செய்தி: நகர்மன்ற நடவடிக்கைகளில் தனிநபர் தலையீட்டை ஒழிக்க வேண்டும்! நகராட்சி நிகழ்வுகள் விளக்கப் பொதுக்கூட்டத்தில் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் பேச்சு!! (அசைபடங்களுடன்!!!) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
உங்கள் தன்னலமற்ற சேவைக்குறித்தும் காயல் ஓதட்டும் posted byUmar Rizwan Jamali (Singapore)[30 March 2013] IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 26551
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... வபரக்...
நாளை மறுமையில் இறை சமூகத்தில் "உங்கள் பொருளை எவ்வாறு சம்பாதித்தீர்கள் அதை எவ்வழியில் செலவிட்டீர்கள்" என்ற புள்ளிவிவரங்களை சமர்ப்பிக்காதவரை உங்கள் கால்கள் நகறாது. (நபிமொழி)
கண்ணியத்திற்குரிய காயல் நகர்மன்ற செயல் வீரர்களே!
இந்த உரை உங்களை வேதனைப்படுத்தியிருக்கும் என்பதையும் உங்கள் கண்ணியத்தை கலங்கப்படுத்தியிருக்கும் என்பதையும் அனைவரும் உணர்வர்.
என்றாலும் நாளை மறுமையில் அனைத்து சமூகம் முன்னிலையில் மக்கள் நலனில் குறைவுபடுத்தியவர்கள், மக்கள் பணத்தில் மயக்கம் கண்டவர்கள் அடைகிற இழிவுக்கும் அதனால் கிடைக்கும் வேதனைக்கும் முன்னாள் இது ஒரு அணுவிலும் அணுவலவுதான் என்பதை அறிவுடைய எவரும் மறுக்கமாட்டார்கள்.
மனிதன் என்ற அடிப்படையில் தலைவியுடைய அணுகுமுறையில் வேண்டுமானால் சில தவறுகள் இருந்திருக்கலாம். ஆனால் அவர்களது கொள்கை பாராட்டப்படவேண்டியதே! என்பதில் சந்தேகமில்லை.
நீங்களும் சில சூழல்களால் சிதைக்கப்பட்டிருக்கிறீர்கள்.
நீங்களும் உத்தமர்கள்தான் என்பதை நிரூபிக்கும் நேரம் இது.
எனவே, வேண்டாத வேகத்தையும் வேண்டாதார் வியூகத்தையும் தவிர்த்து விவேகமுடன் களம் இறங்குங்கள்.
பெற்றோர்களுக்கிடையில் பிரச்சனை வருவது வாடிக்கை, அதனால்; பிள்ளைகளை நடுத்தெருவில் விடுவது மகா பாதகம்.
அதை செய்பவர் அந்த குழந்தையின் எதார்த்த தாய் தகப்பராக இருப்பது ஐயமே!
எது எப்படியோ!
நீங்களும் காயளர்கள்தான் என்ற கடமை உணர்வு உங்களிடம் ஓங்கட்டும். பின்பொருநாள் உங்கள் தன்னலமற்ற சேவைக்குறித்தும் காயல் ஓதட்டும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross