காயல்பட்டினத்திலுள்ள, ஆறுமுகநேரி - காயல்பட்டினம் - திருச்செந்தூர் நெடுஞசாலையில், தமிழக நெடுஞ்சாலைத் துறை மூலம் புதுிய சாலை அமைக்கப்பட்டுள்ளது.
புதிய சாலை அமைப்புப் பணிகள் துவங்கவுள்ளதையொட்டி, அப்பகுதிகளில் ஆயத்தப்பணிகள் அண்மையில் செய்யப்பட்டது.
இந்நிலையில், 30.03.2013 அன்று புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. காயல்பட்டினம் எல்.எஃப்.வீதியிலிருந்து, திருச்செந்தூர் சாலை - கே..எம்.டி. மருத்துவமனை வரை இச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
புதிய சாலையின் தரம் குறித்து, சாலை அமைப்புப் பணிகளை மேற்பார்வையிட்ட அலுவலரிடம் வினவுகையில், வரையறுக்கப்பட்டுள்ள அளவின்படி தரமாகவே சாலைகள் போடப்படுவதாகவும், காயல்பட்டினத்தில், கழிவு நீர் வடிகாலுக்கென நிரந்தர அமைப்பு எதுவும் இல்லாததால், மழைக்காலத்தின்போது இச்சாலையும் பழுதாகலாம் என்பதை மறுப்பதற்கில்லை என்றும் கூறினார்.
எனினும், சில ஆண்டுகளாக குண்டும் குழியுமாக இருந்து, பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பளித்து வந்த இப்பகுதியில் புதிய சாலை அமைக்கப்பட்டுள்ளமை பொதுமக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
படங்களில் உதவி:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் (காயல்பட்டணம்.காம்) |