மருத்துவத் துறையில் உலக காயல் நல மன்றங்களை ஒருங்கிணைப்பதற்காக விவாதிக்கப்பட்டு வரும் ‘ஷிஃபா’ செயல்திட்டத்தில் இணைய காயல்பட்டினம் - சென்னை வழிகாட்டு மையம் (KCGC) அமைப்பின் அனைத்துக் குழுக் கூட்டத்தில் இசைவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:-
கூட்ட நிகழ்வுகள்:
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
காயல்பட்டினம் - சென்னை வழிகாட்டு மையம் (KCGC) அமைப்பின் அனைத்துக் குழுக்கள் கூட்டம் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 10.03.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணியளவில், ஆடிட்டர் ரிஃபாய் தலைமையில், சென்னை - சேத்துப்பட்டிலுள்ள அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது.
எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் இறைமறை வசனங்களையோதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். பிறகு பேசப்பட வேண்டிய விசயங்கள் ஒவ்வொன்றாக எடுத்துக்கொள்ளப்பட்டது.
அமைப்பின் துணை விதிகள்:
KCGCயின் துணை விதிகள் (By-Law) தயாரிப்பதற்காக அமைக்கப்பட்ட குழுவினர் தயார் செய்த By-Law கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, அதுகுறித்த விளக்கங்களை ஆடிட்டர் ரிஃபாய், எம்.எஸ்.ஸாலிஹ் ஆகியோரால் வழங்கப்பட்டது.
துணை விதிகளிலிருந்து (By-Law) சில துளிகள்...
>> தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பொறுப்புகள்.
>> இரண்டு வருடத்திற்கு ஒரு முறை தேர்தல்
>> உறுப்பினர்களின் ஆண்டுச் சந்தா ரூ.500/- மட்டும்
>> குறைந்தபட்சம் ஆண்டுக்கு ஒரு முறை பொதுக்குழு கூட்டம், நான்கு மாதங்களுக்கு ஒரு முறை நிர்வாகக்குழு கூட்டம்
>> ஏற்கனவே முறையாக சந்தா செலுத்திவரும் பழைய உறுப்பினர்கள் 4 புதிய உறுப்பினர்களை முன்மொழியும் வாய்ப்பு
இன்னும் பல...
அலுவலகத்திற்கு இடம் தேடல்:
அடுத்து, சென்னை - மண்ணடியில் KCGC அலுவலகம் அமைக்கப்படுவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் குறித்து பேசப்பட்டது. அலுவலகத் தேடலுக்கு இன்னும் சரியான விடை கிடைக்காததால் குறைந்த வாடகையில் முறையாக அலுவலகம் அமைத்திட - ஸ்மார்ட் அப்துல் காதர், குளம் இப்றாஹீம், ஆடிட்டர் ரிஃபாய் ஆகியோர் அடங்கிய மூவர் குழு நியமிக்கப்பட்டு வரும் 13-03-2013 புதன்கிழமைக்குள் மண்ணடி சென்று, தகுந்த இடத்தைக் கண்டறிய முடிவு செய்யப்பட்டது. மண்ணடியில் வசித்து வரும் உறுப்பினர்களான எஸ்.எம்.ஐ.ஜக்கரிய்யா, சித்தீக், எம்.எஸ்.சாலிஹ் ஆகியோர் மூவர்குழுவுக்குத் துணையாக இருப்பார்கள்.
‘ஷிஃபா’வில் இணைய இசைவு:
அடுத்து நமதூரில் வெகுவிரைவில் துவக்கப்படவுள்ள காயல் ஷிஃபாவில் KCGCயின் பங்களிப்பை எவ்வாறு அமைத்துக்கொள்வது என்பது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. காயல் ஷிஃபாவின் தற்காலிக குழுவால் (Ad-hoc Committee) சமீபத்தில் நடத்தப்பட்ட மெய்நிகர் (Virtual Meeting through Skype) கூட்டத்தில் அனைத்துலக காயல் நல மன்றங்களின் பிரதிநிதிகள் பங்கேற்பில் நடைபெற்ற கலந்துரையாடலில் KCGCயின் பிரதிநிதியாக கலந்துகொண்ட ஷமீமுல் இஸ்லாம், காயல் ஷிஃபா உறுவாக்கப்படுவதற்கான அவசியங்கள், நோக்கம், பயன்பெறுவோர் உள்ளிட்ட விசயங்கள் குறித்து பேசப்பட்ட கருத்துக்களை முன்வைத்து நமது பங்களிப்பை அதனுடன் எப்படி அமைத்துக் கொள்வது என்பது பற்றியும் கருத்து கேட்டார்.
தேவையான ஐயங்களுக்கு தெளிவுபெற்ற ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் KCGC-யும் மருத்துவ உதவிகளுக்காக காயல் ஷிஃபாவுடன் இணைந்து செயல்படுவது எனவும், அதன் ஆண்டு செலவீனங்களுக்கான பொருளாதார பங்களிப்பை KCGC- யும் வழங்குவது எனவும் மேலும் அதன் தற்காலிகக் குழுவின் அடுத்த நிகழ்வுகளிலும் ஷமீமுல் இஸ்லாம் பங்கேற்பார் என்றும் ஒப்புதல் வழங்கினர்.
அடுத்த பொதுக்குழு:
பிறகு அடுத்த பொதுக்குழுவிற்கான தேதி பற்றி பேசப்பட்டது. ஏற்கனவே முடிவெடுத்த படி, இன்ஷா அல்லாஹ் வரும் ஏப்ரல் 14ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை மதிய உணவுடன் மண்ணடியில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
மேலும் பொதுக்குழுவுக்கு முன்னரே KCGC-யை அரசுப் பதிவு செய்வதென்றும், அதன் புதிய நிர்வாகக்குழுவைத் தேர்ந்தெடுப்பதுடன் அதிலிருந்து தலைவர், செயலாளர் உள்ளிட்ட அலுவலகப் பொறுப்பாளர்களையும் தேர்ந்தெடுப்பது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
நிர்வாகப் பொறுப்புகளுக்கான தேர்தலை, நமது ஊருக்கும், KCGC-க்கும் தொடர்பில்லாதவரான - பெங்களூரில் உள்ள திருக்குர்ஆன் வாசகர் வட்டத்தின் செயல்வீரரான சாதிக் பாஷா B.E., M.B.A., நடத்தித் தருவதற்கு இசைந்துள்ளார்.
இறுதியாக ளுஹ்ர் தொழுகை ஜமாஅத்துடன் நடைபெற்று மதிய உணவுடன் கூட்டம் நிறைவடைந்தது. அல்ஹம்துலில்லாஹ்.
இவ்வாறு, காயல்பட்டினம் - சென்னை வழிகாட்டு மையம் (KCGC) அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |