தன் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகளை அதிரடியாக மாற்றி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:-
தூத்துக்குடி மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் டி.அமலிராஜன், திருச்செந்தூர் ஒன்றியச் செயலாளர் மு.ராமச்சந்திரன், ஸ்ரீவைகுண்டம் ஒன்றியச் செயலாளர் வெ.ஆறுமுகநயினார், ஸ்ரீவைகுண்டம் ஜெயலலிதா பேரவைச் செயலாளர் செ.முருகன், கோவில்பட்டி நகரச் செயலாளர் எஸ்.விஜயபாண்டியன் ஆகியோர் அவரவர் வகித்துவரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
திருச்செந்தூர் ஒன்றியச் செயலாளராக அமலி டி.ராஜன், ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளராக செ.முருகன், கோவில்பட்டி நகர செயலாளராக எஸ்.சங்கரபாண்டியன் நியமிக்கப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி:
தூத்துக்குடி ஆன்லைன் |