காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக்கோரி, 13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீனைத் தவிர, 11ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.முகைதீன், 12ஆவது வார்டு உறுப்பினர் ஆர்.ரெங்கநாதன் ஆகியோர் தலைமையில் இதர 17 உறுப்பினர்களும், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநரிடம் (ஆர்.டி.எம்.ஏ.) 08.03.2013 அன்று மனு அளித்துள்ள செய்தி காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது.
இம்மனுவின் அடிப்படையில், நகர்மன்றத் தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் கூட்டப் பொருள் மீது முடிவு செய்யும் கூட்டம், வரும் ஏப்ரல் மாதம் 05ஆம் தேதியன்று நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் தலைமையில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் கலந்துகொள்ளக் கோரி, நகர்மன்ற அங்கத்தினர் அனைவருக்கும் பின்வருமாறு கடிதம் அளிக்கப்பட்டுள்ளது:-
|