மருத்துவத் துறையில் உலக காயல் நல மன்றங்களை ஒருங்கிணைப்பதற்காக விவாதிக்கப்பட்டு வரும் ‘ஷிஃபா’ செயல்திட்டத்தில் இணைய அமீரக காயல் நல மன்ற செயற்குழுவில் இசைவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் துணைத்தலைவர் சாளை ஷேக் ஸலீம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
துபை காயல் நல மன்ற செயற்குழு கூட்டம் அல்லாஹ் அருளால் 23/02/2013 அன்று மன்றத்தின் தலைவர் ஆடிட்டர் ஜெ.எஸ்.ஏ.புஹாரீ அவர்கள் வில்லாவில் வைத்து சிறப்பாக நடைபெற்றது. அன்று எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள் பின்வருமாறு:-
தீர்மானம் 1 - ‘ஷிஃபா’வில் இணைய இசைவு:
துபை காயல் நல மன்றம் முன்னோடியாக மைக்ரோ காயல் நிறுவனர்களிடம் வலியுறுத்தி வந்துள்ள "ஒன்றிணைந்த மருத்துவ உதவிக் குழுமம்" ஒன்றை தாயகத்தில் நிறுவி எல்லா காயல் நல மன்றங்களின் மருத்துவ உதவிகளை ஓர் முனைப்படுத்தவும், தேவை உள்ளோருக்கு தாராளமாய் உதவவும் வழிவகுக்கும் திட்டத்தை செயல்முறைப்படுத்தும் ‘ஷிஃபா’ (SHIFA) அமைப்பை உளமார ஆதரிப்பது என்றும், SHIFA அமைப்பின் நிர்வாக செலவினங்களை ஏனைய மன்றத்தினருடன் பகிர்ந்து கொள்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 2 – காயலர் தினம்:
மன்றம் வழமைபோல் நடத்தும் "காயலர் தினம் 2013" இம்மாதம் 29 ஆம் தேதி நடத்துவது என்றும், இந்நிகழ்வுகளை செம்மை படுத்த துணைக்குழுக்கள் அமைக்கப்படவும் தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 3 – வெள்ளி விழா:
இன்றைய துபை காயல் நல மன்றம், ஆரம்பத்தில் அமீரக காயல் நல மன்றமாக ஆரம்பிக்கப்பட்டு இருபத்தைந்து ஆண்டுகள் நிறைவு பெற்றதை நினைவுகூரும் முகமாக இந்த ஆண்டு வெள்ளி விழா ஆண்டாக மிக சிறப்பாக கொண்டாடவும், வெள்ளிவிழா ஆண்டு சிறப்பு மலர், இந்த ஆண்டின் பொதுக்குழு கூட்டம் விமரிசையாக நடாத்தவும் தீர்மானிக்கப்பட்டது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சில தவிர்க்கவியலாத காரணங்களால் இத்தகவல்களை தாமதமாக அளித்தமைக்கு வருந்துகிறோம்.
இவ்வாறு, துபை காயல் நல மன்ற துணைத்தலைவர் சாளை ஷேக் ஸலீம் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார். |