காயல்பட்டினம் கடற்கரையில் கடந்த சில நாட்களாக கடற்செடிகள் கரையொதுங்கி, புதர் போல காணப்படுகிறது. 25.03.2013 திங்கட்கிழமையன்று பதிவு செய்யப்பட்ட காட்சிகள்:-
குறிப்பிட்ட சில பருவங்களில் இதுபோன்று கடற்செடிகள் கரையொதுங்குவதும், கரையில் அவை காய்ந்து உலர்ந்த பின்னர் மீண்டும் கடலலை அவற்றை இழுத்துக்கொள்வதும் வாடிக்கையாகும்.
1. அமில கழிவால் ஏற்படும் தீமை என்ன...? செத்து மடியத்தான் செய்யும்...! posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[27 March 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 26501
கடற்செடிகள் - தாவரங்கள் செத்து மடிந்து கரையோரம் ஒதுங்க காரணம் என்ன...?
பல வருடங்கள் DCW தொழிற்சாலையின் அமில விஷ கழிவு கடலில் கலக்கப்பட்டு அதன் விளைவால் கடற்செடிகள் - தாவரங்கள் செத்து மடிந்து மிதக்கின்றன...
நமது பூமி நிலத்தில் ஒரு மரத்தின் அடியில் கொஞ்சம் உப்பு தண்ணீரை ஊற்றினாலே சில நாட்களில் மரம் செத்து மடியும் போது கொடிய அமில (கெமிக்கல்) கழிவை கடலில் கலந்தால் கடற்செடிகள் என்ன ஆகும்...? செத்து மடியத்தான் செய்யும்...!
இந்த ஆதார புகைப்படங்களை சுற்று சூழல் மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தலைமைக்கு அறிய செய்வது நமது கடமை... அதுவே சிறந்தது...!
கடற்கரையில் ஒதுங்கிய கழிவுகள்! குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு செய்து புகைப்படம் எடுத்து உதவிய அன்பு சகோதரர் ஹிஜாஸ் மைந்தன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் - பாராட்டுகள் - நன்றிகள்.... தொடரட்டும் உங்கள் (நமது) நகர் நல செய்தி சேவை...
2. Re:...சுத்தம் செய்யுங்க posted byarabi abdul sakkur (trichy)[02 April 2013] IP: 122.*.*.* India | Comment Reference Number: 26615
அஸ்ஸலாமு அலைக்கும்,
கடற்க்கரை குப்பையை முதலில் சுத்தம் பண்ணிட்டு அதன் பிறகு ஸ்டெர்லிட் ஆலையை பத்தி நாம பேசலாம், மீண்டும் அது காய்ந்து கடல் உள்ளே போக முன்னாடி சமுக ஆர்வலர் அதை மாநகராட்சிக்கு தெரிய படுத்தி நடவடிக்கை எடுங்க ப்ளீஸ்....
அதை இதே தலத்தில் செய்தி வந்தால் என்னை மாதிரி 1000 பேர் சந்தோசம் படுவார்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross