தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடசென்னை மாசுகட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கந்தக டை ஆக்சைடு வாயு வெளியேறுவதால் ஏராளமானோர் உடல்நலம் பாதிக்கப்பட்டனர்.
இது தொடர்பாக ஆலையை மூட வலியுறுத்தி மார்ச் 23ம் தேதி போராட்டம் நடத்தப்பட்டது. ஆலையை மூட வலியுறுத்தி பல்வேறு தரப்புகளிலும் இருந்தும் எதிர்ப்பு வலுத்து வந்தது. இதனையடுத்து ஆலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஆர்.டி.ஓ.,விற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்நிலையில் ஆலையை மூடுமாறு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு மாவட்ட கலெக்டர் ஆசிஷ் குமார் பரிந்துரை செய்ததை அடுத்து, ஆலையை மூட மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.
ஆலையை மூடும் நடவடிக்கையில் முதல் கட்டமாக ஆலைக்கு மின் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து முற்றிலுமாக ஆலையை மூட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
4. உயிர்க்கு உலைவைக்கும் ஆலைகள்,,,,,,,,,,,,, posted byNIZAR (KAYALPATNAM)[30 March 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 26538
மாவட்ட ஆட்சி தலைவரின் இந்த நடவடிக்கை மக்களின் நியாயமான கோரிக்கைக்கு கிடைத்த அங்கீகாரமாகும்.இந்த ஆலையை மூட அரசியலுக்கு அப்பார்ட்பட்டு சுயநலமின்றி மக்களுக்காக போராடும் வை.கோபாலசாமி அவர்கள் மக்கள் மனதை வெல்வார்கள்.மனிதர்களின் உயிரோட்டமான மூச்சு காற்றை விஷமாக்கி உயிருக்கு உலைவைக்கும் இதை போன்ற ஆலைகள் மூலம் எத்தனை வசதிகள் அந்த பகுதி மக்கள் பெற்றாலும் அதனால் எந்த பலனுமில்லை.
இதை போன்றே VCM என்ற கொடிய பொருளை கத்தார்
லிருந்து இறக்குமதி செய்து பாதுகாப்பற்ற முறையில் சாலைவழியாக சாகுபுரம் கொண்டுவரும் DCW வின் மீதும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தூத்துக்குடியில் மூச்சு திணறல் ஏற்பட்டதுபோல்,DCW வின் காஸ் லீகிங் மூலம் நம் ஊரிலும் துர்நாற்றம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
5. Re:... posted bySEYED ALI (ABUDHABI)[30 March 2013] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 26540
முதலில் மூலகர்த்தாவான அந்த எல்லாம்வல்ல இறைவனுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொண்டு அவன் செயலால் இக்காரியம் நடைபெற பரிந்துரைத்த கலக்டர் ஆஷிஷ்குமார் அவர்களுக்கும் மூட உத்தரவிட்ட தமிழக அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
7. உள்ளம் உருகுதய்யா....! posted byM.N.L.முஹம்மது ரபீக், (காயல்பட்டினம்.)[31 March 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 26578
யா அல்லாஹ்! கருணையாளனே! எமது மக்களுக்கு பெரும் அச்சிறுத்தாலாக இருந்து வரும் DCW எனும் இந்த பாதக ஆலையை நிரந்தரமாக மூடச் செய்வாயாக!
உன் உன்னத ரூஹ் மூலம் ஊதி உலகிற்கு உயிருடன் அனுப்பி வைத்த ஒப்பற்ற உயிர்களுக்கு உலை வைத்து கொடிய வேதியல் விஷத்தைக் கையாளும் இந்த நாசக்கார ஆலையை முற்றிலுமாக இந்த மண்ணிலிருந்து அகற்றிட வழி செய்வாயாக!
மக்கள் நலம் காக்கும் மாவட்ட ஆட்சியர் அஷீஷ் குமார் அவர்களுக்கு உன் கருணையின் வாசலைத்திறந்து வைத்து மேலா ஹிதாயத்தைக் கொடுத்து அவரது கரங்களை மென் மேலும் வலுப்படுத்துவாயாக!
இன்ஷால்லாஹ் அடுத்தது DCW வாக இருக்க எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக!
நமதூர் ,மற்றும் நமது சுற்று வட்டார மக்கள் யாவரும் நிம்மதி பெற்று ,நோய்நொடி இன்றி வாழ , அதற்காக போராட்டம், எதிர்ப்பு , கண்டனம் என பல வழிகளிலும் முயற்சி செய்த அனைவரின் முயற்சிகளுக்கும் நிரந்தர வெற்றி கிடைக்க அந்த ரஹ்மான் நம் யாவர்களுக்கும் நல்லருள் புரிவானாக ! ஆமீன் !
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross