செய்தி: ஏப். 05 அன்று நகர்மன்றத் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து முடிவு செய்யும் கூட்டம்! நகர்மன்ற அங்கத்தினருக்கு நக. நிர். மண்டல இயக்குநர் அழைப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...நல்ல நாளில் நம்பிக்கை இல்லை posted bymackie noohuthambi (kayalpatnam)[23 March 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 26431
வெள்ளிக் கிளமைதான கிடைத்தது இந்த அதிகாரிகளுக்கு, இந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை பற்றி முடிவு செய்ய?
முஸ்லிம்களுக்கு செய்யிதுள் அய்யாம் என்று நாட்களிலே சிறந்த நாள். எல்லோரும் முன்கூட்டியே சென்று முன் வரிசையில் இருந்து திருக்குர்ஆன் ஓதுவது, தஸ்பீஹ் செய்வது, து ஆ க்கள் அவ்ராதுகள் ஓதுவது. இம்மை மறுமை நலனுக்கு, ஊர் நலனுக்கு அல்லாஹ்விடம் பிரார்த்திக்கும் ஒரு இனிய பொறுமதியான வேளையில், ஏற்கெனெவே நாறிக் கொண்டிருக்கும் நகர் மன்றத்தில் கூடி இந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை விவாதிக்க வேண்டுமா, வேறொரு நாளை தேர்ந்தெடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜமாத்தார்கள் உடனடியாக ஒரு தந்தி கொடுக்க வேண்டாமா? 10.30க்கு ஆரம்பித்து அரை மணி நேரத்தில் ஒற்றை வரி தீர்மானமா எடுக்கப் போகிறார்கள்.
மாற்று மதத்தினரும் வெள்ளிக் கிழமையை புனித நாளாகவே கருதுகிறார்கள். இதனால் எதனை பேருடைய தொழுகைகள் பாதிக்கப்படும். தயவு செய்து நமதூரில் உள்ள 8 இணையதளங்களும் இதை எதிர்த்து குரல் எழுப்பி, இந்த நாளை மாற்ற நடவடிக்கை எடுங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
மற்றப்படி ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன என்ற கதைதான். அல்லாஹ்வின் நாட்டப் படியே எல்லாம் நடக்கும். உள்ளங்களை இணைக்க வல்லவன் அவன் ஒருவனே. நபியே, நீங்கள் இந்த உலகிலுள்ள எல்லாவற்றையும் செலவு செய்தாலும் அவர்கள் உள்ளங்களை ஒன்றிணைக்க முடியாது. அதை செய்ய நம்மால்தான் முடியும் என்று அல்லாஹ் தெளிவாகவே சொல்லிவிட்டான்.
இன்னொரு தேர்தலுக்கு மக்கள் தயாராகிறார்கள். நான் மக்களவை தேர்தலை சொல்கிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross