சஊதி அரபிய்யா - ரியாத் காயல் நல மன்றத்தின் உறுப்பினர்கள் திரளாகப் பங்கேற்ற பொதுக்குழுவில், மன்றத்தின் புதிய இலட்சினை வெளியிடப்பட்டதுடன், மருத்துவத் துறையில் உலக காயல் நல மன்றங்களை ஒருங்கிணைப்பதற்காக விவாதிக்கப்பட்டு வரும் ‘ஷிஃபா’வில் இணையவும் இசைவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
எல்லாம்வல்ல அல்லாஹ்வின் திருவருளால் எமது ரியாத் காயல் நற்பணி மன்ற 45ஆவது பொதுக்குழுக் கூட்டம் 08.03.2013 வெள்ளிகிழமையன்று மஃரிப் தொழுகைக்கு பின் கிளாசிக் ரெஸ்டாரென்ட் பார்ட்டி ஹால், பத்ஹா – ரியாதி-ல் M.A. ஷெய்கு தாவூத் இத்ரீஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
ஹாபிழ் K.B. செய்யிது அஹ்மது அவர்கள் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கிவைக்க மன்ற உறுப்பினர் நயீமுல்லாஹ் வந்தோரை வரவேற்றார். நிகழ்ச்சிகளை P.S.J. ஜைனுல் ஆப்தீன் ஒருங்கிணைத்தார். இன்னிசைத் தென்றல் ஜனாப் எஸ்.எச்.ஷைக் அப்துல் காதர் அவர்கள் இனிமையான பாடல் ஒன்றை பாடி அனைவரையும் மகிழ்வித்தார்.
தலைமையுரை:
அதனைத் தொடர்ந்து, கூட்டத் தலைவர் M.A. ஷெய்கு தாவூத் இத்ரீஸ் ஸதக்காவின் சிறப்புகள் பற்றி சீரிய முறையில் நயம்பட தனதுரையில் எடுத்துரைத்தார். மேலும், ஊரிலிருந்து உதவி கோரி வரும் விண்ணப்பங்களை மன்ற உறுப்பினர்கள் மின்னஞ்சல் மூலம் விரைவாக பரிசீலிப்பதால் பயனீட்டாளர்கள் உரிய நேரத்தில் பயனடைகிறார்கள் என்றும் ஆகையால், இச்சேவை இறைவனின் பொருத்தத்தை நாடி தோய்வின்றி நடந்தேற வேண்டும் என்று கோரினார்.
தலைவர் உரை:
இதனைத்தொடர்ந்து மன்றத் தலைவர் M.N. மின்ஹாஜ் முஹ்யித்தீன் வந்தோரை வரவேற்றார். புதிய காயல் நலமன்றம் பல உருவாகி வருவது மகிழ்ச்சி அளிப்பதாகவும், மருத்துவம், கல்வி மற்றும் சிறுதொழில் ஆகியவற்றில் நம்முடையச் சேவை தொடரவேண்டும் என்றுக் கூறினார்.
செயலாளர் உரை:
S.A.T. முஹம்மது அபூபக்கர் அவர்கள் பேசுகையில், அமைப்பினரின் முழு ஈடுபாடே வெற்றிக்கு காரணம் என்றும் இரக்கச் சிந்தனையும், உதவும் மனப்பான்மையும், தம்மை வளர்த்தவர்களை கண்ணியப்படுத்துதல் ஆகியவற்றை நாம் கடைப்பிடித்தால் இறைவன் மென்மேலும் பரக்கத் செய்வான் என்று அறிவுறுத்தினார்.
நிதிநிலை அறிக்கை:
மன்றத்தின் நிதிநிலை அறிக்கையை மன்ற பொருளாளர் A.T. சூஃபி இபுறாஹீம் சமர்ப்பித்தார். மேலும், 2012 ஆம் ஆண்டு, மொத்தம் ரூ. 10,10,850 நிதியுதவி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
ரமழான் உணவு திட்டம்:
ரமழான் உணவு திட்டம் பற்றி உதவி பொருளாளர் Y.A.S. ஹபீப் முஹம்மது முஹ்ஸின் கூறுகையில், கடந்த வருடம் 53 குடும்பங்கள் பயன் அடைந்ததாகவும் மேலும் இவ்வருடம் பயனீட்டாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உறுப்பினர்கள் முன் வர வேண்டும் என்றும் இதற்காக குறைந்தபட்ச பங்காக செயற்குழு உறுப்பினர்களுக்கு 150 ரியால் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு 50 ரியால் என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
ஷிஃபா பற்றிய விளக்கம்:
மருத்துவத் துறையில் உலக காயல் நல மன்றங்களை ஒருங்கிணைப்பதற்காக விவாதிக்கப்பட்டு வரும் ‘ஷிஃபா’ செயல்திட்டத்தினை மன்றத் துணைத்தலைவர் A.H. முஹம்மது நூஹ் விரிவாக விளக்கி ரியாத் காயல் நற்பணி மன்றம் அதில் இணைவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
கருத்துரை:
பின்னர்,உறுப்பினர் ஆலிம் மக்கி அஹ்மது சாஹிப் மற்றும் சமூக சேவகர் லக்கி ஷாஜஹான் இம்மன்றத்தின் சேவைகள் பெரிதும் மகிழ்ச்சி அளிப்பதாதகவும் மேலும், லக்கி ஷாஜஹான் இம்மன்றத்தில் தன்னையும் ஒரு உருப்பினராக சேர்த்துக்கொள்வதில் பெருமை அடைவதாகவும் தனது கருத்துரையில் தெரிவித்தார்.
வாழ்த்துரை:
அதன் பின், பஃருத்தீன் (எ) இப்னு ஹம்தூன், லால்பேட்டை S.M. முஹம்மது நாஸர் மற்றும் M.A. ஆதம் அபுல்ஹஸன் ஆகியோர் வாழ்த்துரை வழங்க P.M.S.ஷொய்கு அலி நுஸ்கி கவிதை நயமான தமது வாழ்த்துரையால் அனைவரையும் மகிழ்வித்தார்.
தொகுப்புரை:
மன்ற ஆலோசகர், M.E.L. செய்யிது அஹ்மது நுஸ்கி தமது தொகுப்புரையில்,தற்போதைய நகராட்சி தலைவி மற்றும் உறுப்பினர்கள் ஊர் நலனை கருத்தில் கொண்டு சமாதான குழுவின் அறிக்கையை ஒரு மனதாக ஏற்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.
வேலைக்காக வெளிநாடு வருபவர்கள், தான் வர இருக்கும் நிறுவனத்தைப் பற்றி இங்கு உள்ளவர்கள் மூலம் தீர விசாரித்து வருவதன் மூலம் எதிர்பாராத ஏமாற்றங்கள் தவிர்க்கப்படலாம் என்று ஆலோசனை வழங்கினார்.
புதிய இலச்சினை வெளியீடு:
மன்றத்தின் புதிய இலச்சினையை மன்றத் தலைவர் M.N. மின் ஹாஜ் முஹ்யித்தீன் மற்றும் செயற்குழு உறுப்பினர் S. சித்தீக் ஆகியோர் வெளியிட மன்றத் துணைத்தலைவர் A.H. முஹம்மது நூஹ் மற்றும் P.M.S. லெப்பை பெற்றுக்கொண்டார்கள்.
சிறப்பு விருந்தினர் உரை:
Budget Rent-a-Car-ன் மண்டல மேலாளர் ஸலாவுத்தீன் குறைஷி அவர்கள் கூறுகையில், பிறரின் தேவைகளை நிறைவேற்றக் கூடி இருக்கும் இக்கூட்டத்தில் கலந்துக் கொள்வதில் ஆனந்தம் அடைவதாகவும் தங்களின் ஒவ்வொரு ரூபாய் தானமும் அல்லாஹ்விடம் உங்களுக்கு நற்கூலியைப் பெற்றுத் தரும் என்றார்.
சுழற்சி முறை சொல் அரங்கம்:
குறுகிய நேரத்தில் தலைப்பு கொடுக்கப்பட்டு இரண்டு நிமிடம் பேசும்படியான நிகழ்ச்சியினை சகோதரர் ஷபீ அவர்கள் நடத்தினார்.இதில் கலந்து கொண்ட பத்து உறுப்பினர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
சிறப்புக் குலுக்கல்:
மன்ற உறுப்பினர்களுக்கான சிறப்புக் குலுக்கலில் பத்து நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
நன்றியுரை:
நிறைவாக செயற்குழு உறுப்பினர்கள் V.M.A மொஹ்தூம் அமீன் நன்றியுரை ஆற்ற P.S.J.ஜைனுல் ஆப்தீனின் இறைப்பிரார்த்தனைக்குப் பின் இரவு விருந்துடன் நிகழ்ச்சிகள் நிறைவுபெற்றது.
இக்கூட்டத்தில், மன்றத்தின் நிர்வாகிகள், சிறப்பு விருந்தினர்கள், சிறப்பழைப்பாளர்கள், உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
இவ்வாறு, ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
ரியாத் காயல் நற்பணி மன்றம் சார்பாக,
நோனா செய்யித் இஸ்மாஈல் |