தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு, தேசிய மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, ஓய்வூதியம், மருத்துவ உதவி மற்றும் அரசின் அனைத்துத் துறை திட்டங்களின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கிட, அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் சிறப்பு முகாம்கள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.
திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கான சிறப்பு முகாம் திருச்செந்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 30.03.2013 சனிக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ளது. மாற்றுத்திறனாளிகள் இந்த சிறப்பு முகாமை நல்ல முறையில் பயன்படுத்தி பயனடையுமாறு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் கேட்டுக்கொண்டுள்ளார். |