தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரியம் உத்தவிட்டுள்ளதை வரவேற்பதாக மத்திய சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சர் ஜெயந்தி நடராஜன் கூறினார்.
சென்னை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த உத்தரவை வரவேற்கிறேன்.
ஸ்டெர்லைட் ஆலை மட்டுமின்றி இந்தியாவில் உள்ள எந்த ஒரு ஆலையும் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலோ, மாசு ஏற்படுத்தும் வகையிலோ செயல்படுவதை எனது அமைச்சகம் அனுமதிக்காது. இதை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வர இருப்பதால் மேற்கொண்டு நான் எதுவும் கூற முடியாது.
1. மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி posted byHusain Noorudeen (Abu Dhabi)[02 April 2013] IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 26620
மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட 2010ம் ஆண்டு சென்னை ஐகோர்ட் விதித்திருந்த தடையை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் பசுமை தீர்ப்பாயத்திடம் மனு கொடுத்தது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டிலும் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனு இன்று விசாரிக்கப்பட்டு, இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் ஆலையை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
2. ஸ்டெர்லைட் ஆலை - தொடர உச்ச நீதிமன்றம் அனுமதி. posted byV D SADAK THAMBY (Guangzhou,China)[02 April 2013] IP: 113.*.*.* China | Comment Reference Number: 26622
சற்று முன் கிடைத்த தகவல்:-
ஸ்டெர்லைட் ஆலையை மூடும் உயர் நீதி மன்ற உத்தரவுக்கு இன்று உச்ச நீதிமன்றம் சம்மதம் வழங்க மறுத்துவிட்டது. . அதாவது , ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து நடத்த உச்ச நீதிமன்றம் வழங்கிய இந்த உத்தரவு அனுமதிக்கிறது.. ஒரு சில கோடிகளை (100 கோடி ரூபாய் அல்லது அதற்க்கு மேல் , பிறகு நிர்ணயிக்கும் தொகையை) அபராதமாக செலுத்தவேண்டும் என்ற நிபந்தனையுடன் நிர்வாகம் தொடர்ந்து ஆலையை நடத்தலாம்.
இதேபோன்றுதான் DCW வின் விஷயத்திலும் நீதி மன்றங்களின் நிலைப்பாடு இருக்கும்.
சமுதாயம் முன்னேறுவதற்காக, வேலைவாய்ப்பு பெருகுவதற்காக தொழில் வளம் கொழிக்கவேண்டும் என்று முதலில் நாம் கேட்கிறோம்.தொழிற்சாலைகள் அமைந்துவிட்ட பிறகு, பல்வேறு காரணங்களுக்காக அதை நாம் இழுத்து மூடசொல்வது சரியான அணுகுமுறை இல்லை.
மாசு கட்டுப்பாட்டு வாரிய நெறிமுறைகளை ஒழுங்காக அமுல் படுத்த வேண்டியே நாம் ஆலை நிர்வாகத்தை வற்புறுத்த முடியும். இழுத்து மூடசொல்வது சரியல்ல.பெருமளவு பணம் முதலீடு செய்த முதலாளியின் தரப்பிலிருந்தும் நாம் நோக்க வேண்டும்.எல்லா ஆலைகளுக்கும் இது பொருந்தும்.தொழிற்சாலைகள் இல்லையெனில் நாட்டில் முன்னேற்றமில்லை . கூடங்குளம் அணு மின்நிலையத்திர்க்கும் இதே போன்ற நடைமுறைதான்..
3. Re:... posted bySEYED ALI (ABUDHABI)[03 April 2013] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 26663
தொழில் வளம் பெருகவேண்டும்,வேலை வாய்ப்புகள் பெருகவேண்டும் என்பதெல்லாம்,எதற்க்காக ஒரு ஜான் வயிற்றுக்காக,தன குடும்பமும் பிள்ளை குட்டிகளும் நன்றாக உண்டு நலமுடன் வாழ்வதற்காக.சரி இத்தனையும் தருகிறேன் அதற்க்கு மேலும் தருகிறேன் ஆனால் ஒரு கண்டிஷன்,மாதாமாதம் நான் தரும் ஒரே ஒரு தம்ளர் விஷத்தை மட்டும் நீங்களும் குடித்து,உங்கள் பிள்ளை குட்டிகளுக்கும் கொடுக்க வேண்டும்,சரியா என்று எவனாவது கேட்டால் நாம் என்ன பதில் சொல்வோமோ,அதுதான் இந்த ஸ்டெர்லைட் போன்ற விஷம் கக்கும் தொழிற்ச்சாலைக்கும்.வேண்டாம் இப்படிப்பட்ட தொழில்வளம். இதைவிட இயற்கையின் பசுமையே மேல்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross