டாக்டர்.கிஸார் காக்கா அவர்களின் இந்தக் கட்டுரையின் தலைப்பில் மண்ணைத் திறந்து என்பதனை மண்ணைத் துறந்து என்ற சரியான பதத்திற்கு மாற்றிக் கொள்வோம்.
டாக்டர் அவர்கள் எழுதிய இந்தக் கட்டுரையை ஆழ்ந்து வாசிக்கும்
போது, மண்ணின் மைந்தன் என்ற மனநிலையில் கொஞ்சமும், ஒரு மருத்துவர் என்ற முறையில் அதிகமும், இதன் சிந்தனைப் போக்கு இருக்கிறது என்பது எனது பணிவான அபிப்ராயம்.
தாய்மண்ணில் பணியாற்றும் ஒரு மண்ணின் மைந்தனுக்குரிய
பிரச்சனைகளாக, டாக்டர் அவர்கள் சுட்டிக் காட்டிய எந்த ஒரு
கருத்தையும் மறுப்பதிற்கில்லை. நமதூர் மக்களின் பல்வேறு
சுவாபக் கோளாறுகள், மருத்துவரின் பொருளாதார நிலை, துறை
சார்ந்த அறிவு மற்றும் திறமையை வளர்க்க வேண்டிய நிர்ப்பந்தம், இன்னும் இதுபோன்ற காரணிகள் ஏற்றுக்கொள்ளப் பட வேண்டியவையே!
அதே நேரத்தில்,கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகள், ஏதேனும் ஒரு
நகரத்தில் பணியாற்றி, பொருளீட்டி, மேற்படிப்பும் படித்து, ஓரளவுக்கு சுய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு தன்னிறைவு அடைந்த பின்னரும், தாய்மண்ணில் சேவையாற்ற வேண்டும் என்ற அர்ப்பணிப்பு உணர்வு பெரும்பாலான மருத்துவர்களுக்கு இல்லை என்ற கசக்கும் உண்மையை டாக்டர் அவர்கள் இந்தக் கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தால், அவரது வேண்டுகோளின்படி, கட்டுரை ஆசிரியரை மருத்துவராக அல்லாமல், மண்ணின் மைந்தராக காண முடிந்திருக்கும்.
மருத்துவம் என்பது பணம் போட்டு பணம் எடுக்கும் தொழில்
மாத்திரம் அல்ல. மிக உயர்ந்த சேவையை அடிப்படையாகக்
கொண்டது என்பதனையும் மனதில் நிறுத்த வேண்டும். நமது மக்களும், நமது மண்ணின் மைந்தர்களாகிய மருத்துவர்களுக்கு உரிய மரியாதையும், அவர்களது தகுதிக்கேற்ற கட்டணத்தையும் செலுத்தி மென்மேலும் சேவையாற்ற முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
உள்ளூர் மருத்துவமனைகள், நகரத்து மருத்துவமனை போல்
இல்லையெனினும், மருத்துவர்களின் வாழ்வாதாரத்தை நிறைவு
செய்யும் வகையில் அவர்களது வருமானத்திற்கு உத்தரவாதம்
அளித்து, மண்ணின் மைந்தர்களுக்கு கண்ணியமும், முக்கியத்துவமும், அளிக்க வேண்டும்.
நமது நகரத்திலேயே பணியாற்ற உறுதியளிக்கும் மருத்துவர்களின்
மேற்படிப்பிற்கான செலவினை தொண்டு நிறுவனங்களே ஏற்க
வேண்டும்.
டாக்டர் அவர்களின் இந்தக் கட்டுரை மிகவும் பயனுள்ளதும், நீண்ட கால ஆதங்கத்தை அலசுவதற்கு கிடைத்த வாய்ப்புமாகும்.
நன்றி டாக்டர் சார்! வாழ்த்துக்கள்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross