Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:00:57 AM
சனி | 27 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1731, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:28
மறைவு18:27மறைவு08:22
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10531
#KOTW10531
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஏப்ரல் 1, 2013
நகர்மன்ற உறுப்பினர்கள் 8 பேர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 5068 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (23) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்கள் 08 பேர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) கட்சியில் இணைந்துள்ளதாக இன்றைய ‘மாலை முரசு’ நெல்லை பதிப்பு நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டுள்ளது







காயல்பட்டினம் நகர்மன்ற துணைத்தலைவரும், 11ஆவது வார்டு உறுப்பினருமான எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன் தலைமையில்,
01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான்,
02ஆவது வார்டு உறுப்பினர் வி.எம்.எஸ்.முஹம்மத் செய்யித் ஃபாத்திமா,
03ஆவது வார்டு உறுப்பினர் பி.எம்.எஸ்.சாரா உம்மாள்,
10ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.பி.பத்ருல் ஹக்,

14ஆவது வார்டு உறுப்பினர் ஏ.பாக்கிய ஷீலா,
15ஆவது வார்டு உறுப்பினர் கே.ஜமால்,
18ஆவது வார்டு உறுப்பினர் இ.எம்.சாமி
ஆகியோர், தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சரும், அதிமுக தூத்துக்குடி மாவட்ட செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியனை, 31.03.2013 ஞாயிற்றுக்கிழமையன்று மாலையில், தூத்துக்குடியில் நேரில் சந்தித்து கட்சியில் இணைவதாக அறிவித்துள்ளதாகவும், ஏற்கனவே அக்கட்சியில் உறுப்பினராக உள்ள
07ஆவது வார்டு உறுப்பினர் ஜெ.அந்தோணி,
16ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.சாமு ஷிஹாபுத்தீன் ஆகியோரும்,

தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சின்னத்துரை, தூத்துக்குடி மாநகர அதிமுக செயலாளர் ஏசாதுரை, தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர் சேவியர், ஜெயலலிதா பேரவை செயலாளர் விஜயகுமார், தமிழ்நாடு ஹஜ் கமிட்டி உறுப்பினர் திருமதி.ஆயிஷா கல்லாசி, அதிமுக மாவட்ட சிறுபான்மைப் பிரிவு தலைவர் எம்.ஜெ.செய்யித் இப்றாஹீம், அதிமுக காயல்பட்டினம் கிளை செயலாளர் செய்யது காஸிம், காயல்பட்டினம் நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் எல்.எஸ்.அன்வர் உள்ளிட்டோரும் இந்நிகழ்வின்போது உடனிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

[செய்தி திருத்தப்பட்டது @ 10:25pm/1.4.2013]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by P.S.ABDUL KADER (JEDDAH,SAUDIA.) [01 April 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26603

புதியதாக அ.தி.மு.க. வில் இணைத்த மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு நன்றி. புதிய உறுப்பினர் அனைவர்க்கும் வாழ்த்துக்கள். வரும் 5 தேதி கட்சியின் பலம் அதிகமாக இருப்பதால், வாக்கெடுப்பில் அ.தி மு.க மக்கள்தலைவிக்கு வெற்றி வீரகசம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by sulaiman (saudi) [01 April 2013]
IP: 79.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26604

MAY ALMIGHTY ALLAH, PROTECT AND GUARD OUR KAYAL AND OUR PEOPLE FROM THE GUTTER POLITICS,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...ஏப்ரல் 1 முட்டாள்கள் தினம்
posted by mackie noohuthambi (kayalpatnam) [01 April 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 26605

ஏப்ரல் 1 முட்டாள்கள் தினம். இன்று வதந்திகளை பரப்பி உறவினர்கள் நண்பர்கள் உங்களை முட்டாளாக்க நினைப்பார்கள் எனவே உஷாராக இருங்கள் என்று தினத்தந்தியில் இன்று ஒரு எச்சரிக்கை வாசகம் உள்ளது. ஆனால் ஆசிரியருக்கு தெரியாது ஏற்கெனவே முட்டாள்கள் ஆக்கப்பட்டு விட்டவர்கள் நாங்கள் என்பது.

அல்லாஹ்வின் பெயரால் எவ்வளவு வாக்குறுதிகள், வாய் சவடால்கள், நகரமன்றத்தின் தலைவி உள்பட.

பூவா தலையா போட்டால் தெரியும் நீயா நானா பார்த்து விடு...பூ விழுந்தால் நீ நெனைச்சபடி, தலைவிளுந்தால் நான் நெனச்சபடி என்று ஏப்ரல் 5ம் திகதி வரை கெடு உள்ளது, யார் முட்டாள் என்று தெரிந்து கொள்ள..அதற்கிடையில் நாங்கள் யாரும் முட்டாள்கள் இல்லை...எங்களை ஓட்டு போட்டு நகர்மன்றதுக்கு அனுப்பிய மக்களாகிய நீங்கள்தான் முட்டாள்கள் என்று எல்லோரும் இன்று அவர்கள் பாதைகளை மாற்றிக் கொண்டார்களே, அவர்களை தேர்ந்தெடுத்த முஹல்லாவில் ஒரு கூட்டம்போட்டாவது, அல்லது அவரவர்கள் ஜமாஅதிலாவது கேட்டிருக்க வேண்டாமா.

இன்னொரு தேர்தல் வராமலா போகும். மக்கள் முகத்தில் எப்படி விழிப்பீர்கள். பச்சோந்தி திகூட நிறம் மாறுவதற்கு ஓர் நேரம் காலம் பார்க்குமாம். அந்த விவஸ்தை கூட இல்லாமல் போய்விட்டதே. இந்த ஊரை அல்லாஹ்தான் காப்பாற்ற வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by mkt mohideen (kuwait) [01 April 2013]
IP: 94.*.*.* Kuwait | Comment Reference Number: 26606

salaam to all

யோக்கியன் வருகிறார்கள் சொம்பு எடுத்துவையுங்கள்

this is dirty politics from these members. they forgot the promise given to their people and jamaaths for their convenience. since they cheat the people better we should ignore these members and do non cooperation movement against municipality. they want to take excuse by blaming the chairwomen. tit for tat. in this drama as usual people are the losers.

now these members joined political party. hopefully as they wish they will impeach the chairwomen on 05th april. then should elect the new head. they should elect the person recomended by party. if party recomends other community people they should elect him as our town head by force as they can not over rule party decision. May Allah save us and protect from these people

wassalam


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. சபாஷ் சரியான போட்டி
posted by Saalai Abdul Razzaq Lukman (UAE) [01 April 2013]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 26607

தலைவி, ஆளும் கட்சியில் சேர்ந்து மற்ற 17 உறுப்பினர்களுக்கும் check வைக்க நினைத்து கொண்டிருக்க இந்த 10 உறுப்பினர்கள் முந்தி கொண்டு ஆளும் கட்சியில் சேர்ந்து தலைவிக்கு check வைத்துள்ளனர். இதெல்லாம் அரசியல் சதி வேளையில் சகஜமப்பா.

இனி தலைவியும் ஆளும் கட்சியில் சேர்ந்து அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் சொல்கிறபடி, தலைவியும் மற்ற உறுப்பினர்களும் சமாதனம் அடைந்து ஊருக்கு நல்லது நடந்தால் காயலர் அனைவருக்கும் நிம்மதி.

அதை விட்டு விட்டு, தன்னை எதிர்க்கும் 10 உறுப்பினர்கள் ஆளும் கட்சியில் சேர்ந்ததால், தலைவி எதிர் கட்சியில் சேர்ந்தால், மீண்டும் பிரச்சனை.

தலைவி மற்றும் உறுப்பினர்கள் அல்லாஹ்விற்கு பயந்து, அவர்களை (இரு சாராரையும்) ஆட்டுவிக்கும் நாசகார, சுயநல கும்பலில் இருந்து விடுபட்டு, ஒற்றுமையாகி தங்களை தேர்ந்தெடுத்த மக்களுக்கு நன்மை செய்தால், அல்லாஹ்வின் திருபொருத்த்தம் கிடைக்கும். மீண்டும் அரசியல் சடுகுடு ஆரம்பித்து விட்டது. ஊருக்கு நன்மையை எதிர்பார்த்தவனாக!

சாளை.அப்துல் ரஸ்ஸாக், துபாய்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by s.e.m.abdul cader (bahrain) [02 April 2013]
IP: 109.*.*.* Bahrain | Comment Reference Number: 26608

இன்று ADMK - நாளை DMK. SHAME LESS FELLOWS. ARE ALL YOU FROM KAYALS ? WHERE YOU WILL KEEP YOUR FACES IF DMK COMES ? UNDER YOUR FEET? DON'T FORGET YOUR KAYALITES WHO SELECTED YOU AS MEMBERS, SURELY YOU ALL WILL LOOSE YOUR ADDRESS SOON/ ONE DAY - INSHALLAH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...பதவி பயம்
posted by Moosa Sahib (Kayalpatnam) [02 April 2013]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 26609

தலைவியின் AIADMK இல் சேர போவதாக அறிவித்ததும், இவர்களுக்கு தங்கள் பதவி மீது பயம் வந்து விட்டது. அதனால் ஏற்பட்ட முடிவு தான் இது.

இனிமேல் எல்லா உறுப்பினரும் ஒன்று பட்டு, ஊருக்கு நல்ல காரியம் நடந்தால் சரி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by salai s nawas (singapore) [02 April 2013]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 26610

ஆச்சர்யம் ஆனால் உண்மை.

இத இததான் எதிர்பார்த்தேன்.

வாளு போய் கத்தி வந்தது டும் டும் டும் !!!!

கெடுவார்கள் கேடு நினைப்பார்கள் !!!

இறுதியில்....

அவனின்றி ஒரு அணுவும் அசையாது


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by syedahmed (GZ, China) [02 April 2013]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 26611

they turned with full effort given by our one of the honourable powerful minister mr.seetha thaana and join hold hands with the ruling party for they raise to motivate our good needs of our native.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by zainul abdeen (Dubai) [02 April 2013]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 26612

அப்போ இனி காயல் பட்டணம் அம்மா பட்டணம் என்று அழைக்கும் நிலைமை வர வாய்ப்புள்ளது

ஒரு வேலை ஏப்ரல் 1 முட்டாள் தினமாயிற்றே ஏமாற்ற இந்த செய்தியோ

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:.கண்னை மூடிக் கொண்டு கிணற்றில் பாய்...
posted by சாளை பஷீர் (சதுக்கை தெரு , காயல்பட்டினம்) [02 April 2013]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 26613

எள் என்றால் எண்ணையாக நிற்பார்
கட்டி வரச்சொன்னால் வெட்டி வருவார்
கோடு போட்டால் ரோடு போடுவார்
தலைவி அதிமுக என்றுதான் சொன்னார்
இவர்கள் அதில் சேர்ந்தே விட்டார்கள்

இந்த கும்பலிலிருந்து தன்னை தற்காக்கும் முகமாக தலைவி ஆளுங்கட்சியில் சேருவேன் என்றார். ஆனால் அவரை முந்திக்கொண்டு அதிமுகவில் பாய்ந்து விழுந்து இந்த கும்பல் சேர்ந்திருக்கின்றது.

அப்ப இவர்களை விட தலைவி பலமானவர் என்று ஆகின்றது. தலை நகரத்து தொழிலதிபரின் ஆதரவு என்பதெல்லாம் அப்ப புஸ்வாணம்தானா!! அய்ய அவரையும் கொண்டு வந்து வர்த்தக அணி சேர்க்க வேண்டியதுதானே !!

அகில இந்திய இஸ்லாமிய அமைப்பின் காயல் நகர தலைவராக இருக்கும் நகர் மன்ற உறுப்பினரும் அதிமுகவில் சேர்ந்துள்ளதை பார்க்கும்போது பரிதாபமாக இருக்கின்றது. நான் பரிதாபப்பட்டது இஸ்லாமிய அமைப்பையும் அதிமுகவையும் நினைத்துத்தான்.

ஆளுங்கட்சியில சேர்ந்தாச்சில்ல...? இனி எல்லாம் ஹலால்தான்!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by சாளை S.I. ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [02 April 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26614

ஆளும் கட்சியில் சேர்ந்து, மக்களுக்கு உண்மையில் சேவை செய்யனும் என்ற குறிக்கோள் உள்ள உங்களை பாராட்டி வாழ்த்துகிறோம்.

நடந்தவைகள் நன்மையாக இருக்கட்டும், நடப்பவைகளும் நன்மையாக இருக்கட்டும்.

ஆனால் ஒன்று, இனி நீங்கள் ஒன்றாக கூடி எந்த ஒரு முடிவையும் எடுக்கமுடியாது. அதாவது எந்த ஆணியையும்....., கட்சி என்ன சொல்லுகிறதோ அதை தான் செய்யனும். கட்சி ஆபிதா அம்மையாரைதான் நீங்கள் எல்லோரும் ஆதரிக்கனும் என்று சொன்னால்..?

