காயல்பட்டினம் கற்புடையார் பள்ளி வட்டம் - கடற்கரை முஹ்யித்தீன் பள்ளியில் முஹ்யித்தீன் ஆண்டகை கந்தூரி விழா நிகழ்ச்சிகள் 28.02.2013 துவங்கி, 04.03.2013 வரை நடைபெற்றது.
28.02.2013 முதல், 03.03.2013 வரை ஒவ்வொரு நாளும் கத்முல் குர்ஆன் ஓதி ஈஸால் தவாப் செய்யப்பட்டது.
அன்றைய நாட்களில் இரவு 08.30 மணிக்கு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 28.02.2013 அன்று, காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் தங்ஙள் அஹ்ஸனீ ஃபாழில் பாக்கவீ - “திருமணமும், விவாகரத்தும்” என்ற தலைப்பிலும், 01.03.2013 அன்று, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ - “இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்” என்ற தலைப்பிலும், 02.03.2013 அன்று, மஹ்ழரா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஏ.கே.முஹம்மத் அஸ்ஃபர் அஷ்ரஃபீ - “இறைநேசர்கள் யார்?” என்ற தலைப்பிலும் உரையாற்றினர்.
03.03.2013 அன்று மாலை 04.30 மணிக்கு மஹான் முஹ்யித்தீன் ஆண்டகை அவர்களின் புகழ்பாடும் மவ்லித் மஜ்லிஸ், கடற்கரை முஹ்யித்தீன் பள்ளி இமாம் கத்தீபு ஹாஃபழ் எஃப்.ரஹ்மத்துல்லாஹ் தலைமையிலும், மஃரிபுக்குப் பின், ராத்திபத்துல் காதிரிய்யா திக்ர் மஜ்லிஸ் - பண்ணை எஸ்.ஏ.எம்.ஸலாஹுத்தீன் தலைமையிலும் நடைபெற்றது.
அன்றிரவு 08.30 மணிக்கு, காயல்பட்டினம் சிறிய குத்பா பள்ளியின் கத்தீபும் - ஜாவியா அரபிக் கல்லூரியின் முதல்வருமான மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ கந்தூரி நாள் சிறப்பு சொற்பொழிவாற்றினார்.
மறுநாள் 04.03.2013 அன்று காலை 06.30 மணிக்கு, மஹ்ழரா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் யாஸர் அரஃபாத் மஹ்ழரீ துஆ இறைஞ்ச, அதனைத் தொடர்ந்து நேர்ச்சை வினியோகம் நடைபெற்றது.
அனைத்து நிகழ்ச்சிகளிலும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை, பள்ளி தலைவர் ஜுவெல் ஜங்ஷன் கே.அப்துல் ரஹ்மான், செயலாளர் ‘முத்துச்சுடர்’ ஹாஜி என்.டி.இஸ்ஹாக் லெப்பை, பொருளாளர் கோமான் மீரான் மற்றும் குழுவினர் செய்திருந்தனர். |