‘‘தர்மம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர்காக்கும்”, posted byM.N.L.முஹம்மது ரஃபீக் (அபு ரெஸ்மியா) (புனித மக்கா)[13 February 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2640
ஜித்தா காயல் நல மன்றத்தின் செயல் பாடுகள் மிகவும் பயனுள்ளதாக இருந்து வருவதைப் பாராட்டியே ஆக வேண்டும்.ஆறு மாதங்களுக்கோர் முறை நடக்கும் பொதுக் குழுவின் அரங்க வாடகை, அருசுவை உணவு(Dinner Buffet), மற்றும் மாதந்தோறும் நடத்தும் செயற்குழு கூட்டத்தின் இடவசதி, தேனீர் விருந்து இவைகளுக்குத் தேவையான செலவுகளை உறுப்பினர்களின் சந்தாவிலிருந்து அவர்கள் ஒரு நயா பைசாக்கூட எடுப்பதில்லை! மாறாக ஒவ்வொரு நிர்வாகிகளும் தாமே முன் வந்து அதற்குரிய செலவுகளைப் பொறுப்பேற்றுக் கொள்வது தான் வழக்கம். இது போன்ற நல்ல எண்ணம் கொண்டவர்கள் இருப்பதால்தான் அந்த அமைப்பு துவங்கியது முதல் 5,6, ஆண்டுகளுக்குள் சுமார் 37,00000.00(முப்பத்தியேழு இலட்சம் ரூபாய்) நமதூரின் நலிந்தோர் தம் நன்மைக்காய் கொடுத்துப் பயனடையச் செய்துள்ளனர்.
குறிப்பாக அவர்களுக்கிடையில் பதவி, கொள்கை, கருத்து வேறுபடு, என்றில்லாமல் ஊர், மற்றும் சமுதாய மேம்பாடு, தொலைநோக்க சிந்தனை ஆகியவற்றை மட்டுமே மனதில் கொண்டு திறம்படச் செயலாற்றி வருவது குறிப்பிடத்தகது.
அவர்களின் தூய சேவை மென்மேலும் சிறந்து விளங்க மனதார வாழ்த்துகின்றேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross