செய்தி: நகராட்சி நிகழ்வுகள் விளக்கப் பொதுக்கூட்டத்தில் நகர்மன்றத் தலைவர் ஆற்றிய உரைக்கு 17ஆவது வார்டு உறுப்பினர் விளக்கம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Different Kind of Oath posted byAbdul Wahid S. (Kayalpatnam)[22 March 2013] IP: 123.*.*.* India | Comment Reference Number: 26414
"...ஆனால் வடசென்னையில் ஒரு தனிநபர் ரூம் போட்டு, எங்களில் சில உறுப்பினர்களைத் தங்க வைத்து ………. படம் எடுத்து பிளாக்மெயில் பண்ண திட்டம் போட்டிருந்தார் என்றும், அல்லாஹ்வின் கருணையால் அவர்களை தாங்கள் (தலைவி) பாதுகாப்பாக அழைத்து வந்ததாகவும் அவதூறு பிரச்சாரம் செய்தீர்கள்". (C & P)
1) விளக்கம் என்று துண்டு பிரசுரம் வெளியிட்டு விட்டு அதில் எந்த விளக்கமும் இல்லாமல் கேள்விகள் மட்டுமே இடம் பெற்றுள்ளது.
2) ஒரு "சதி" (சம்பவம்) நடக்கவிருந்ததாக தலைவி சொல்கிறார். இந்த துண்டு பிரசுரத்தில் அப்படி ஒரு சதி நடந்ததா இல்லையா என்பது கூட தெரிவிக்கப்படவில்லை. மாறாக இது சம்பதமாக கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. சதியின் சாராம்சம் தெரியாதவர்(கள்) எப்படி ஒரு பேச்சை "அவதூறு" என்று கூற முடியும். அப்படி ஒரு சதி செய்யப்படவில்லை என்று (முடிந்தால் ஆதாரத்துடன்) நிரூபித்துவிட்டு (நிரூபிக்க முடியாது என்பது தனி விஷயம்) தலைவியின் பேச்சை "அவதூறு" என்று சொல்லியிருந்தால் அதை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்.
3) இந்த தேதியிலிருந்து இந்த தேதி வரை நான் /நாங்கள் தலைவியுடன்தான் இருந்தேன் / இருந்தோம் என்று இந்த
கவுன்சிலர் தேதி குறிப்பிட்டதன் மூலம் அவர் சொல்லவருவது அப்படி ஒன்றும் (சதி) நடக்கவில்லை என்று.
யாருக்கு எதிராக "சதி" நடக்கிறதோ அது அவர்(கள்) முன்னிலையில் நடக்காது. அவ்வாறு நடந்தால் அதற்குப் பெயர் "சதி" இல்லை. ஆதலால் சதி நடந்த தேதி, நேரம் மற்றும் இடம் Immaterial to the subject.
4) 10 நபர்களில் சிலரை மையப்படித்திதான் "சதி" செய்யப்பட்டதாக தலைவி கூறினார். அந்த "சிலர்" யாரென்று குறிப்பிட்டு கூறவில்லை. இந்த சதியைப் பற்றிய விஷயம் தலைவி வெளியே சொல்லும் வரை இவர்களுக்கும் / பொதுமக்களுக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. முறைப்படி பார்த்தால் 10 நபர்களும் சேர்ந்து இந்த கேள்வி கணைகளைத் தொடுத்திருக்க வேண்டும். ஒருவர் மட்டும் தொடுத்திருப்பது கீழ்க்கண்ட சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
a) மற்ற 9 நபர்களுக்கும் இவர் கேட்ட கேள்விகளுக்கு பதில் தெரியும் போலும்?
அல்லது
b) (ஒரு வேலை இவர்களுக்கு தெரியாத பட்சத்தில்) மற்ற 9 நபர்களும் இவரைப் போல தனித்தனியாக துண்டு பிரசுரம் வெளியிடப் போகிறார்களா? அல்லது (மக்கள் ஆவலுடன் எதிர்பார்துக்கொண்டிருகின்ற) மேடை போட்டு பதில் கொடுக்கப் போகிறார்களா?
அல்லது
c) "எங்க அப்பன் குதிருக்குள் இல்லை " என்று சொல்லாமல் இவர் சொல்லுகிறாரா ?
5) ஒரு (சதித்) திட்டம் தீட்டுவதற்கு (புத்தி சுவாதீனமுள்ள) குறைந்தது இரண்டு நபர்கள் தேவை. அந்த சதித்திட்டத்தில் ஈடுபட்டவர்(கள்) அதை சொல்லாமல் அத்திட்டம் வெளியாகாது. (Except with the help of Technology). தலைவி தன்னுடைய உரையில் தனக்கு அச்சதிதிட்டத்தை யார் அறிவித்தார் அல்லது யார் யாரெல்லாம் ஈடுபட்டனர் என்று தெரிவிக்கவில்லை. அந்த தகவல் தெரியாதவரை அவருடைய கூற்றை இவர்கள் நினைத்தாலும் மெய்ப்படுத்தவோ அல்லது இவர் விரும்பியபடி
பொய்யக்கவோ முடியாது.
6) தலைவி இந்த சதி விசயத்தில் குற்றம் சுமத்துவது நகராட்சி
உறுப்பினர்(கள்) மீதல்ல. ஒரு தனிநபர் மீதுதான். அவ்வாறிருக்கையில் உறுப்பினர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்காமல் தனி நபர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மறுக்கும் விதமாக கேள்வி(களை) தொடுத்திருப்பது தலைவியின் மற்றதொரு (முக்கியமான) குற்றச்சாட்டான தனி நபர் தலையீட்டை உறுதிபடுத்துகிறது என்பதை கூட அறியாமல் வெளியிடப்பட்ட துண்டுப் பிரசுரம்.
இவருடைய விளக்கத்தின் தரம் புஸ்வானம்" ஆகிவிட்ட நிலையில் இவர்(கள்) சுமத்திய குற்றச்சாட்டு(கள்) தரம் எப்படி இருக்கும் என்பதை பாமரனும் விளங்கமுடியும்.
சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பது மட்டுமல்ல தன்னுடைய கையை தானே அறுதுக்கொள்வதும் தற்கொலைக்குச் சமம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross