காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் பொதுக்குழுக் கூட்டத்தில், புதிய நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். விபரம் வருமாறு:-
மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் பொதுக்குழுக் கூட்டம், 29.03.2013 வெள்ளிக்கிழமை (இன்று) இரவு 09.10 மணிக்கு, மஜ்லிஸ் ஹல்காவில், அதன் தலைவர் நஹ்வீ இ.எஸ்.செய்யித் முஹம்மத் புகாரீ ஆலிம் தலைமையில் நடைபெற்றது.
மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ ஒய்.செய்யித் ஸதக்கத்துல்லாஹ் ஃகைரீ கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். கடந்த கூட்ட நிகழ்வறிக்கையை, எம்.ஜெ.செய்யித் இப்றாஹீம் வாசித்தார்.
அதனைத் தொடர்ந்து, மஜ்லிஸ் அங்கத்தினரும், அபிமானிகளுமான
ஹாஜி உமர் லெப்பை
எம்.எஸ்.எம்.ஷாஃபிஈ
ஹாஜி கத்தீப் புகாரீ (மக்கீ புகாரீ)
ஹாஃபிழ் எஸ்.எம்.கே.ஷாஹுல் ஹமீத்
மூஸா நெய்னா (வாவு)
எம்.ஐ.ஜவ்ஜலீ
ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, அவர்களின் மஃபிரத் - பிழைபொறுப்பிற்காக துஆ இறைஞ்சப்பட்டது. ஹாஜி டி.எம்.கே.சுல்தான் அப்துல் காதிர் துஆ இறைஞ்சினார்.
அதனைத் தொடர்ந்து, கடந்தாண்டின் வரவு - செலவு கணக்கறிக்கையை, ஹாஜி கம்பல்பக்ஷ் எஸ்.எச்.மொகுதூம் முஹம்மத் சமர்ப்பிக்க, கூட்டம் அதை ஒருமனதாக ஏற்றுக்கொண்டது.
பின்னர், நடப்பாண்டின் மஜ்லிஸ் வைபவ
துவக்க நாள் 12.05.2013 ஞாயிற்றுக்கிழமை என்றும்,
துஆ நாள் (நிறைவு நாள்) 10.06.2013 திங்கட்கிழமை என்றும்,
நேர்ச்சை நாள் 11.06.2013 செவ்வாய்க்கிழமை என்றும் தீர்மானிக்கப்பட்டது.
பின்னர், பொதுக்குழுவின் பார்வைக்காக பெறப்பட்ட கடிதங்கள் கூட்டத்தில் வாசிக்கப்பட்டு அவை குறித்து விவாதிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, மஜ்லிஸ் புதிய நிர்வாகிகள் பின்வருமாறு ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்:-
தலைவர்:
நஹ்வீ இ.எஸ்.செய்யித் முஹம்மத் புகாரீ ஆலிம்
துணைத் தலைவர்:
ஹாஜி டி.எம்.கே.சுல்தான் அப்துல் காதிர்
மேலாளர் (மேனேஜர்):
ஹாஜி என்.எஸ்.நூஹ் ஹமீத் (கம்பல்பக்ஷ்)
இணைச் செயலாளர்கள்:
(1) ஹாஜி எஸ்.ஏ.செய்யித் முஹம்மத் ஸாலிஹ்
(2) ‘முத்துச்சுடர்’ ஹாஜி என்.டி.பாதுல் அஸ்ஹப்
(3) எஸ்.ஐ.அஹ்மத் முஸ்தஃபா
துணைச் செயலாளர்:
கூபா என்.டி.ஷெய்கு மொகுதூம்
நடப்பாண்டு வைபவ கமிட்டி உறுப்பினர்கள்:
(1) ஹாஜி எம்.ஏ.அஹ்மத் லெப்பை
(2) ஹாஜி சொளுக்கு எம்.இ.செய்யித் முஹம்மத் ஸாஹிப் (சேம்ஸா)
(3) ஹாஜி ஏ.எல்.முஹம்மத் நிஜார்
இவ்வாறாக நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஹாஃபிழ் எஸ்.ஏ.முஹம்மத் இஸ்மாஈல் நன்றி கூற, ‘முத்துச்சுடர்’ மாத இதழ் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் என்.டி.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் நுஸ்கீ மஹ்ழரீ துஆவுக்குப் பின், ஸலவாத்துடன் கூட்டம் நிறைவுற்றது.
இக்கூட்டத்தில், குருவித்துறைப் பள்ளி மஹல்லாவைச் சேர்ந்த - மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் பொதுக்குழு உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
|