காயல்பட்டினம் கடல் அடிக்கடி செந்நிறமாக மாறுவது வாடிக்கை. காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் டி.சி.டபிள்யு. தொழிற்சாலையிலிருந்து கடலுக்குள் திறந்துவிடப்படும் இரசாயணக் கழிவுகளே இதற்குக் காரணம் என கருதப்படுகிறது.
தற்போது கடல் தெளிவாகக் காணப்படுகிறது. 20.03.2013 அன்று 07.00 மணியளவில், காயல்பட்டினம் கடற்பரப்பில் பதிவு செய்யப்பட்ட காட்சிகள் வருமாறு:-
காயல்பட்டினம் கடற்பரப்பின் மார்ச் 19ஆம் தேதி காட்சிகளைக் காண இங்கே சொடுக்குக!
1. வான் வழி தாக்குதலாக இருக்குமோ... posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[21 March 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 26384
தற்போது கடல் தெளிவாகக் காணப்படுகிறது. (C - P)
கடல் நீரை மட்டும் பார்க்காதீர்... கடல் நீரின் அலை முடியும் ஓரமான மண்ணை பாருங்கள் முன்பு வெண்ணிறத்தில் இருந்தன பின்பு சமீப காலமாக கொடிய ரசாயன கழிவால் செந்நிறமாக மாறி அதன் இயல்பு தன்மையே மாறி விட்டது... கடல் நீரும் இன்னும் முற்றிலுமாக ரசாயன கழிவின் பிடியில் இருந்து முழுமை பெறவில்லை என்பதே எனது பார்வை...
கொடிய ரசாயன கழிவின் கடல் வழி தாக்குதல் நகர் மக்களால் தடை பெற்ற பின் தற்போது கொடிய ரசாயன கழிவின் வான் வழி தாக்குதலாக இருக்குமோ என்று நேற்று இரவு நகரில் பலரால் உணர முடிந்தது...! அச்சப்பட வைத்தது...!
இயற்க்கை வளமான இறைவன் நமக்கு தந்த கடல் வளத்தை தினமும் கண்காணிக்கும் நமது அன்பு சகோதரர்களுக்கு.. பாராட்டுகள்... தொடரட்டும் உங்கள் கண்காணிப்பு...
3. வளி மண்டல வாசலைத் திறந்தது வைத்தது யார்...? posted byM.N.L.முஹம்மது ரபீக், (காயல்பட்டினம்.)[22 March 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 26396
அடக்கி வச்ச கழிவுகளை வெளியேற்ற முடியல்லைன்னா அது காற்றாக(வாயுவாக)த் தானே போகும்? அந்த நிலையில்தான் இந்த ஆலை முக்கி முனங்கி முட்டி மோதிக் கொண்டு வருகிறது. காயலர்கள் கண் விழித்து காவலிருக்கும்போது காற்றாவது? கத்திரிக்காயாவது? ஒரு கை பார்த்து விடுவார்கள். காலை மாலை நண்பகல் நடு நிசி இப்படி கடலை படம் பிடித்து காவலிருக்கும் பட்சத்தில் கடல் தெளிவாகத்தானே இருக்கும் தமிழா?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross