நகர்மன்ற நடவடிக்கைகள் குறித்து, ஜமாஅத் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரை நேரில் விசாரிக்க வேண்டும்! புதுப்பள்ளி ஜமாஅத் உறுப்பினர்கள் பள்ளி நிர்வாகத்திடம் மனு!!
காயல்பட்டினம் புதுப்பள்ளி ஜமாஅத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, கடந்த நகர்மன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 16ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினரை, அவரது நகர்மன்ற நடவடிக்கைகள் குறித்து நேரில் அழைத்து விசாரிக்கக் கோரி, அந்த ஜமாஅத் உறுப்பினர்கள் சார்பில், அப்பள்ளி நிர்வாகத்திடம் பின்வருமாறு மனு அளிக்கப்பட்டுள்ளது:-
2. Re:... posted byAbu Huraira (Abu Dhabi)[03 April 2013] IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 26639
புது பள்ளி ஜமாஅத் உறுப்பினர்கள் போன்று எல்லா ஜமாஅத்களும் அந்த அந்த வார்டு உறுபினர்களை அழைத்து விசாரிக்க வேண்டும்.
நமது வார்டு உறுப்பினர்கள் நமக்கு என்ன என்ன தியாகம்(பணிகள்) செய்தார்கள் என்று விசாரிக்க வேண்டும்
4. நல்ல முடிவை எடுப்பார்கள் posted byஹைதுரூஸ் ஆதில் (கோழிக்கோடு-கேரளா)[03 April 2013] IP: 122.*.*.* India | Comment Reference Number: 26641
நியாயமான கோரிக்கை.
இன்ஷா அல்லாஹு நிச்சயமாக புதுப்பள்ளி ஜமாத்தார் தலையிட்டு நல்ல முடிவை எடுப்பார்கள் என நம்புவோம். இப்படி நாம் தேர்ந்தெடுத்தவர்களை தட்டி கேட்க்கும் போது தான் அவர்களுக்கும் ஒரு பொறுப்பு இருக்கும்.
இதை பற்றி இவரை போல வேரு வேட்பாளர்களுக்கு எந்த எந்த ஜமாஅத் பொறுப்பு ஏற்று கொண்டதோ அவர்களும் செயல் பட்டால் மிகவும் நன்றாக இருக்கும்.
5. அஸ்ஸலாமு அலைக்கும் posted bynaleefa (kayalpatnam)[03 April 2013] IP: 123.*.*.* India | Comment Reference Number: 26642
அஸ்ஸலாமு அலைக்கும்...
அன்பார்ந்த புதுபள்ளி ஜமாஅத்தார் அவகளுக்கு முக்கியவேண்டுகோல் என்னவென்றால். நம் ஜமாஅத்தை கருதி நமது நகர்மன்ற உறுப்பினரான ஜனாப் சாம்சிஹாபுதீன் காக்கா அவர்களை அழைத்து நீங்கள் பேசவெண்டும். நம் வார்டுகளுக்கு என்ன செய்து இருக்கிறார்கள் என்று அவர்களிடம் கேட்க்கவேண்டும்.எவ்வளவு நாட்க்களாக நாங்கள் சொல்லி இருக்கிறோம் குப்பைகளை அகற்றவேண்டும் என்றும்..தெருக்களில் உள்ள குப்பைகளையும் தினந்தோறும் இல்லாமல் ஒருநாள் விட்டு ஒரு நாள் சுத்தப்படுத்தலாம்.
அதுக்குஅப்புரம் தெருவிளக்கு எந்தனை மாதமாக தெருவிளக்கு எரியாமல் இருந்தது அவர்களிடம் சொன்னால்..அவர்கள் சொல்கிறார்கள்..இதுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை..நான் சரியாக வேலை செய்ய மாட்டிக்கிறேன் என்று நீங்கள் தலைவியிடம் புகார் செய்து என் மீது நடவடிக்கை எடுக்க சொல்லுங்கள் என்று சொல்கிறார்கள்.இதற்க்காகவா இவர்களுக்கு ஒட்டு போட்டு வெற்றி பெறவைத்தோம் என்று நினைக்கும் போது வேதனையாக இருக்கிறது.
இதை கேட்க்க யாரும் இல்லையா என்று நாங்கள் நினைத்து கொண்டு இருக்கும் சமயத்தில் ஜமாத்தார்கள் தயவு செய்து நியாயமான முறையில் மக்களுக்காக அதுவும் நமக்காக ஒரு நல்ல பதிலை எதிர்பார்க்கிறோம். தயவு செய்து வேறுபாடு பார்க்காமல் நம் அனைவரும் ஒன்று தான் என்று நல்ல முடிவை எடுங்கள் இறைவனுக்கு பயந்து செயல் படுங்கள்..
“ நாம் எதை கொண்டுவந்தோம் எதை எடுத்து செல்வதர்க்கு”
”நன்மையை செய்தால் மருமையில் இறைவனிடம் பலமடங்கு கூலி கிடைக்கும்”
8. Send your opinion/comment if u can. posted byAbdul Wahid S. (Kayalpatnam)[03 April 2013] IP: 123.*.*.* India | Comment Reference Number: 26656
இதுபோல எங்களது ஜமத்தைசார்ந்த (அப்பபள்ளி & மரைக்கார் பள்ளி - 8 & 9 வார்டு நகராட்சி மன்ற) உறுப்பினர்கள் மீதும் ஜமா-அத் சார்பில் கண்டன் தீர்மானம் நிறைவேற்றவேண்டும் என்று ஊரிலுள்ள ஜமா-அத்தை சார்ந்த பலர் கருதுகின்றனர்.
இது விசயமாக தங்களது கருத்துக்களை (அப்பா பள்ளி மற்றும் மரைக்கார் பள்ளி ஜமா-அதைச்சார்ந்த வெளிநாடு மற்றும் வெளியூரில் வசிக்கும் நபர்கள் மட்டும்) கீழ்க்கண்ட எனது மின்-அஞ்சல் அல்லது செல் போன் மூலம் தெரிவிக்கலாம்.
(Prefer e-mail rather than cell phone)
இந்த இரு உறுப்பினர்களும் தேர்தல் நேரத்தில் ஜமா-அத்தினர்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று, "முக்கியமான விசயங்களில் ஜமா-அத்துடன் கலந்து பேசி முடிவெடுப்பேன்" என்பது இங்கு குறிப்பிட தகுந்தது.
உங்களது கருத்துக்கள் ஜம-அத் கூட்டம் நடக்கும் பட்சத்தில் ஜம-அத்தினர் முன்பு எடுத்து வைக்கப்படும், இன்ஷா-அல்லாஹ்.
9. Re:... posted bySeyed MBS Ahamed (Japan)[03 April 2013] IP: 126.*.*.* Japan | Comment Reference Number: 26661
Dear Admin,
This is regarding comments post by user Naleefa with email address ffathima23@yahoo.com
Comment Reference Number: 26642
I contact this user personally by email address specified ffathima23@yahoo.com but I got error for email address
The error that the other server returned was:
554 delivery error: dd This user doesn't have a yahoo.com account (ffathima23@yahoo.com) [-5] - mta1175.mail.ne1.yahoo.com
This user Naleefa is not real name and it's fake id by spreading False information between the people. This user is trying to create bad image to my uncle S.A.Samu Haji. It's creating false image to our family. Our family is well known to the people in our Area. I would be happy if you avoid this comment from unknown user.
Seyed MBS Ahamed
seyed.ahamed@gmail.com
Administrator: Thanks for your information. We will followup on your information
10. Re:... posted byமுத்துவாப்பா.... (al khobar)[03 April 2013] IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26664
புதுப்பள்ளி ஜமாஅத் நிர்வாக குழுவிற்கு , நம் ஜமாத்தின் மீது கொண்ட மரியாதையின் காரணமாகவும் , அநீதிற்கு எதிராக குரல் கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கை காரணமாகவும் , தாங்க பரிந்துரைத்த வேட்பாளருக்கு எங்கள் குடும்ப ஓட்டுக்கள் அனைத்தையும் சிந்தாமல் சிதறாமல் அளித்து வெற்றிற்கு உதவினோம் .
ஆனால் அவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நமது வார்டின் நன்மைக்காக எதுவும் செய்ததாக தெரியவில்லை , மேலும் நல்லது செய்ய நினைக்கும் தலைவியையும் செய்ய விடாமல் முட்டுக்கட்டை போட்டு கொண்டிருக்கின்றார்கள் .
ஆகவே தாங்கள் பரிந்துரைத்த நமது வார்டு உறுப்பினர் மீது நம்பிக்கை இழந்துவிட்டோம் , ஆகவே தாங்கள் மறுபடியும் ஒரு ஜமாஅத் தேர்தல் வைக்க வேண்டும் அதில் அவர் தன்னுடைய பெரும்பான்மையை நிரூபித்து காட்டட்டும் பார்க்கலாம் . ..
11. Re:... posted bys.e.m. abdul cader (bahain)[03 April 2013] IP: 109.*.*.* Bahrain | Comment Reference Number: 26670
WELL DONE. WE HAVE TO PEEL THE FACE OF THIS GHOST IN THE PUBLIC PLACE , THESE KIND OF GUYS AGAINST OUR JAMATHS AS WELL AS KAYALS. THESE GUYS WANT ONLY VOTES NOT OUR JAMATH/ KAYAL'S WELL THINGS. WE HAVE TO TELECAST THE JAMATH EVENT WHILE QUESTING THESE CULPRIT GUYS. HOW THEY WILL KEEP THE FACE IN PUBLIC AS WELL AS IN JAMATH ? PLEASE IMAGE LIKE A GHOST?
12. Preach what you practice posted byAbdul Wahid S. (Kayalpatnam)[03 April 2013] IP: 123.*.*.* India | Comment Reference Number: 26676
There is an English quote which goes, "Practice what you preach".
If someone wants certain "yardstick" to be used to measure his family name/status, he should first learn to use the same yardstick to measure others and their families.
In other word "Do not preach what you can't practice".
Is it not easier to preach than practice?
13. நல்லதொரு வேண்டுகோள் !! posted bySalai Mohamed Mohideen (KPM)[04 April 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 26677
லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்துள்ளது. நியாயப்படி பார்த்தால், பள்ளி நிர்வாகங்கள் தாங்களாகவே முன் வந்து எப்பொழுதோ (தாங்கள் ஆதரித்த கவுன்சிலர்களிடம்) விசாரித்திருக்க வேண்டும்... ஏனென்றால் நகர்மன்றத்தில் என்ன நடக்கின்றதென்று அறியாதவர்கள் ஒருவருமில்லை.
நிர்வாகங்கள் அமைதியாக இருப்பதும் அல்லது கண்டும் காணாது போல இருப்பதும் கூட (தெரிந்தோ / தெரியாமல் நடக்கும் ) தவறுகளுக்கு துணை போனதற்க்கு சமம். பள்ளி நிர்வாகம் கூப்பிடுவதற்கு வாய்ப்பு தராமல் தானாகவே உறுப்பினர்கள் ஆஜராகி தன்னிலை விளக்கம் தரவேண்டும்.
பள்ளி நிர்வாகங்களினால் தேர்ந்தெடுக்க பட்டவர்கள் நிச்சயம் தொழுகையாளியாக பள்ளியுடன் & நிர்வாகத்துடன் நல்லதொரு தொடர்பு உடையவராக நகரமன்ற நடப்புகளை நிர்வாகத்துடன் பகிர்ந்து அவர்களுடன் கலந்தாலோசித்து முடிவு எடுப்பவராகவே இருப்பார்கள். அப்படியில்லையென்றால் பள்ளி நிர்வாகங்கள் தங்கள் ஜாமத்தின் சார்பாக அவர்களை அனுப்பியிருக்க மாட்டார்கள்.
பொது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற உறுப்பினர்களை (வார்டு) மக்கள் பொது இடத்தில் ( நேரில்) விசாரிக்க போகின்றார்களா என்ன ? எது எப்படியோ ஊருக்கு நல்லது நடந்தால் சரிதான் !
16. Re:... posted byriyaz (hongkong)[04 April 2013] IP: 218.*.*.* Hong Kong | Comment Reference Number: 26698
புதுப்பள்ளி ஜமாத்தார் எகோபித்தமாக இவரை தேர்ந்தெடுக்கவில்லை. இவரும் போட்டி இட்டு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தானே, வாக்குகள் கொடுத்திருக்கலாம் யார் தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறார்கள்.
முதலில் குப்பை கொட்டும் ஜடங்களை, ஒட்டு போட்ட ஜடங்கள் தானாக திருந்த வேண்டும். இவரை குறை சொல்லி என்ன புண்ணியம் ??? ரிழ்வான் சங்கம் புதுப்பள்ளி போகும் பாதையில் குடியிருக்கும் மக்களே குப்பை கொட்டுகிறார்கள் அவர்களுக்கு புத்தி எங்கே போயிற்று, சற்று நினைத்து பார்க்க வேண்டாமா தொழ போகுபவர்கள் அந்த சந்தை புலங்குபவர்கள் நம்மை சார்ந்தவர்கள் என்று!!
நகராட்சியால் குப்பையை சுத்தம் பண்ண முடியாமல் இருக்கும் போது உறுப்பினரா சுத்தம் பண்ணுவார். தைக்கா தெரு ஜமாத்தார்கள் தயவு செய்து முடிந்தால் குப்பையை கொட்டுபவர்களை திருத்த நினையுங்கள், இல்லையேல் ரிழ்வான் சங்கம் புதுப்பள்ளி சந்தை சுத்தம் பண்ணும் செலவை நான் பொறுப்பேற்கிறேன். இதே போன்று மற்ற இடங்களை நலன் விரும்பிகள் சுத்தம் செய்யுங்களேன். நன்மையாவது கிடைக்கும்.
. புதுப்பள்ளி ஜமாஅத் உறுப்பினர்கள் ஒன்றும் 10 or 15 கொன்றவர்கள் மட்டும் அல்ல, எல்லோரும் சேர்ந்து கொடுக்க வேண்டும், எத்தனை பேர் இதில் கையொப்பமிட்டார்கள் என்று தெரியவில்லையே, அந்த பக்கத்தையும் அட்மின் போட்டு இருக்கலாமே, சும்மா எடுததுகேல்லாம் நோடிசு மனு ......
உப்பு சப்பு இல்லாத விவாதங்கள் வெட்டி கதைகள் எடுததுகேல்லாம் குழு, சங்கம், etc ...... போர் அடிக்கிறாங்க
17. முன்னுதாரணம்! posted byகத்தீபு முஹம்மது முஹ்யித்தீன் (Kayalpatnam)[05 April 2013] IP: 115.*.*.* India | Comment Reference Number: 26700
செயலற்ற மன்றத்து உறுப்பினர்களின் Accountability நடுநிலையாளர்களால் கேள்விக்கணையாக வைக்கப்படும் இத்தருணத்தில் புதுப்பள்ளி ஜமாஅத்தாரின் இந்த முயற்சி காலம் கடந்ததாயினும், நிச்சயம் பாராட்டுக்குரிய முன்னுதாரணம்.
நியாயப்படி சொல்லப்போனால், இந்த நகராட்சியில் அதிகப்படியான பிரதிநிதித்துவத்தை வழங்கி நம் நகரே இந்த ஜமாஅத்தைப் பெருமைப் படுத்தி அழகு பார்த்து இருக்கிறது.
அதே போன்று, மிகச்சிறந்த கட்டுக்கோப்பும், பாரம்பரியமும் மிக்க கோமான், தாயிம் பள்ளி போன்ற ஜமாஅத்கள், நம் நகர்மன்றத்தின் இன்றைய சீர்கேடுகளுக்கு முன்னணி வகுக்கும் தத்தமது பிரதிநிதிகளைத் திருத்தி அமைக்க என்னென்ன முன்னேற்பாடுகள் செய்துள்ளார்கள் என்பது பற்றிய செய்திகள் இனி ஒன்றன் பின் ஒன்றாக வெளி வரலாம்
துரதிர்ஷ்டவசமாக, அவர்களுக்குள் (நகர்மன்றத்தவருக்குள்) சரியான பிணைப்பு இல்லை; சொந்த விருப்பு வெறுப்புகளின் பிரதிபலிப்பில் ஊடகங்களின் ஊடாக வெளிப்படுத்தப்படும் காழ்ப்புணர்ச்சிகள்; தரமற்ற வார்த்தைப் பிரயோகங்கள், என்று இப்படி எல்லாமுமாக சேர்ந்தன மட்டுமல்லாமல், நம்மனைவர்களின் போலி மௌனங்களும் அவைகளுக்கு உரமூட்டி - செயலூக்கமிக்க தலைமையை பெற்றிருந்த போதிலும் - செயலற்ற நகராட்சிக்கு நாமே வித்திட்டு விட்டோமோ? என்று காரணிப்படுத்துகிறது.
இத்தகைய சூழலில், தம் முஹல்லாவுக்குட்பட்ட அனைத்து உறுப்பினர்களிடமும் அந்தந்த ஜமாஅத்தின் நிர்வாகிகள் தீர்க்கமாக ஆய்வு செய்து காய்தல் உவத்தலின்றி நல்லதொரு தீர்வினை வழங்குவார்கள் என எதிர்பார்ப்பது காலத்தின் கட்டாயம்.
18. நம்பிக்கை இல்லை - Appa Palli councillor posted byahamed mustafa (Dubai)[05 April 2013] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 26703
எங்கள் ஜமாஅத், அப்பா பள்ளி & மரைகார் பள்ளி councillor தன்னிச்சையாக முடிவு எடுத்து செயல் படும் விதம் கண்டிக்க தக்கது. Please if somebody from our Jamaath is listening, why don't we question her authority to take such a step on her own against the interest of the Public.. We rather hold together to impeach her out of the post. She has done nothing to the streets so far. இவரின் நடவடிக்கைகள் is like a Non-cooperation movement & please ask her to step down with immediate effect..
19. உங்களை மற்றவர்கள் விளங்கி கொள்ள இது ஒரு உதாரணமாக அமைந்தது.. posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[05 April 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 26710
1) புதுப்பள்ளி ஜமாத்தார் எகோபித்தமாக இவரை தேர்ந்தெடுக்கவில்லை. (C P)
2) யார் தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறார்கள். (C P)
சகோதரர் ரியாஸ்.. சொல்வதை விட சம்பந்தப்பட்ட 16 வது வார்டு உறுப்பினர் சகோதரர் சாமு ஹாஜி இதை சொல்வது சிறந்தது..!
3) நகராட்சியால் குப்பையை சுத்தம் பண்ண முடியாமல் இருக்கும் போது உறுப்பினரா சுத்தம் பண்ணுவார். தைக்கா தெரு ஜமாத்தார்கள் தயவு செய்து முடிந்தால் குப்பையை கொட்டுபவர்களை திருத்த நினையுங்கள், (C P)
4) புதுப்பள்ளி ஜமாஅத் உறுப்பினர்கள் ஒன்றும் 10 or 15 பேர் கொண்டவர்கள் மட்டும் அல்ல, எல்லோரும் சேர்ந்து கொடுக்க வேண்டும், எத்தனை பேர் இதில் கையொப்பமிட்டார்கள் என்று தெரியவில்லையே, (C P)
சகோதரர் ரியாஸ் அவர்கள் தானும் அந்த ஜமாத்தை சார்ந்தவர் என்று கூட தெரியாமல் - அறியாமையால் குழம்பி போய் தடுமாறி கருத்து பதிகிறார்..!
தெருவில் குப்பை கொட்டுபவர்களை திருத்த முயற்சிப்பது கடினம் ஆனால் அந்த குப்பையை சுத்தம் செய்ய வண்டி ஏற்பாடு செய்வது உறுப்பினரின் கடமை அல்லவா..!
10 - 15 பேர் மட்டும் கையெழுத்து இடவில்லை ஆண் - பெண் இருபாலரும் கலந்து ஏறத்தாழ 150 க்கும் மேல் கையெழுத்து இட்டுள்ளதாக தகவல்.
5) உப்பு சப்பு இல்லாத விவாதங்கள் வெட்டி கதைகள் எடுததுகேல்லாம் குழு, சங்கம், etc ...... போர் அடிக்கிறாங்க..(C P)
போர் அடிக்காம இருக்க நீங்கள் எதை விரும்புகிறீர்...?
சகோதரர் ரியாஸ் அவர்கள் எங்கள் புது பள்ளி ஜமாத்தை சார்ந்தவர். ஜமாத்துக்கு அளிக்கப்பட்ட மனுவை நியாயத்தின் அடிப்படையில் அவர் படித்தால் மட்டுமே எது சரி - எது தவறு என்று பிரித்து அறிய முடியும். அவரது இக்கருத்து ஒருவரை அல்லது இருவரை வேண்டுமானால் சந்தோஷ படுத்தலாம்.. ஆனால், பிறர் பலர் படித்து அவரை விளங்கி கொள்ள இது ஒரு உதாரணமாக அமைந்தது.. மிக்க மகிழ்ச்சி..
20. Re:... posted byriyaz (hongkong)[05 April 2013] IP: 218.*.*.* Hong Kong | Comment Reference Number: 26713
நண்பர் தமிழன் இஸ்மாயில் அவர்களே நீங்கள் என்ன எனக்கு ISI முத்திரை பதித்து தைக்கா தெரு ஜமாஅத் சேர்ந்தவன் என்கிறீர் என்னுடைய கமெண்ட் படித்த அனைவரும் புரிந்து கொள்ளும் புத்திசாலிகளாக இருப்பார்கள்.
மேலும் 3 மாதங்களுக்கு முன் நான் ஊரில் இருக்கும் பொது ரிழ்வான் சங்கம் புதுப்பள்ளி சந்தில் குப்பை வண்டி நிறைந்து இருதது எவரும் சுத்தம் செய்யவில்லை செய்யப்படவும் இல்லை. சற்று நாட்கள் களித்து பார்த்தல் குப்பை வண்டியே காணோம் எங்கே போனது குப்பை வண்டி???
இந்த மனு குடுக்கும் முன் வாய் மொழியில் கூப்பிட்டு ஜமாஅத் மூலமாக சாமு காக்காவிடம் கேட்டு இருக்கலாம். அவர் என்ன வர மாட்டேன் என்று சொல்லி இருப்பாரோ ???
நல்லபடியா ஜமாஅத் கொண்டு போங்க என்னால் முடிந்த உதவி எப்பவும் ஜமாத்திற்கு இருக்கும். மேலும் கமெண்ட் கொடுத்து புதுப்பள்ளி ஜமாத்தை இழிவு படுத்த விரும்பவில்லை. சொல்ல வேண்டுமானால் நிறைய சொல்லலாம் காலம் பத்தாது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross