காயல்பட்டினம் அருகே - காட்டு மகுதூம் பள்ளியில் அடங்கியுள்ள மஹான் முத்து மொகுதூம் ஷஹீத் மதனீ வலிய்யுல்லாஹ் அவர்களின் வருடாந்திர கந்தூரி நிகழ்ச்சிகள் 13.03.2013 அன்று துவங்கி, 25.03.2013 வரை நடைபெற்றது.
கந்தூரி விழாவை முன்னிட்டு, காயல்பட்டினம் பெரிய சதுக்கையில், 18.03.2013 திங்கட்கிழமை முதல், 23.03.2013 சனிக்கிழமை வரை, ஒவ்வொரு நாளும் இரவு 08.30 மணிக்கு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
24.03.2013 ஞாயிற்றுக்கிழமை இரவு 07.00 மணிக்கு, ஹாஜி கலீஃபா எஸ்.இ.ஷெய்கு நூருத்தீன் தலைமையில் ராத்திபத்துல் காதிரிய்யா திகர் மஜ்லிஸ் நடைபெற்றது.
மறுநாள் 25.03.2013 திங்கட்கிழமை காலை 06.00 மணிக்கு, காட்டு மகுதூம் பள்ளி மஸ்ஜித் அந்நூர் பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் கே.எஃப்.அஹ்மத் பஷீர் ஸிராஜீ தலைமையில் கத்முல் குர்ஆன் ஓதப்பட்டு, மஹான் அவர்களின் பெயரில் ஈஸால் தவாப் செய்யப்பட்டது.
அன்று மாலை நிகழ்ச்சிகளை, காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் ஆசிரியர் ஹாஃபிழ் சொளுக்கு முஹ்யித்தீன் அப்துல் காதிர் தவ்ஹீத் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். பின்னர். மஹ்ழரா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் தங்ஙள் அஹ்ஸனீ ஃபாழில் பாக்கவீ, “வலிய்யுல்லாஹ்களின் உயர் பண்புகளும், மஹான் அவர்களின் வாழ்க்கை வரலாறும்” என்ற தலைப்பில் மார்க்க சொற்பொழிவாற்றினார்.
ஹாஜி ஏ.கே.பீர் முஹம்மத் நன்றி கூற, மவ்லவீ எஸ்.டி.செய்யித் இஸ்மாஈல் மஹ்ழரீ துஆவுடன் விழா நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுற்றன. இந்நிகழ்ச்சிகளில் நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டிருந்தது. அனைவருக்கும் நேர்ச்சை வினியோகம் செய்யப்பட்டது.
விழா ஏற்பாடுகளை, காட்டு மகுதூம் பள்ளி நிர்வாக அதிகாரியான நெல்லை வக்ஃப் கண்காணிப்பாளர் மேற்பார்வையில், ஹாஜி எஸ்.டி.வெள்ளைத்தம்பி, ஹாஜி வாவு செய்யித் அப்துர்ரஹ்மான், ஹாஜி சொளுக்கு எஸ்.எஸ்.எம்.முஹம்மத் இஸ்மாஈல் என்ற முத்து ஹாஜி, ஹாஜி பிரபு எம்.ஏ.சுல்தான், ஹாஜி கே.எஸ்.எச்.மஹ்மூத் நெய்னா, விழாக்குழு உறுப்பினர்களான ஹாஜி எஸ்.எம்.உஸைர், எம்.ஜெ.செய்யித் இப்றாஹீம், ஏ.ஆர்.அஜ்மல் புகாரீ, ஹாஜி எம்.ஏ.எஸ்.ஜரூக், ஹாஜி எம்.என்.அபூபக்கர், எம்.எல்.காழி அலாவுத்தீன், எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன், எம்.என்.காஜா ஹைதர் அலீ, ஹாஜி எஸ்.எம்.ஸதக்கத்துல்லாஹ், எஸ்.எம்.இத்ரீஸ், எம்.ஓ.பிலால், ஹாஜி கத்தீபு எம்.ஷாஹுல் ஹமீத், ஹாஜி என்.எம்.அப்துல் அஜீஸ், அரபி எம்.எம்.முஹம்மத் அப்துல் காதிர், ஹாஜி எஸ்.எம்.செய்யித் இப்றாஹீம், ஹாஜி ஏ.ஆர்.அப்துர்ரஷீத் அஹ்மத், ஹாஜி வி.என்.எஸ்.முஹம்மத் முஹ்யித்தீன் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர். |