காயல்பட்டினம் சதுக்கைத் தெரு - பெரிய சதுக்கை வளாகத்திலியங்கி வரும் அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றத்தின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு, பல்வேறு போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டு, சில போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. கடைசியாக, 15 வயதுக்குட்பட்ட சிறுமியருக்கான பேச்சுப்போட்டி நடைபெற்று முடிந்துள்ளது.
இதுகுறித்து, அவ்வமைப்பின் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:-
அஸ்ஸலாமு அலைக்கும்.
நமது அல்-அமீன் இளைஞர் நற்பணி மன்றத்தின் வெள்ளி விழா நிகழ்வுகளின் மூன்றாவது போட்டியான 15 வயதிற்குட்பட்ட மாணவியருக்கான பேச்சுப்போட்டி, 17.03.2013 ஞாயிற்றுக்கிழமை மதியம் 02.00 மணியளவில், காயல்பட்டினம் சதுக்கைத் தெருவிலமைந்துள்ள ஜன்னத்துல் காதிரிய்யா பெண்கள் தைக்காவில் நடைபெற்றது.
கிராஅத்துடன் துவங்கிய இப்போட்டியில், நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் 61 மாணவியர் கலந்துகொண்டு, தங்கள் பேச்சுத்திறனை அழகுற வெளிப்படுத்தினர்.
பின்னர், போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் முதற்கட்ட பரிசாக 6 கோப்பைகளைக் கொண்ட bowl set வழங்கப்பட்டது. வெற்றிபெற்ற மாணவியருக்கான வியத்தகு பரிசுகள் வெள்ளி விழாவின்போது அறிவிக்கப்பட்டு வழங்கப்படவுள்ளது.
ஃபாத்திஹா துஆவுடன் இந்நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே - அல்ஹம்து லில்லாஹ்!
வெள்ளி விழாவின் அடுத்த நிகழ்வாக, 15 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான வினாடி-வினா இறுதி சுற்றுப்போட்டி, 15 வயதுக்குட்பட்ட மாணவியருக்கான வினாடி-வினா தகுதி சுற்றுப்போட்டி ஆகிய போட்டிகள், இன்ஷாஅல்லாஹ் - 24.03.2013 ஞாயிற்றுக்கிழமை மாலை 04.30 மணிக்கு நடைபெறும்.
இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |