காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக்கோரி, 13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீனைத் தவிர, 11ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.முகைதீன், 12ஆவது வார்டு உறுப்பினர் ஆர்.ரெங்கநாதன் ஆகியோர் தலைமையில் இதர 17 உறுப்பினர்களும், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநரிடம் (ஆர்.டி.எம்.ஏ.) 08.03.2013 அன்று மனு அளித்துள்ளதாக, இம்மாதம் 09ஆம் தேதியன்று நாளிதழ்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
அம்மனு குறித்த விபரங்கள் தற்போது கிடைக்கப் பெற்றுள்ளது. மனு விபரம் வருமாறு:-
இம்மனுவின் அடிப்படையில், வரும் ஏப்ரல் மாதம் 05ஆம் தேதியன்று நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் தலைமையில் இதற்கான கூட்டம் காயல்பட்டினம் நகர்மன்றக் கூட்டரங்கில் நடைபெறும் என அறியப்படுகிறது. |