காயல்பட்டினம் சதுக்கைத் தெரு, அர்ரஹீம் மீலாது குழுவின் சார்பில், நபிகள் நாயகம் அவர்களின் பிறந்த நாள் விழா, இறைவனுக்காக உயிர் நீத்த தியாகிகள் (ஷுஹதாக்கள்) நினைவு நாள் விழா, மஹான் முஹ்யித்தீன் ஆண்டகை நினைவு நாள் விழா ஆகிய முப்பெரும் விழாக்கள், 25.02.2013 திங்கட்கிழமையன்று நடைபெற்றது.
அன்று காலை நிகழ்ச்சிகள், சதுக்கைத் தெரு ஜன்னத்துல் காதிரிய்யா பெண்கள் தைக்காவில் நடைபெற்றது. காலை 09.00 மணியளவில், கே.எஸ்.முஹம்மத் தாஹா தலைமையில் மவ்லித் மஜ்லிஸ் நடைபெற்றது.
மாலை நிகழ்ச்சிகள், சதுக்கைத் தெருவிலுள்ள பெரிய சதுக்கை வளாகத்தில் நடைபெற்றது. மாலை 05.00 மணியளவில், சிறுவர் - சிறுமியர் பங்கேற்ற சன்மார்க்க நிகழ்ச்சிகள், காயல்பட்டினம் முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரியில் பயின்று பட்டம்பெற்றோரின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது. மஃரிப் தொழுகைக்குப் பின் திக்ர் மஜ்லிஸ் நடைபெற்றது.
இஷா தொழுகைக்குப் பின், ஹாஃபிழ் தல் ஜெ.ஏ.காழி அலாவுத்தீன் கிராஅத் ஓத, அதனைத் தொடர்ந்து. காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் தங்ஙள் அஹ்ஸனீ ஃபாழில் பாக்கவீ சன்மார்க்க சொற்பொழிவாற்றினார்.
துஆ, ஸலவாத்துடன் நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுற்றன. நிகழ்ச்சி ஏற்பாடுகளை, மீலாது விழாக்குழு தலைவர் ஹாஜி எம்.எஸ்.மஹ்மூத் ரஜ்வீ, துணைத்தலைவர் ஹாஜி எம்.கே.அப்துல் ஹை உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர். |