Re:.கண்னை மூடிக் கொண்டு கிணற்றில் பாய்... posted byசாளை பஷீர் (சதுக்கை தெரு , காயல்பட்டினம்)[02 April 2013] IP: 180.*.*.* India | Comment Reference Number: 26613
எள் என்றால் எண்ணையாக நிற்பார்
கட்டி வரச்சொன்னால் வெட்டி வருவார்
கோடு போட்டால் ரோடு போடுவார்
தலைவி அதிமுக என்றுதான் சொன்னார்
இவர்கள் அதில் சேர்ந்தே விட்டார்கள்
இந்த கும்பலிலிருந்து தன்னை தற்காக்கும் முகமாக தலைவி ஆளுங்கட்சியில் சேருவேன் என்றார். ஆனால் அவரை முந்திக்கொண்டு அதிமுகவில் பாய்ந்து விழுந்து இந்த கும்பல் சேர்ந்திருக்கின்றது.
அப்ப இவர்களை விட தலைவி பலமானவர் என்று ஆகின்றது. தலை நகரத்து தொழிலதிபரின் ஆதரவு என்பதெல்லாம் அப்ப புஸ்வாணம்தானா!! அய்ய அவரையும் கொண்டு வந்து வர்த்தக அணி சேர்க்க வேண்டியதுதானே !!
அகில இந்திய இஸ்லாமிய அமைப்பின் காயல் நகர தலைவராக இருக்கும் நகர் மன்ற உறுப்பினரும் அதிமுகவில் சேர்ந்துள்ளதை பார்க்கும்போது பரிதாபமாக இருக்கின்றது. நான் பரிதாபப்பட்டது இஸ்லாமிய அமைப்பையும் அதிமுகவையும் நினைத்துத்தான்.
ஆளுங்கட்சியில சேர்ந்தாச்சில்ல...? இனி எல்லாம் ஹலால்தான்!!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross