புகழ்பெற்ற தமிழறிஞர் கவிக்கோ அப்துல் ரகுமான், 24.03.2013 ஞாயிற்றுக்கிழமையன்று, சொந்த அலுவல் நிமிர்த்தமாக காயல்பட்டினம் வந்திருந்தார்.
நகரின் புகழ்பெற்ற இடங்களை சுற்றிப்பார்த்த அவர், மாலை 05.00 மணியளவில் காயல்பட்டினம் கடற்கரைக்கு வருகை தந்தார்.
கவிக்கோ வந்திருக்கும் தகவல் கிடைக்கப்பெற்ற இலக்கிய ஆர்வலர்கள், அவரைச் சூழ்ந்து கொண்டு இலக்கியம் குறித்து அவருடன் கருத்துப் பரிமாறினர்.
காயல்பட்டினம் நகர அமைப்பையும், கடற்கரை மணப்பரப்பையும் புகழ்ந்து பேசிய அவர், கடற்கரை இந்நகர மக்களுக்கு இறைவன் வழங்கிய பொக்கிஷம் என்றும், அதனை சுவைத்து அனுபவிப்பவர்கள் பாக்கியம் பெற்றவர்கள் என்றும் கூறினார்.
சமூக ஆர்வலர் கேப்டன் அமீர் அலீ, யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த தீன், காயல் எஸ்.இப்னு ஸஊத் உள்ளிட்டோர் உடனிருந்தனர். |