Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:15:30 AM
செவ்வாய் | 14 ஜுலை 2020 | துல்ஹஜ் 348, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4512:2803:5406:4608:02
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்00:46
மறைவு18:41மறைவு13:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5005:1705:43
உச்சி
12:23
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
19:0319:3019:57
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10515
#KOTW10515
Increase Font Size Decrease Font Size
சனி, மார்ச் 30, 2013
ஹாஜி அபுல் ஹசன் கலாமி மொழிபெயர்ப்பில் எனது பயணம் (The Road to Mecca) என்ற புத்தகம் வெளியீடு!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3107 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (18) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

முஹம்மது அசத் - யூதராக பிறந்து இஸ்லாத்தை தழுவியவர். இவரின் இயற்பெயர் Leopold Weiss. அரசு தூதரும், பத்திரிக்கையாளரும், எழுத்தாளரும் ஆகிய இவர் தற்போது உக்ரைன் நாட்டில் உள்ள லேம்பெர்க் என்ற பகுதியில் 1900 இல் பிறந்தார். ஜெர்மனி நாட்டில் 1926 இல் இஸ்லாத்தை தழுவிய இவர், 1947 ஆம் ஆண்டு பாகிஸ்தான் நாட்டு பிரஜை ஆனார். தனது 92 ஆம் வயதில், ஸ்பெயினில் இவர் காலமானார்.

இவர் எழுதிய இரு புத்தகங்கள் பிரபலமானவை: ஒன்று, The Road to Mecca. மற்றொன்று, The Message of the Quran.

The Road to Mecca என்ற புத்தகத்தை காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்மா பள்ளியின் துணைத் தலைவரும், ஐ.ஐ.எம். பைத்துல்மால் அமைப்பின் தலைவருமான ஹாஜி எஸ்.ஒ. அபுல் ஹசன் கலாமி - மொழிப்பெயர்த்துள்ளார்.எனது பயணம் என்ற பெயரில் வெளிவந்துள்ள இந்த மொழிப்பெயர்ப்பினை சாஜிதா புக் சென்டர் வெளியிட்டுள்ளது. 464 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தின் விலை ரூபாய் 200 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த புத்தகத்திற்கான அணிந்துரையை பேராசிரியர் டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) வழங்கியுள்ளார்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...மாணிக்க பயணம் முதல் மக்கா பயணம் வரை...
posted by mackie noohuthambi (kayalpatnam) [30 March 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 26526

அபுல் ஹசன் கலாமி அவர்கள் பயணித்த மாணிக்க பயணம் தெரியும். அவர் வாழ்ந்த தூய வாழ்க்கை புரியும்.

இலங்கை தலை நகரில் அவர்கள் இரும்பு வியாபாரத்தில் கரும்பாக இனித்ததும். மாணிக்க வியாபாரத்தில் மாணிக்கமாக மிளிர்ந்ததும் என் தந்தை காலத்து மலரும் நினைவுகள்.

ஆனால் அவர்கள் ஆங்கில புத்தகத்தை தமிழாக்கம் செய்யும் புலமை பெற்றவர் என்ற செய்தி என் போன்றவர்களுக்கு புதியது. அதை வாங்கி படித்த பின்தான் அதை பற்றிய விமர்சனங்கள் செய்ய முடியும். இது ஒரு ஆசிரியர் குறிப்பு அவ்வளவுதான். அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [30 March 2013]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26527

மாஷா அல்லாஹ்..!

ஆச்சரியமான, ஆர்வமூட்டக்கூடிய, அன்பான செய்தி.

அமைதியாக, அடக்கமாக இருக்கும் கலாமி ஹாஜியாரிடம் இவ்வளவு திறமையா? மிக்க சந்தோசம்.

" நிறைகுடம் தழும்பாது" என்பதற்கான வாழும் உதாரணம்.

உங்களின் திறமைகளை அதிகம் அதிகம் வெளிக்கொண்டு வாருங்கள். எங்களைப்போல இளைஞர்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும் முன்மாதிரியாகவும் திகழுங்கள்.

வல்ல ரஹ்மான் உங்களின் ஆயுளை அற்புதமாக அதிகரித்து, மக்களுக்கு நன்கு சேவை செய்யும் ஆற்றலையும் தருவானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by mohmedyounus (muscat) [30 March 2013]
IP: 82.*.*.* Oman | Comment Reference Number: 26528

கலாமி ஹாஜியாரின் இதுபோன்ற பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. எதனை பற்றி எழுத?
posted by M.M. Seyed Ibrahim (Chennai) [30 March 2013]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 26530

The Road to Mecca provides an excellent historical background of King Ibn Saud era, and is a great read - though there are some sections i am not comfortable with.

கலாமி ஹாஜியாரின் பொது சேவைகள் ஓரளவு தெரியும். மதிய வெயிலிலும் ஆயிஷா சிதீகா கட்டட வேலைகளை மேற்பார்வைஇடுவார்கள். அவர்களுக்கு மொழிபெயர்ப்பெல்லாம் தெரியும் என்பது எனக்கு புதிது. வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. சப்தமில்லாமல் சாதனை
posted by NIZAR (KAYALPATNAM) [30 March 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 26533

சப்தமில்லாமல் சாதனை நிகழ்த்தி இருக்கும் கலாமி ஹாஜியார் அவர்களுக்கு என் இனிய வாழ்த்துக்களை தெர்வித்து கொள்கிறேன்.புத்தகங்களை படித்த பிறகுதான் அவர்களின் முழுமையான மொழிபெயர்ப்பு கைத்திறனை அறியமுடியும்.

வரலாற்று சிறப்பு மிக்க இப்படிப்பட்ட புத்தகங்களுக்கு மொழி பிறப்பு செய்வது அவர்கள் வாழ்கையில் மறக்க முடியாத நெஞ்சை தொடும் நிகழ்வாக இருக்கும் எனலாம்.நம் முயற்சிகள் அனைத்தையும் இறைவன் வெற்றியாகுவானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. பயன்தரும் பயணம்!
posted by kavimagan m.s.abdul kader (qatar) [30 March 2013]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 26536

எளிமையும், நேர்மையும் நெஞ்சகத்தே தாங்கிய ஹாஜியார் அவர்கள் கடிய பாறையைக் கூட கனிவால் உடைக்க வல்லவர். இந்த புத்தகத்தைக் குறித்து சிறிதளவு கேள்விப்பட்டிருக்கிறேன். ஆங்கில மொழியை முழுதாகப் புரிந்து கொள்ளும் ஆற்றல் இல்லாத என்னைப் போன்றவர்கள், படித்து பயன்பெற கலாமி ஹாஜியார் அவர்களது இந்த சீரிய முயற்சி இறையருளால் வழிவகுக்கும்.

மூல புத்தகத்தை எழுதிய முஹம்மத் அஸத் அவர்களது மேலான மறுமை வாழ்விற்கும், மொழி பெயர்த்துள்ள ஹாஜியார் அவர்களின் இருலோக நல்வாழ்விற்கும், இருகரமேந்தி இறைவனை இறைஞ்சுகிறேன்.

அன்புடன்,
எம்.எஸ்.அப்துல் காதர்,
S /O மர்ஹூம்.எஸ்.கே.எம்.சதக்கத்துல்லாஹ் ஆலிம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by Dr D Mohamed Kizhar (chennai..) [30 March 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 26537

வாழ்த்துக்கள் ..பிரார்த்தனைகளுடன்..

நிறை குடம் தழும்பாது என்ற பலமொழிர்கேர்ப்ப , அமைதியாக இந்த வேலையை, அலட்டாமல் செய்து முடித்த கலாமி ஹாஜியாருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.. மேன்மேலும் பல சாதனைகள் நிகழ்த்த இறைவனை இறைஞ்சுகிறேன்..

முஹம்மது கிஸார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by s.i.ahamed (colombo) [30 March 2013]
IP: 124.*.*.* Sri Lanka | Comment Reference Number: 26550

மசால்லாஹ், ஹஜியார் நான் ஊரில் இருக்கும் போது சொன்னார்கள். அப்போதுதான் அவர்கள் தெறமை தெரிந்தது.ஹஜியார் படித்தது கண்டி இல் திரிண்டி collage..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. மனிதரில் மாணிக்கம்!
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (yanpu) [30 March 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26553

எங்கள் அலியார் தெருவில் அந்த நேரத்தில் கள்ளன் பிரளியாக இருந்தது.ஒரு நாள் இரவு சுமார் ஒரு மணி இருக்கும் ,கும்மிருட்டில் நாய் குறைப்பு அதிகமானதால், நான் மொட்டைமாடிக்கு சென்று நோட்டமிட்டேன், எங்கள் வீட்டிற்கு அடுத்துள்ள ஆய்ஷாசித்தீக்கா கல்லூரியிலிருந்து இரு உருவங்கள் ஒருஆணும் ஒருபெண்ணும் வருவதைப்பார்த்தேன்,கீழே ஓடோடி தெருவிற்கு வந்து யாரது?என்று அதட்டினேன், நான்தான் வாப்பா கலாமி என்றார்கள். இவ்வளவு நேரம்கழித்து செல்கிறீர்களே ஹாஜியார் என்றேன். நாளைக்குள்ள வேலைகளை ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்தோம்,அதில் நேரம் போனது தெரியவில்லை என்று சர்வசாதாரணமாக அத்தியாக தம்பதிகள் பதில் அளித்தார்கள்! .

மனிதநேயமும்,மனிதாபிமானமும்,மற்றவரின் தேவைஅறிந்து மறைவாக உதவிசெய்யும் உத்தம உள்ளத்திற்கு சொந்தக்காரர்!. கருத்தால்,கொள்கையால் மாற்று எண்ணமுடையவர்களும் மதித்து போற்றும் மாமனிதர்!

மனிதருள் மாணிக்கம் என்கிறார்களே அவர் யார்?,எங்கே? என்று தேட எந்த சிரத்தையும் தேவையில்லை,காயலின் இதயவீதியில் எழுச்சியுடன் எழுந்து நிற்கும் அல்ஜாமிஉல் அஸ்ஹர் பள்ளியில் பலநேரங்களிலும் பார்க்கமுடியும் இந்த பத்திரமாற்று தங்க குணத்துக்குறிய கலாமின் அவர்களை!

இவர் கண்ணியமிகு காயலில் வாழ்கிறார் என்பதைவிட, இவருடைய கண்ணியத்தின் பயனால் நம் காயல்புகழ் கண்ணியத்தாலும்,புண்ணியத்தாலும் பொற் கலசங்களாய் மின்னுகிறது என்பதுதான் எதார்த்தமான உண்மை!

அன்பு,அமைதி,அடக்கம் ஆகிய அத்தனையும் ஒருசேர அமையப்பெற்ற இவரிடம் ,ஆங்கில அறிவாற்றல் திறமையும் அணி சேர்த்திருப்பதை எண்ணி உண்மையிலேயே வியந்து உள்ளமகிழ்ச்சிக்குள்ளானேன். அல்ஹம்திலில்லாஹ்!

கடல் கடந்து வாழும் எனக்கு இப்பிரதி கிடைக்கப்பெறுமேயானால் மெத்த மகிழ்ச்சிஅடைவேன்! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by D.S.ISMAIL (HONGKONG) [31 March 2013]
IP: 210.*.*.* Hong Kong | Comment Reference Number: 26561

மாஷா அல்லாஹ், வாழ்த்துக்கள்

ஹாஜியார் அவர்களின் சமுதாயத் தொண்டுகள் மேலும் தொடர அல்லாஹ் அவர்களுக்கு பரிபூரண நலத்தையும் நீடித்த வாழ்வையும் வழங்க பிரார்த்தனை செய்கிறேன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...கலாமி
posted by hylee (colombo) [31 March 2013]
IP: 124.*.*.* Sri Lanka | Comment Reference Number: 26568

'நிறைகுடம் தழும்பாது"


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. வாழ்த்துக்கள்...!
posted by M.N.L.முஹம்மது ரபீக், (காயல்பட்டினம்.) [31 March 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 26573

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும் என்பது சொல்வழக்கு! காயல்பட்டினத்தில் எத்தனையோ மதிநுட்பம் நிறைந்த மாமனிதர்கள் இருந்தும் மறைந்தும் இன்றளவும் வாழ்ந்தும் வருகின்றனர்.

எளிமையின் மொத்த உருவமான கலாமி ஹாஜியார் அவர்கள் நம் சமுதாய வளர்ச்சிக்கு தம் வாழ்நாட்களை அர்ப்பணித்துக் கொண்டு இப்படித்தான் வாழ வேண்டும் என வாழ்ந்து காட்டிக் கொண்டிருக்கும் ஒரு உதாரண புருஷர்.

அவரது சமூக உழைப்பிற்கு ஊன்றுகோலாக துணை நின்று நானும் சமுதாயப்பணி செய்ய சளைத்தவரில்லை என சரி சமமாக தொண்டாற்றி வரும் அன்னவர் தம் அன்புத் துணைவியாருக்கும், இந்நூல் மொழிபெயர்ப்பை தன்னடக்கத்தின் சுடரொளியில் தம் கைப்பட எழுதி ஓசையின்றி உலகிற்கு அர்பணித்த அந்த உத்தமர் தம் உன்னத முயற்சிக்கும் வல்ல நாயன் நல்ல பலனை வாரிவழகிட வாழ்த்துகின்றேன்.

-ஹிஜாஸ் மைந்தன்.
கட்டுரையாளர். எழுத்து மேடை மையம்.
காயல்பட்டணம் டாட் காம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. வருந்துகிறேன்...
posted by S.K.Salih (Kayalpatnam) [31 March 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 26574

இந்த மொழிபெயர்ப்பை, அச்சுக்கோர்வை செய்வதற்காக - நான் பெரிதும் மதிக்கும் என் கண்ணியத்திற்குரிய கலாமி மாமா அவர்கள் என்னிடத்தில்தான் முதலில் வழங்கினார்கள். சிறிதளவு வேலையையும் முடித்துக்கொடுத்தேன். ஆனால், நாளடைவில் எனது பணிப்பளு அதிகரித்த காரணத்தால் - என்னால் அதை முடித்துக்கொடுக்க இயலாமல் போனது. அவர்களையும் வருந்தச் செய்துவிட்டேன்... (அந்நேரத்தில் தன் கோபத்தைக் கூட என்னிடம் முறைப்படி காண்பிக்க அவர்களுக்குத் தெரியவில்லை.)

இன்று, இந்நூல் அனைத்துப் பணிகளும் முடிந்து கையில் கிடைக்கிறது என்ற செய்தியை அறிகையில் உண்மையில் முதல் மகிழ்ச்சி எனக்குத்தான் என்பதை எண்ணி பெருமிதமடைகிறேன்.

இங்கு பலர் குறிப்பிட்டுள்ளது போல உண்மையிலேயே இது ஓர் அற்புதமான சரித்திர நூல் என்பதை அச்சுக்கோர்வை செய்தபோதுதான் உணர்ந்துகொண்டேன்.

வல்ல அல்லாஹ் அவர்களின் வாழ்நாளை நீட்டித்து, சரீர சுகத்தையளித்து, நமக்குத் தெரியாத இன்னும் பல பொக்கிஷங்களை வெளிக்கொணர அவர்களுக்கு அருள் செய்வானாக, ஆமீன்.

இங்கு கருத்து தெரிவித்த பலர், “நிறைகுடம் தளும்பாது” என்று குறிப்பிட்டுள்ளனர். “நிறைகுடம் தளும்பும்” என்பதே சரியான கருத்து.

அதாவது,
“நிறைகுடம் தளும்போது
குறைகுடம் கூத்தாடும்”
என்பதே அந்தப் பழமொழி.

குறைமதியாளர்களெல்லாம், குறைவான தண்ணீர் கொண்ட குடம் கூத்தடிப்பது போல பெருமையில் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கும்போது, தன்னடக்கமிக்க அறிஞர்கள், தண்ணீர் நிறைந்துள்ள குடம் தளும்புவதைப் போல அமைதி காப்பர் என்பதே அதன் விளக்கம்.

எனக்குத் தெரிந்த சிறிய செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொண்டுள்ளேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. அஸ்ஸலாமு அழைக்கும்
posted by Muhammad Shameem (Hong Kong) [31 March 2013]
IP: 61.*.*.* Hong Kong | Comment Reference Number: 26575

மாஷா அல்லாஹ், ஹாஜியாரின் முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார் தாசன்) இஸ்லாத்தை ஏற்றுகொள்ள ஒரு முன்னோடியாக (Road to Makkah) இருந்ததாக தனது பேட்டியில் குறிபிட்டிருக்கிறார், அவர் இப்புத்தகத்திற்கு அணிந்துரை வழங்கியுருப்பது மகிழ்ச்சி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. vazhlthukal
posted by larifa (chennai) [31 March 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 26583

அஸ்ஸலாமு அலைக்கும்.

மனிதனின் மரணத்திற்கு பின்னரும் அவனை தொடர்ந்து வரும் விஷயங்கள் மூன்று. ஒன்று சதக்கா, இரண்டாவது அவன் விட்டு செல்லும் பயன் தரும் கல்வி, தான் கற்றறிந்த சுவையை பிறருக்கும் வழங்கிட முதல் முயற்சி செய்த எங்கள் அப்பாவுக்காக துஆ செய்ய வேண்டுகிறோம்.

மூன்றாவதாக தொடர்வது அவர்களுக்காக பிரார்த்திக்கக் கூடிய அவர்களது வாரிசுகள், அந்த வாரிசுகளாக, அவர்களின் ஈருலக வாழ்வும் சிறக்க நாங்கள் இறைவனை இறைஞ்சுகிறோம்.

அன்புடன்
பேத்திகள்
நுமைரா
நுசைரா
நுவைசா
மற்றும் பேரன்
அபுல் ஹசன் கலாமி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...
posted by Muhammad Ibrahim (Guangzhou (China)) [01 April 2013]
IP: 183.*.*.* China | Comment Reference Number: 26586

மாஷா அல்லாஹ், ஹாஜியாரின் முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...
posted by salai s nawas (singapore) [01 April 2013]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 26587

என் நண்பனின் தகப்பனாரும் ஊரறிந்த Gentle man கலாமி ஹாஜியாருக்கு வாழ்த்துக்கள்.

மேலும் வாழ்த்துக்கள் ஒரு புறம் இருக்கட்டும், அந்த நல்ல புத்தகத்தை எல்லோரும் வாங்கி படித்து பயன் பெற்று, ஹாஜியாருக்கும் ஊக்கம் கொடுத்து இன்னும் நல்ல பல புத்தகங்களை மொழியாக்கம் செய்து நம்மூருக்கு பெருமை சேர்க்க உங்கள் யாவருக்கும் வேண்டுகோள் வைக்கிறேன்.

சாஜிதா புக் டிப்போ எங்கே இருக்கு ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. வளர்கள் உங்கள் எழுத்துப் பணி, வாழ்த்துக்கள்
posted by Mohamed Buhary (Chennai) [01 April 2013]
IP: 49.*.*.* India | Comment Reference Number: 26589

மரியாதைககுரிய கலாமி ஹாஜி அவர்களின் ‘எனது பயணம்’ என்ற தமிழாக்கம் வரவேற்புக்கும் வாழ்த்துக்களுக்கும் பாராட்டுகளுக்கும் உரியது. அல்லாஹ் அவர்களின் இந்தப் பணியை அங்கீகரிப்பானாக! எனப் பிரார்த்திக்கிறேன்.

எழுத்துத் திறமையும், அறிவாற்றலும், கூரிய சிந்தனை படைத்தவர்களும் ஏராளமாக காயல்பட்டினத்தில் உள்ளனர். தங்களின் ஓய்வு காலங்களை இது போன்ற எழுத்துத் துறைகளில் அவர்கள் பயன்படுத்தினால் எதிர்கால சந்ததினருக்கு இது சிறந்ததொரு வழிகாட்டலாக அமையும்.

பொதுவான தலைப்புகளில் இது போன்ற நூல்கள், கட்டுரைகள், ஆய்வறிக்கைகள் எழுதலாம். இதன் மூலம் சமூகத்தின் எல்லா மட்டத்தினரையும் நமது எழுத்து சென்றடைய வழிவகுக்கும்.

வெளிவந்துள்ள இந்நூல் வெளியீட்டு விழா, நூல் திறனாய்வு போன்றவற்றை காயல்பட்டினத்தில் நடத்த வேண்டும் என்பது என்னைப் போன்றவரின் பேரவா.

‘எழுத்து மேடை மையம்’ எனத் தொடங்கப்பட்ட புதிய இயக்கம், இது போன்ற எழுத்தாற்றல் படைத்தவர்களை வெளியுலகுக்கு அடையாளம் காட்டிட முன்வர வேண்டும்.

சமூகத்திற்கு இது போன்ற அரிய நூல்களை நூலாசிரியர் தொடர்ந்து கொண்டவர வாழ்த்துகிறேன்.

அன்புடன்
ஹாஃபிழ், எம்.என். முஹம்மது புகாரீ
தாருஸ் ஸலாஹ் பதிப்பகம்
சென்னை - 600003
91 71 84 61 84


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2020. The Kayal First Trust. All Rights Reserved