காயல்பட்டினத்திலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள - திருச்செந்தூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் கட்டிட துவக்க விழா இம்மாதம் 31ஆம் தேதியன்று காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.
தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி.முனுசாமி தலைமையும், தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் முன்னிலையும் வகிக்கின்றனர்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டி.எஸ்.சிவஞானம், ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் புதிய கட்டிடத்தை குத்துவிளக்கேற்றி துவக்கி வைக்கிறார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெ.ராஜேந்திரன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.
1. கட்டிட துவக்க விழாவை முன்னிட்டு.. posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[27 March 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 26505
திருச்செந்தூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் கட்டிட துவக்க விழாவை முன்னிட்டு கிடப்பில் கிடக்கும் வழக்குகளை துரிதப்படுத்தி விரைவில் தீர்ப்புகள் அன்று வழங்கப்படுமா...?
எத்தனை.. எத்தனை நீதிமன்றங்கள் இந்திய திருநாட்டில் இருந்தாலும் (துவங்கினாலும்) குற்றங்கள் குறைந்தபாடில்லை...! தீர்ப்பும் உடனே வந்ததாக இல்லை...!
சிவிலோ,க்ரைமோ நீதிமன்றங்களும், நீதியும் மக்களுக்கு தூரமாகவே இருந்து கொண்டிருக்கிறது.யாராக இருந்தாலும் நீதி விரைவில் கிடைக்கவேண்டும் அதல்லாமல் நீதிமன்றங்கள் அருகிலிருப்பதே குற்றங்கள் குறைவதற்கும் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் வழக்குத்தொடரவும் வசதியாக இருக்கும் இன்னும் தூரத்தில்ருப்பதானல் மனோநிலையும், போக்குவரத்துசெலவும், காலாவகாசமும், முதுமையும், இயலாமையும் ஒருமுட்டுக்கட்டாகவே இருக்கும் குற்றங்களுக்கும், பிரச்சினைகளுக்கும் விரைவில் தீர்வுவேண்டுமென்றால் நீதிமன்றங்களும், நல்ல நீதிபதிகளும்,நல்ல வழக்கறிஞர்களும் அருகிலிருப்பதே நல்லது. மற்றுமோர்விஷயம் நீதிமன்றங்கள் அதிகரிக்கிறதென்றால் குற்றங்களும்,பிரச்சினைகளும் அதிகமாக் தேங்கிக்கிடக்கிறதென்றே பொருள். நம் நாட்டு ஜனத்தொகைக்கு தற்போதிருக்கும் நீதிமன்றங்களும் நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் போதுமா?
3. முற்றுபெறாத முடுக்கு வழக்கு,,,,, posted byNIZAR (KAYALPATNAM)[30 March 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 26541
நம் தாலுகாவாக திகழும் திருசெந்தூரின் சிறப்பம்சம் கபால
தையே கிறக்க வைக்கும் கழிவுநீர் வாடையாக இருந்தாலும் மறுபக்கம் அணைத்து அரசு அலுவலகங்கள், காவல்துறை,
நீதிமன்றம், எல்லாம் ஒருங்கிணைந்து ஒரே இடத்தில் அமைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
வெள்ளைக்காரன் கட்டிய ஒட்டுகூரையில் இயங்கிய இந்த நீதிமன்றம் புதிய கட்டுமானத்தில் புது பொலிவுடன் அமைந்திருப்பது சிறப்புக்குரியது. இங்கு திருசெந்தூர் சுற்றுப்புற கிராமங்களில் நடந்த குடும்ப சண்டைகள், கொலை,
கொள்ளை, அடிதடி, கலவரம், கோஷ்டி சண்டை போன்ற பல வழக்குகள் வழமையாக நடைபெற்றாலும், காயல்பட்டினத்தில்
இருந்து வழக்கு என்று பார்த்தல் அது பெரும்பாலும் முடுக்கு சண்டையை தவிர வேரதுமில்லை எனலாம்.
எத்தனை தலைமுறை ஆனாலும் முற்று பெறாத இந்த முடுக்கு சண்டையை நிறுத்த வழி தெரியவில்லை. யாருடைய சமாதான ஆலோசனையும் கேட்காமல் வழக்கு சென்று விடுகிறார்கள். வழக்கு போட்டவர்களின் வாழ்க்கையே முடிந்தாலும் வழக்கு முடிவுபெராமல் எத்தனையோ நம் ஊரு வழக்குகள் இருந்தது குறிப்பட தக்கது.
இந்த புதிய நீதிமன்றம் நிலுவையில் இருக்கும் வழக்குகளை துரிதபடுத்தி விரைவில் தீர்ப்பு வழங்கும் என நம்புவோம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross