Re:...L .A .Z . posted bymackie noohuthambi (kayalpatnam)[30 March 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 26548
மரணத்துடன் போராடி கடைசியில் மரணம்தான் வெற்றி பெற்றிருக்கிறது. நோய் நொடிகளால் நீண்ட நாட்கள் பீடிக்கப் பட்டாலும் அதிலும் விட்டுக் கொடுக்காமல் கறாராக இருந்து இறைவனின் நாட்டப்படி வபாத் ஆகி விட்ட L.A.Z. அவர்களுக்கு அல்லாஹ் மேலான சுவர்க்க பதியை வாழும் இடமாக ஆக்கிவைப்பானாக.
1969 JANATHA FURNITURE கடையில் நான் சேர்ந்தபோது அவர்கள் அங்கு கேஷியர். ஒரு எறும்பு கூட அவருக்கு தெரியாமல் கல்லா பெட்டிக்குள் பிரவேசிக்க முடியாது. அவரிடம் ஆதாரம் கொடுக்காமல் ஒரு பைசா கூட வெளியே எடுக்க முடியாது. சில நேரம் அவர் செயல் நமக்கு அதிருப்தி அளித்தாலும் அவர்கள் அதைப்பற்றி அலட்டிக் கொள்ளாமல், தனக்கு கொடுக்கப்பட்ட பண பொறுப்பை அவ்வளவு கடமை உணர்வுடன் செய்து வந்தார்கள்.
2003 இல் மீண்டும் நான் LKS HOMESTYLE நிறுவனத்தில் சேர்ந்த போதும் அவர்கள் அங்கே அதே காஷியர் பொறுப்பில் இருந்தார்கள். அவர்கள் சுகவீனமுற்றபோது அந்த பொறுப்பை என்னிடம் ஒப்படைத்து விட்டு ஊர் வந்தார்கள். அவர்கள் மாதிரி கண்டிப்பாக கடமையை நான் நிறைவேற்றாவிட்டாலும் அவர்களுக்குப் பிறகு அந்த பொறுப்புக்கு என்னை அமர்த்திய அந்த நிர்வாகம் என்னை அவர்களை போல் நம்பிக்கை உள்ளவன் என்ற உணர்வை எனக்குள் ஏற்படுத்தியது .அந்த வகையில் L.A.Z. அவர்களுக்கு நான் அதிகம் து ஆ செய்ய கடமை பட்டுள்ளேன். எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து நல அமல்களை பொருந்திக் கொண்டு, அவர்களுக்கு மேலான சொர்க்க பதியை கொடுத்தருள்வானாக.
மருமகன் ஷமீமுல் இஸ்லாம் மற்றும் குடும்பத்தினர்களுக்கு அல்லாஹ் நல்ல பொறுமையை கொடுத்தருள்வானாக ஆமீன்..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross