காயல்பட்டினம் கடல் அடிக்கடி செந்நிறமாக மாறுவது வாடிக்கை. காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் டி.சி.டபிள்யு. தொழிற்சாலையிலிருந்து கடலுக்குள் திறந்துவிடப்படும் இரசாயணக் கழிவுகளே இதற்குக் காரணம் என கருதப்படுகிறது.
தற்போது கடல் தெளிவாகக் காணப்படுகிறது. 18.03.2013 அன்று 17.55 மணியளவில், காயல்பட்டினம் கடற்பரப்பில் பதிவு செய்யப்பட்ட காட்சிகள் வருமாறு:-
காயல்பட்டினம் கடற்பரப்பின் மார்ச் 17ஆம் தேதி காட்சிகளைக் காண இங்கே சொடுக்குக!
2. இதன் அவசியத்தை புரிந்து கொள்ளுங்கள்... posted byM.N.L.முஹம்மது ரபீக், (காயல்பட்டினம்.)[19 March 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 26357
அன்பு நண்பரே! காயல்பட்டணம் டாட் காம் மெனெக்கெட்டு தினமும் கடற்கரைக்குச் சென்று புகைப்படம் எடுப்பது வெறும் பொழுது போக்கிற்காக அல்ல! நம் வம்சாவழியை துவம்சம் செய்யும் நச்சுப்பொருள் கலந்த கழிவு நீரை கடலில் கலந்து நீலக்கடலை செங்கடலாக மாற்றி மனித வளத்தையும், கடல் வளத்தையும் சூரையாடிக் கொண்டிருக்கும் நமதூருக்கு அருகாமையில் உள்ள உயிர்க்கொல்லி ஆலையின் அட்டூழியத்தை தடுக்கும் விதமாகவும், நமதூர் மக்களின் ஆரோக்கியத்தை ஒடுக்கும் ஈனச் செயலைத் தடுத்து கண்காணிக்கும் விதமாகவும்தான் ஒவ்வொரு நாளும் கடல் காட்சியினை இத்தளம் வெளியிட்டு வருகின்றது. இப்போது தங்களின் எரிச்சல் நீங்கியிருக்கும் என நம்புகின்றேன்.
இப்புகைப்படங்களின் தொடர்ச்சியால் சமீபகாலமாக நம் கடல் தெளிவாகவும், தூய்மையாகவும் இருப்பதை கவனியுங்கள் உண்மை புரியும். ஊர்நலனில் உண்மையான அக்கறையுள்ள இத்தளத்தின் தரம் மென்மேலும் உயர துஆச் செய்யுங்கள். அல்லாஹ் நம் அனைவருக்கும் ரஹ்மத் செய்வானாக...ஆமீன்.
3. Re:... posted bySEYED ALI (ABUDHABI)[19 March 2013] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 26365
அதென்ன கடற்பரப்பின் கிழக்கு...! புரியவில்லை.வடக்கு தெற்கு என்பது புரிகிறது.கடற்ப்பரப்பின் கிழக்கே தண்ணீர்தானே இருக்கும். அது எல்லோருக்கும் தெரிந்ததுதானே.இன்னும் கிழக்கே போய்க்கொண்டிருந்தால் இலங்கை வந்துவிடும்.
Moderator: வடக்கு என்றால் கடையக்குடி, கற்புடையார் பள்ளி வட்டம் பகுதியின் படம். கிழக்கு என்றால், கடற்கரையில் பொதுமக்கள் அமர்ந்திருக்கும் பகுதி. தெற்கு என்றால் தேங்காய் பண்டக சாலைக்கு நேரேயுள்ள பகுதி.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross