்வலருமான தீன் ஆகியோர் 16.03.2013 சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை பார்வையிட்டனர்.
பொறியாளர் ஏ.பி.ஷேக், எழுத்தாளர்களான சாளை பஷீர் ஆரிஃப், எம்.என்.எல்.முஹம்மத் ரஃபீக் என்ற ஹிஜாஸ் மைந்தன், காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோர் நிகழ்வின்போது உடனிருந்தனர்.
படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் (காயல்பட்டணம்.காம்) |