Re:... posted bymackie noohuthambi (kayalpatnam)[27 March 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 26493
நன்றாக தூங்குபவனை எழுப்பி, சோறில்லை, படுத்துக்கொள் என்று சொன்னானாம். அப்போதுதான் அவனுக்கு பசிக்க ஆரம்பித்தது, இனி என்னாண்டு தூங்குவான்.
ஒரு புகழ் பெற்ற கவிஞர், அதுவும் கயல்பட்டினத்தின் சிறப்பை பற்றி உலகதமிழ் மாநாட்டிலே ஐக்கிய விளையாட்டு சங்கத்தில் கவிதை பாடியது, இன்றும் எனக்கு நினைவில் இருந்து வரும் வைர வரிகளுக்கு சொந்தக்காரர்.
"நான் காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்... கிடைத்துவிட்டது, புறப்பட்டு விட்டேன்" என்று போய்விட்ட பிறகு அந்த ஆவலை தூண்டி இங்கு செய்தி வெளியிட்டிருக்கிறீர்கள். இன்றைய ஊர் நிலை பற்றி அவரிடம் ஒரு கவிதை எழுதி வாங்கி அதை வெளியிட்டிருக்கலாமே!
காயல்பட்டினம் எங்கள் இஸ்லாமிய இன்சுவை சமையலில் உப்பு சேர்த்த கலை நகரம். இங்கே கிடப்பது புளுதியல்ல, மக்கமா மலரின் மகரந்த பொடிகள் இங்கே ஏறல் எழுத்திலும் இறை மறை இருக்கும். அலைகளின் வாயும் ஹதீதுகள
பேசும்... சதகத்துல்லாஹ் அப்பாவை சதக்காவாக ஞாலத்துக்கு ஈந்த ஞான பூமி இது.. செத்தும் கொடை கொடுத்த சீதக்காதி வள்ளலையே வாரி வழங்கிய வள்ளல் பூமி இது.... அப்போது அவர் வடித்த கவிதை இது . கவிஞருக்கு வாழ்த்துக்கள்.
கண்ணதாசனே கண்ணதாசனே வந்து விடு, எங்கள் காதல் கவிதை வரிகளை கொஞ்சம் திருத்திக் கொடு என்று கண்ணதாசனை காதலர்கள் அழைக்கிறார்கள்.
நாம் காயலர்கள், கவிக்கோ அவர்களை அழைக்கிறோம் வாருங்கள் கவிஞர் அவர்களே, எங்கள் புதிய காயல்பட்டினம் கவிதை வரிகளை கொஞ்சம் திருத்திக் கொடுங்கள். எங்கள் வாழ்க்கை வெறும் பழைய கவிதைகளாகவே இருக்கின்றன அவற்றை புதுக் கவிதைகளாக மாற்றி எழுதி தாருங்கள்.அவை செயல் வடிவம் பெற வாழ்த்துங்கள்..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross