மருத்துவத் துறையில் உலக காயல் நல மன்றங்களை ஒருங்கிணைப்பதற்காக விவாதிக்கப்பட்டு வரும் ‘ஷிஃபா’ செயல்திட்டத்தில் இணைய தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) அமைப்பின் செயற்குழுவில் இசைவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் துணைச் செயலாளர் எம்.ஐ.அப்துல் வஹ்ஹாப் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
இறையருளால் எமது தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) அமைப்பின் செயற்குழுக் கூட்டம், 13.03.2013 புதன்கிழமை இரவு 07.45 மணியளவில், மன்றப் பொருளாளர் என்.எஸ்.ஹனீஃபா அவர்களின் இல்லத்தில், மன்ற துணைத்தலைவர் ஹாஜி டபிள்யு.எம்.ஏ.எஸ்.ஷாஹுல் ஹமீத் தலைமையில் நடைபெற்றது.
வாவு எம்.என்.காதிர் ஸாஹிப் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். என்.எஸ்.ஷேக் வரவேற்புரையாற்றினார்.
பின்னர், மருத்துவத் துறையில் உலக காயல் நல மன்றங்களை ஒருங்கிணைப்பதற்காக விவாதிக்கப்பட்டு வரும் ‘ஷிஃபா’ செயல்திட்டத்தில் இணைவது தொடர்பாக, அண்மையில் அனைத்து காயல் நல மன்றங்களின் பிரதிநிதிகள் இணையதளத்தில் SKYPE மூலமாக கலந்துரையாடுகையில் பேசப்பட்ட அம்சங்கள் குறித்து, மன்றச் செயலாளர் ஹாஜி எம்.எஸ்.செய்யித் முஹம்மத் கூட்டத்தில் விளக்கிப் பேசியதோடு, அதுகுறித்த - உறுப்பினர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமுமளித்தார்.
அதனைத் தொடர்ந்து, பின்வருமாறு தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது:-
மருத்துவத் துறையில் உலக காயல் நல மன்றங்களின் ஏகோபித்த கருத்துக்களின் அடிப்படையில் விவாதிக்கப்பட்டு வரும் ‘ஷிஃபா’ செயல்திட்டத்தில், தக்வாவும் இணைவது என்றும், அதன் நிர்வாகச் செலவினங்களில், ஏனைய சகோதர நல மன்றங்களுடன் பகிர்ந்துகொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. துணைப் பொருளாளர் எஸ்.ஏ.ஆர்.யூனுஸ் நன்றி கூற, மவ்லவீ ஹாஃபிழ் ஷாதுலீ ஃபாஸீ துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
இவ்வாறு, தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) அமைப்பின் துணைச் செயலாளர் எம்.ஐ.அப்துல் வஹ்ஹாப் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தகவல்:
கம்பல்பக்ஷ் அஹ்மத் இர்ஃபான்,
பாங்காக், தாய்லாந்து. |