இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகமெங்கும் போராட்டங்கள் பல வகைகளில் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழகத்திலுள்ள கல்லூரி மாணவ-மாணவியர் போராட்டத்தில் இறங்கினர். இதனால், மாநிலமெங்கும் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்ற அச்சம் நிலவியது.
இதனையடுத்து, கடந்த மார்ச் மாதம் 17ஆம் தேதி முதல் கல்லூரிகளுக்கு கால வரையரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது நிலமை சீரடைந்து வருவதால், இம்மாதம் 03ஆம் தேதியன்று மீண்டும் கல்லூரிகள் கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, கால வரையரையற்ற விடுமுறை 18 நாட்களில் நிறைவுற்றுள்ளது. |