அப்புறம், கட்சியில் சேர்ந்த சந்தோசத்தில் வழமை போல, அமைச்சரையோ, மற்ற நிர்வாகிகளையோ பாராட்டி, போஸ்டர் மற்றும் பிளக்ஸ் போர்ட் வைத்து விடாதீர்கள், அப்புறம் அவர்களுக்கு அம்மா சங்கு ஊதி விடுவார்கள். புரியும்தானே.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by EASA SHAFEEQ (DAMMAM) [02 April 2013]
IP: 37.*.*.* | Comment Reference Number: 26616

நாடகம் விடும் நேரம் தான் உச்ச காட்சி நடக்குதம்மா
வேஷம் கலைக்கவும் ஓய்வு எடுக்கவும் வேலை நெருங்குதம்மா
பாதைகள் பல மாறிய வந்த பயணம் முடியுதம்மா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by shaik abbas faisal D (kayalpatnam) [02 April 2013]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 26621

சரியான நேரத்தில் சரியாக எடுக்கப்பட்ட சரியான முடிவு, சபாஷ்!இதற்கு வழி வகுத்த தலைவிக்கு நன்றி. நகராட்சி சதுரங்கத்தில் ராணிக்கு (தலைவிக்கு) வைக்கப்பட்ட சரியான செக்.

Admninistrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by Cnash (Makkah) [02 April 2013]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26623

ஏட்டிக்கு போட்டி! எதிர்பாரா திருப்பம்! அரசியலின் எதுவும் நடக்கலாம் என்று சொல்லவது உண்மை தான்!! நம்ம ஆளுங்க விளையாடும் அரசியல் சதுரங்கத்தில் ராமதாஸ் கூட தோற்றுவிடுவார் போல!! சரி எப்படியோ அது அவர்கள் உரிமை!! ஆனால் இவர்களின் சிலர் (துணை தலைவர் உட்பட) வென்றதற்கு வெற்றிவிழா கொண்டாடி காயல்பட்டினம் என்றும் கலைஞர்பட்டினம் தான் என்று மீண்டும் நிருபித்து விட்டோம் என்று மேடையிலும் போஸ்டர் அடித்தும் கொண்டாடிய அந்த கட்சியினர் தான் பதில் சொல்ல வேண்டும்.

சரி.. பொதுவாகவே ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கு போகும் போது குடும்ப அரசியல் எங்களுக்கு பிடிக்கவில்லை, அந்த கட்சி ஊழல் கட்சி, தொண்டர்களுக்கு மரியாதை இல்லை இப்படி எல்லாம் எதாவது வீர வசனம் சொல்லி இணைய போகிற கட்சி தலைவியை ஆஹோ ஓஹோ இவரை விட்டால் தமிழகத்தை காக்க வேற யாரும் இல்லை என்றெல்லாம் சொல்லுவார்களே அப்படி எதாவது காரணம் உண்டா? சரி இப்போ தலைவி எந்த கட்சி? அவர் போட்டிக்கு திமுக வில் இணைந்து விட போகிறார்? என்ன அரசியலோ? என்ன கூத்தோ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. நீண்ட நாள் எங்கள் கனவை நினைவாகிய 8 உறுபினர்களுக்கும் வாழ்த்துக்கள்
posted by Pirabu Shuaibu (Chennai) [02 April 2013]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 26624

8 உறுபினர்களுக்கும் வாழ்த்துக்கள். நிச்சயம் புரட்சிதலைவி அம்மா அவர்கள் நமது காயல் நகர்மன்றதிர்க்கு நல்லதை செய்வார்கள். காயலின் புரட்சி பெண்ணே நகர்மன்ற தலைவி அவர்களே நீங்களும் புரட்சி தலைவின் தலைமை யில் இணைந்து விடுங்கள்.

பிரபு ஷுஐபு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...
posted by SALAHU DEEN (CAMP GZ, CHINA ) [02 April 2013]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 26625

இதோ தீர்ப்பு வந்து விட்டது யார் ஊழல் வாதி என்று ! ஊர் மக்களை ஏமாற்ற முடியாது, அந்த நாட்டாமைக்கே இந்த நடுக்கம் வந்து விட்டது. இவர்கள் எல்லாம் எம்மாத்திரம் !! எண்ணி ஆறாவது மாதத்தில் வீழ்ந்தது யாரு !!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. ஆசையுடன் செல்லும் இடம்?
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (yanbu) [02 April 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26628

துணைத்தலைவர் பதவியை வென்றவர் என்ஆயுள் கட்சியும், நாளை ஆளப்போகும் கட்சியுமான தி.மு.கா வைச் சேர்த்தவர் என்ற சந்தோஷத்தின் வெளிப்பாட்டை உடனடியாக வாழ்த்துச்சொற்ப் பூக்களாகச்சொறிந்து உளமார வாழ்த்தினேன் அன்று!

ஐயகோ இன்று.............? அற்ற குளத்து அருநீர்ப்பறவையாய் பறந்துதோடிவிட்டார் ஆனால் அவர் ஆசையுடன் செல்லும் குளம் அ தி.மு.க அல்ல என்பது ஐந்து வயது அரும்பு மலரும் சிறுவனுக்கு கூடத்தெளிவாகத் தெறிந்தஉண்மை! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்
முஹம்மது ஆதம் சுல்தான்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:...
posted by Sabeer (Bangalore) [02 April 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 26629

அதிமுக நகர்மன்றத்தலைவி மீது அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் எப்படி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர முடியும்? அரசியலில் புதுமையாக உள்ளதே! சற்று சிந்தித்தால் பார்த்தால் தலை(யின்) கனம் குறைந்து தலைநகர் ஆட்டம் கண்டு உள்ளதாக கேள்வி? ஆறு மாதங்கள் கழித்து வழிக்கு வந்துள்ளது யார் என்பது புரியாமலே புரியும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:...
posted by abubacker (dammam) [03 April 2013]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26630

காலில் விழ தயார்.
ஒட்டு போட்ட மக்களுக்கு ஆப்பு.

இவர்கள் யோக்கிய மானவர்களாக இருந்திருப் பார்களானால் தங்கள் பகுதி ஜமாத்திற்கும், அந்த வார்ட் மக்களுக்கும் அதிமுக வில் இணைவதனால் நான் இன்ன இன்ன நல்ல காரியங்களை செய்ய வாய்புள்ளது அதனால் நான் இனைய போறேன் உங்களின் கருத்து என்ன? என்று ஆலோசனை செய்திருக்கணும். செய்தார்களா?

இனிமேல் இதைபோல் சுயேச்சையாக நிற்கும் வேட்பார்களிடம் எந்த கட்சியிலும் இனைய கூடாது என்றும் இணைத்தால் ஜமாத்தில் நிற்க வைத்து தண்டிப்போம். சம்மதமா? எழுதி தருவீர்களா? என்று கேட்க வேண்டுமோ?

இது ஒரு மோசமான துவக்கம். எது வரை போகுமோ...? இவர்களின் உள்ளரங்கம் ஒருவனுக்கு தெரியும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. தீராத விளையாட்டுப் பிள்ளை
posted by M.S.Sayyid Mohammed (bangkok) [03 April 2013]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 26633

ஒரு தனி மனிதரைத் திருப்திப் படுத்த தங்கள் மூளையை அடகு வைத்து விட்டனர் நகர் மன்ற உறுப்பினர்கள். அந்த தனி மனிதருக்கு இது ஒரு பொழுதுப் போக்கு விளையாட்டு. எந்த ஒரு ஆதாயமும் அவருக்கும் இல்லை.

வேதனை என்னவெனில் எல்லோருக்கும் அவரைப் பற்றி நன்றாகத் தெரியும். உத்தமர் சான்றிதழ் கொடுக்க அவரிடம் கப்பம் பெற்றுக்கொண்டிருக்கும் எந்த ஒரு தனி மனிதரும் முன் வருவதில்லை.

இருந்தாலும் தனக்கு பிடிக்காதவர்களை வீழ்த்த ஒரு சக்தி மனிதன் உள்ளான் என்றால் அவரை பயன் படுத்துவதில் தவறு இல்லை என்ற நிலைப் பாடு தவறை மேலும் வீரியப் படுத்தும்.

இதற்கு ஊர்ப் பெரியவர்களும் உடந்தையாக இருப்பது வேதனையிலும் வேதனை. ஊர்ப் பெரியவர்களை எதிர்த்து எத்தனை சித்து விளையாட்டுக்களை இவர் செய்துள்ளார் என்பன ஒரு பட்டியல் தரமுடியும்.

உலகமெல்லாம் காயல் நல மன்றங்கள் சிறப்புடன் செயல் பட்டுக் கொண்டிருக்கும் போது சென்னையில் மட்டும் நீர்த்துப் போய் இருப்பதற்கு என்ன காரணம், யார் காரணம். நான் நான் என்ற அகம்பாவம் கொண்டவர்தானே.

ஆபிதா அகம்பாவம் கொண்டவர் என்றால் உறுப்பினர்கள் தஞ்சம் புகுந்துள்ள மனிதர் அகம்பாவத்தில் உச்சாணியில் இருப்பவராயிற்றே.

அவருடைய விளையாட்டுக்களை நிறைவேற்ற ஆட்ட வீரர்கள் நிறைய பேர் ஒன்று சேர்ந்துள்ளனர். நேர்மை, வாய்மையுள்ள ஒரு சிலரும் அதில் அணி சேர்ந்திருப்பதுதான் ஜீரணிக்க முடியவில்லை. பதவியை ராஜினாமா செய்துவிட்டு தன் நேர்மையை நிரூபித்திருக்கலாம்.

இவர்கள் தஞ்சம் புகுந்துள்ள நபர் இவர்களை எப்படியெல்லாம் கேவலப் படுத்தப் போகிறார் என விரைவில் எதிர் பார்க்கலாம்.

புராண கவியொன்று நினைவிற்கு வருகிறது.

தின்னப் பழம் தருவான்
அதைத் தின்னும் போதே
தட்டிப் பறிப்பான்
தீராத விளையாட்டுப் பிள்ளை.

அந்த விளையாட்டுப் பிள்ளையிடம் தஞ்சம் புகுந்துள்ள உறுப்பினர்களுக்காக எம்முடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.

வஸ்ஸலாம்.

M S செய்யது முஹம்மது.
பாங்காக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. இனி நகரமன்ற தலைவி பதவி நீடித்தால் என்ன..! அது இடையில் போனால் என்ன...! புரட்சி பெண் என்ற நல்ல பெயர் போதும்...
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [03 April 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 26634

அட பாவமே... இந்த அளவுக்கு அந்த பெண் தலைவருக்கு (ஒரு பொம்பளைக்கு) பயந்து இப்படி ஒரு முடிவை (கட்சி மாற்றத்தை) எடுக்கும் அளவுக்கு இந்த உறுப்பினர்கள் தள்ள பட்டுள்ளதை நினைக்கும் போது உண்மையிலேயே நகரமன்ற தலைவர் ஒரு புரட்சி பெண் தான் என்பதை நிரூபித்துள்ளார்..

2011ஆம் ஆண்டோடு காயல்பட்டினத்தில் தனி நபர்களின் ஆதிக்கத்தினை வேரோடு பிடிங்கி வீசியவர் என்று வரலாற்றில் தனது பெயரையும் - பெருமையையும் இந்த புரட்சி பெண் ஆபிதா அவர்கள் பெறுகிறார்..

முந்தைய - இன்றைய நகரமன்ற நடப்புகளை தெரிந்து கொள்ள.. நாளைய தலைமுறைகள் இந்த வரலாற்றை (புரட்சியை) படித்து தெரிந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது..

தனி நபர்கள் கூட்டு ஆதிக்கத்தை ஒழித்து இனி காயல்பட்டினத்தில் பொது வேட்பாளருக்கு இடமில்லை என்ற ஒரு சூழலை நகரில் உருவாக்கியவர் இந்த (2011 ஆண்டு முதல்) நகரமன்ற ஆபிதா அவர்கள் ஆவார்கள்...

பெண் தலைவியின் புரட்சியின் எதிரொலியாக உறுப்பினர்கள் தன்னை காப்பாற்றி கொள்ள ஆளும் கட்சியில் என்று இணைந்தார்களோ...! அன்றே.. அப்போதே இந்த நகரமன்ற தலைவி மேலும் வெற்றி பெற்று விட்டார்கள் என்பது உறுதியாகிறது... பணம் பலம் - ஆள் பலம் அனைத்தும் தோல்வியுற்றது குறிபிடத்தக்கது...

இனி நகரமன்ற தலைவி பதவி நீடித்தால் என்ன..! அது இடையில் போனால் என்ன...! நகரில் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்திய மன நிறைவு ஒன்றே போதும்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:...
posted by mohmedyounus (Muscat) [03 April 2013]
IP: 82.*.*.* Oman | Comment Reference Number: 26635

நல்ல வேளை ,,,

தமிழகத்தில் ஆளுங்கட்சியாக பி.ஜெ .பி இல்லாமல் போனது. அல்ஹம்துலில்லாஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved