எங்கள் கவிதைப் பாட்டன்களின் சுவாசக் காற்று! posted bykavimagan m.s.abdul kader (qatar)[27 March 2013] IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 26497
ஓராயிரம் பிரசங்கிகளின் உள்ளடக்கத்தை,இரண்டு வரிகளில் உணர்வோடு தைக்கும் வித்தை,இலக்கிய வித்தகனுக்கு சாத்தியமானது.அத்தகையவர்களின் வாழும் உதாரணம் கவிக்கோ அவர்கள். "அவர் படிக்காதவர்தான்....ஆனாலும் அகிலத்தின் புத்தகம் அவர்தானே!" இந்த இரண்டு வரிகள் போதாதா பெருமானாரின் ஆளுமைத்தன்மையை,அறிவை பறைசாற்ற.
காலத்தின் வேள்விகளால் கருக்க முடியாத கவிதைகள் பல வடித்த பாவலனே! கவிக்கோவே!பஷீருக்குக் கிட்டிய பாக்கியம் எனக்கும் உண்டு என்றால்,இறைவனின் அருளோடு உங்கள் கவிதைக் கரம் பற்றி எனது கண்ணீரில் நனைக்கும் கடற்கரையின் மனமயக்கும் ஓர் இனிய மாலைப்பொழுது எனக்கும் சொந்தமாகட்டும்!
உங்களிடம் பகிர்ந்து கொள்ள என்னிடம் ஏதும் இல்லை உங்கள்
கவிதையின் மீதான காதலைத் தவிர.ஆனால்,உங்களிடம்
யாசிக்க என்னுள் ஏராளம் இருக்கிறது!
எந்தக் கடலும் தராத சுகம் இந்தக் கடல் உங்களுக்குத் தருவதில்
வியப்பில்லை! காரணம் இது வெறும் கடற்காற்று அல்ல!இந்த
மண்ணோடு கலந்திருக்கும் எங்கள் கவிதைப் பாட்டன்களின்
சுவாசக் காற்று.காசிம் புலவரின்,சாம் ஒலி நாயகத்தின்,உமர் ஒலி அப்பாவின்,அவர் பிள்ளை தைக்கா சாஹிபின்,சாந்தமிகு
சதக்கத்துல்லாஹ் அப்பாவின்,காயல் பிறைக்கொடியானின்,
இன்னும் பல காவியக் கவிஞர்களின் அருளூற்று!
கவிக்கோ அவர்களே! தனியோன் அருளுடன் தமிழ் போல் வாழ்க!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross