பி.எஸ்.என்.எல். ப்ராட்பேண்ட் சேவையில் 25.03.2013 திங்கட்கிழமையன்று மதியம் 02.00 மணியளவில் ஏற்பட்ட பழுது காரணமாக, காயல்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் - இன்டர்நெட் இணைப்பு மற்றும் தரவழி தொலைபேசி இணைப்பு ஆகியன முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து, பி.எஸ்.என்.எல். நிர்வாகத்திடம் வினவுகையில், திருச்செந்தூர் அருகேயுள்ள கருணாலயா சேவை நிறுவனம் அருகில் பொதுப்பணிக்காக பூமி தோண்டப்பட்டபோது, அதற்குள்ளிருந்த பி.எஸ்.என்.எல். கம்பிவடம் வெட்டப்பட்டுவிட்டதாகவும், பின்னர் அது போர்க்கால அடிப்படையில் சரிசெய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. |