ஓய்வுபெற்ற நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரையின் படி, முஸ்லிம்களுக்கு தேசிய அளவில் 10 சதவிகித தனி இட ஒதுக்கீடு - மாநில அளவில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள 3.5 சதவிகித இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்தல், முழு மதுவிலக்கு, நீண்டகாலமாக சிறைகளிலிருக்கும் விசாரணைக் கைதிகள் விடுதலை ஆகியவற்றை வலியுறுத்தி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் - நாடு தழுவிய அளவில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நடத்தப்படவிருக்கும் கவன ஈர்ப்புப் பேரணியின் ஓரங்கமாக, 5 ஆயிரம் பொதுமக்களைத் திரட்டி - தூத்துக்குடி நகரிலும் கவன ஈர்ப்புப் பேரணியை நடத்தி, நிறைவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை அளித்திட, இம்மாதம் 05ஆம் தேதியன்று காயல்பட்டினத்தில் நடைபெற்ற - கட்சியின் மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு, பேரணிக்கான ஏற்பாடுகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இப்பேரணியில் பங்கேற்க - தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு அழைப்பு விடுத்து, அக்கட்சியின் மாணவரமைப்பான முஸ்லிம் மாணவர் பேரவை - தூத்துக்குடி மாவட்ட கிளை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அழைப்பறிக்கை வருமாறு:-
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு...
வரும் ஏப்ரல் மாதம் 02ஆம் தேதியன்று நமது தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில், முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு, முழு மதுவிலக்கு, நீண்டகால விசாரணைக் கைதிகள் விடுதலை ஆகியவற்றை வலியுறுத்தி நாடெங்கிலும் அனைத்து மாவட்டங்களின் தலைநகரகங்களில் கவன ஈர்ப்புப் பேரணி நடத்தப்படவிருக்கிறது.
சமுதாய நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாய்க் கொண்டு நடத்தப்படும் இப்பேரணியில் நமது தூத்துக்குடி மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களும் பெருந்திரளாகக் கலந்துகொள்ள வருமாறு உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
காயல்பட்டினத்திலிருந்து பேரணியில் கலந்துகொள்ள விரும்புவோருக்காக வாகன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கலந்துகொள்ள விரும்புவோர், +91 80150 30742, +91 95664 65372, +91 95438 13045 ஆகிய எண்களில் தொடர்புகொண்டு பெயர்பதிவு செய்துகொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
ஒன்றுபடுவோம்! உரிமைக்குக் குரல் கொடுப்போம்!! இறையருள் பெறுவோம்!!!
இவ்வாறு, தூத்துக்குடி மாவட்ட முஸ்லிம் மாணவர் பேரவை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
H.L.அப்துல் பாஸித் |