காயல்பட்டினம் சமுதாயக் கல்லூரியில் ஆண்டு விழா மற்றும் பட்டமளிப்பு விழா நடைபெற்று முடிந்துள்ளது. இதுகுறித்து, கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:-
காயல்பட்டினம் சமுதாயக் கல்லூரி நான்காவது ஆண்டு பட்டமளிப்பு விழா மற்றும் ஐந்தாவது ஆண்டு கல்லூரி நாள் விழா ஆகியன சிறப்பாக நடைபெற்றது.
மாணவி கே.எம்.செய்து ராபியா கிராஅத் ஓதி விழாவை துவக்கி வைத்தார். எஸ்.எம்.பி. சமீனா யாஸ்மீன் அனைவரையும் வரவேற்று பேசினார். நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட முஸ்லீம் பெண்கள் நலச்சங்க பொதுச் செயலாளர் ஜனாபா அ.வஹிதா அவர்கள் தலைமை தாங்கி, ஃபேஷன் டிசைன் கோர்ஸ் பயின்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பொருளாதாரத்தில் பின் தங்கிய 4 மாணவிகளுக்கு தனது சார்பிலும், எல்.கே.மேனிலைப்பள்ளி உதவிச் செயலர் ஜனாப் ஹாஜி எஸ்.எம்.எம்.சதக்கத்துல்லா அவர்கள் சார்பிலும் இலவச தையல் இயந்திரம் வழங்கி தலைமை உரையாற்றினார்.
நிகழ்ச்சிக்கு ஜனாப் வட்டம் ஹசன் மரைக்கார், கபீர் ஹாஜி, அஷ்ரப் அலி, பாதுஷா, முத்து ஆலிம், எஸ்.எம்.செய்தகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவிற்கு வாவு வஜீஹா மகளிர் கல்லூரியின் வணிக மேலாண்மை துறையின் தலைவர் ஜனாபா எஸ்.ஏ.ரஹ்மத் ஆமினா பேகம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பட்டமளிப்பு விழா பேருரையாற்றினார்.
அதனை தொடர்ந்து கல்லூரியின் செய்தி மடலை சிறப்பு விருந்தினர் வெளியிட முதல் மலரை விழாவின் தலைவர் ஜனாபா அ.வஹிதா பெற்றுக் கொண்டார். அதன் பின்னர் கலை இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கல்லூரி பற்றிய விளக்கங்கள் அடங்கிய பவர் பாய்ண்ட் ப்ரசென்டேஷன் காண்பிக்கப்பட்டு அதற்கு கல்லூரி முதல்வர் ஆசிரியர் எம்.ஏ.புகாரி விளக்கமளித்தார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி ஆட்சிக்குழு ஆலோசகர் ஜனாப் ஆசிரியர் கே.மீரான் அலி, எம்.என்.ஷாநவாஸ், ஆசிரியர் கே.எஸ்.சதக்கத்துல்லா மற்றும் ஆசிரியைகள், நாட்டு நலப்பணித் திட்ட (என்.எஸ்.எஸ்.) மாணவிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
இறுதியில் கல்லூரியின் துணை முதல்வர் திருமதி. ஆர்.கோகிலா நன்றி நவிழ நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவு பெற்றது அல்ஹம்துலில்லாஹ்.
இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |