காயல்பட்டினம் சதுக்கைத் தெரு - பெரிய சதுக்கை வளாகத்திலியங்கி வரும் அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றத்தின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு, பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை பேச்சுப்போட்டி, வினாடி-வினா தகுதி சுற்றுப்போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன. அடுத்த கட்டமாக, கட்டுரைப் போட்டி மற்றும் கருத்தரங்க நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
இதுகுறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:-
அஸ்ஸலாமு அலைக்கும்.
நமது அல்-அமீன் இளைஞர் நற்பணி மன்றத்தின் வெள்ளி விழாவை முன்னிட்டு தொடர் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை பல போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில், கட்டுரைப் போட்டி மற்றும் கருத்தரங்கம் ஆகியன கீழ்க்காணும் விபரப்படி நடைபெறவுள்ளது:-
கட்டுரைப் போட்டி
தலைப்புகள்:
(1) கம்மா (பாட்டி) வழி கை வைத்தியம்
(2) தாய்ப்பாலின் சிறப்புகள்
விதிமுறைகள்:
1. கட்டுரை முன்னுரை, கருத்துரை, முடிவுரை ஆகியவற்றைக் கொண்டதாக இருக்க வேண்டும்
2. கட்டுரை 4 பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
3. எழுத்தாளர்கள் 15 வயதைக் கடந்தவர்களாக இருக்க வேண்டும்
4. பாட்டி வழி வைத்தியத்தில் அதன் சிறப்பு, மருத்துவ குணம், மருத்தின் பெயர், தயாரிப்பு முறை ஆகியன இடம்பெற வேண்டும்
5. முன்னுரை - 10, கருத்துரை - 60, கோங்கு - 10, மொழி வளம் - 10, முடிவுரை - 10 என்ற அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும்
6. நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.
7. கட்டுரைகளை சதுக்கைத் தெருவில் அமைந்துள்ள அல்-அமீன் மினி மார்க்கெட்டில் காலை 10.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை வழங்கலாம்
8. இரு பிரிவுகளிலும் சிறந்த 3 கட்டுரைகளுக்கு பணப்பரிசு வழங்கப்படும்
9. கட்டுரைகள் அனுப்ப கடைசி நாள்: 30.03.2013
கருத்தரங்கு (மகளிருக்கானது)
தலைப்புகள்:
(1) கம்மா (பாட்டி) வழி கை வைத்தியம்
(2) தாய்ப்பாலின் சிறப்புகள்
நாள்:
31.03.2013
கலந்துகொள்ள தகுதி:
(1) பெண்கள் கலந்துகொள்ளலாம்
(2) முதியோருக்கு (கம்மாக்களுக்கு) முன்னுரிமை அளிக்கப்படும்
இவ்வாறு, அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |