செய்தி: நகர்மன்ற நடவடிக்கைகளில் தனிநபர் தலையீட்டை ஒழிக்க வேண்டும்! நகராட்சி நிகழ்வுகள் விளக்கப் பொதுக்கூட்டத்தில் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் பேச்சு!! (அசைபடங்களுடன்!!!) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் வீர விளக்கவுரை posted byS S Abdullahss (Dubai)[22 March 2013] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 26398
தலைவி அவர்கள் "நான் நான்" என்று பேசியதில் எந்த தவறும் இல்லை. காரணம் அவர்கள் எந்த கட்சி சார்பிலோ அமைப்பு சார்பிலோ வெற்றிபெறவில்லை. தனி நபராக நின்று மகத்தான வெற்றி பெற்ற சாதனையாளர். ஊர் பெரியவர்களின் ஆலோசனைகளுக்கு மதிப்பு கொடுக்காமல் வேட்பாளராக நின்றதால் அன்று நான் ஆதரிக்கவில்லை. ஆனால் இன்று தனி மனிதராக அதுவும் பெண்ணாக இருந்து உறுப்பினர்களின் துளி ஆதரவும் இல்லாமல் நகராட்சி தலைவியாக செயல்படும்போது 'நான்' என்று தானே சொல்லமுடியும். 'நாம்' என்று சொல்வதானால் இந்த கூட்டத்திற்கே அவசியம் இல்லையே.
அடுத்து தலைவர் மீது நம்பிக்கை இல்லையாம்..... எத்தனை உறுப்பினர் மீது வோட்டு போட்ட மக்களுக்கு நம்பிக்கை உள்ளது என்பதை அவரவர் மனசாட்சியிடம் கேட்டுக்கொள்ளட்டும். மேலும் நம்பிக்கை இல்லை என்பதற்கு எந்தவித ஊழல்/கொள்ளை குற்றமும் அவர் மீது சொல்லப்படவில்லை. எனவே நம்பிக்கை இல்லாதீர்மானம் தோற்றுவிட்டது மக்கள் மன்றத்தில்.
இரண்டு மணிநேர பேச்சில் "உண்ணாவிரத' பேச்சை பெரிய விவாதமாக பேசுகிறோம். இவ்வளவு மார்க்க பற்றுதலோடு பேசும் நம்மில் பலர் நம் உயர் அதிகாரிகளுக்கு கையாலோ or வாயாலோ வணக்கம் or good morning சொல்லுகிறோம். ஆனால் நிச்சயம் தவிர்க்க வேண்டிய ஒன்றுதான். மாற்று கருத்து இல்லை. அதுபோல் தலைவி அவர்களும் இந்த அழகான தெளிவான விளக்க உரையில் உண்ணாவிரத வார்த்தையை தவிர்த்திருக்கலாம்.
இவ்வளவு நிர்வாக தூய்மை, மார்க்க நெறி பேசும் நம் தலைவியிடம் இனி அரசியலில் சேர்ந்தபின் நேர்மையையும் நியாயத்தையும் நாமும் எதிர்பார்க்க முடியாது அவர்களாலும் காப்பாற்ற முடியாது. அரசியல் ஒரு மகா சாக்கடை.
தனி நபர் ஆதிக்கம் ஒழிக்கப்படவேண்டும். இல்லையேல் மதுரை போல் ஆகிவிடும். எல்லாம் வல்ல அல்லாஹ் நமதூரையும் மக்களையும் பாதுகாத்து ஒற்றுமையுடன் வாழவும் ஊருக்கு பல நன்மைகள் நடக்கவும் அருள் புரிவானாக ஆமீன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross