காயல்பட்டினம் சதுக்கைத் தெரு - பெரிய சதுக்கை வளாகத்திலியங்கி வரும் அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றத்தின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு, பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை பேச்சுப்போட்டி, வினாடி-வினா தகுதி சுற்றுப்போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன. வினாடி-வினா இறுதி சுற்றுப்போட்டிகள் நாளை நடைபெறுகிறது.
இதுகுறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:-
அஸ்ஸலாமு அலைக்கும்.
நமது அல்-அமீன் இளைஞர் நற்பணி மன்றத்தின் வெள்ளி விழாவை முன்னிட்டு தொடர் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. வினாடி-வினா தகுதி சுற்றுப்போட்டிகள் அண்மையில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இறுதி சுற்றுப்போட்டிகள் கீழ்க்காணும் விபரப்படி நடைபெறவுள்ளது:-
வினாடி-வினா இறுதிச் சுற்றுப் போட்டி (ஆண்கள்-1)
நாள்:
24.3.13 ஞாயிறு மாலை 04.00 மணி
தகுதி:
தகுதிச்சுற்றில் வெற்றி பெற்றவர்கள் (10-15 வயதிற்குட்பட்ட ஆண்கள்)
போட்டியின் வகை:
வாய் வழி பதில்
சுற்றுகள் எண்ணிக்கை:
6
சுற்றுகள் விபரம்:
மார்க்கம் 1 (குர்ஆன் பற்றி)
மார்க்கம் 2 (நபி அவர்கள் வாழ்வு, ஸஹாபாக்கள், இஸ்லாமிய வரலாறு
பொது அறிவு 1
பொது அறிவு 2 (தற்கால நிகழ்வுகள்)
பொது அறிவு 3 விரிவாக்கங்கள் மற்றும் மொழிபெயர்ப்புகள்)
பொது அறிவு 4 (அறிவியல்)
நிகழ்விடம்:
பெரிய சதுக்கை வாளகம், சதுக்கைத் தெரு.
வினாடி-வினா இறுதிச் சுற்று (பெண்கள்-1)
நாள்:
24.3.13 ஞாயிறு மாலை 04.00 மணி
தகுதி:
தகுதிச்சுற்றில் வெற்றி பெற்றவர்கள் (15 வயதிற்குட்பட்ட பெண்கள்)
போட்டியின் வகை:
வாய் வழி பதில்
சுற்றுகள் எண்ணிக்கை:
6
சுற்றுகள் விபரம்:
மார்க்கம் 1 (குர்ஆன் பற்றி)
மார்க்கம் 2 (நபி அவர்கள் வாழ்வு, ஸஹாபாக்கள், இஸ்லாமிய வரலாறு
பொது அறிவு 1
பொது அறிவு 2 (தற்கால நிகழ்வுகள்)
பொது அறிவு 3 விரிவாக்கங்கள் மற்றும் மொழிபெயர்ப்புகள்)
பொது அறிவு 4 (அறிவியல்)
நிகழ்விடம்:
ஜன்னத்துல் காதிரிய்யா பெண்கள் தைக்கா, சதுக்கைத் தெரு.
பார்வையாளர்களுக்கான பரிசுகள்:
பார்வையாளர்களுக்கு இரட்டைப் பரிசு (ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக)
1. போட்டியில் போட்டியாளர்களுக்கு விடை தெரியாத வினாக்களுக்கு பார்வையாளர்கள் விடையளித்தால் ஒரு பரிசு
2. ஒவ்வொரு சுற்றின் இறுதியிலும் பார்வையாளர்களுக்கென்றே 2 கேள்விகள் கேட்கப்படும். அவற்றுக்கு சரியான விடையளிக்கும் பார்வையாளர்களுக்கு 1, 2, 3 என பரிசு வழங்கப்படும். ஒன்றுக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் சம அளவில் சரியான விடை வழங்கினால் சிறப்புக் கேள்வி முறை பின்பற்றப்படும்.
இவ்வாறு, அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |