காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா சேக் மீது நகர்மன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். 11 குற்றச்சாட்டுக்கள் அடங்கிய மனுவினை உறுப்பினர்கள் மார்ச் 8, 2013 அன்று திருநெல்வேலியில் உள்ள நகராட்சி நிர்வாகத்துறையின் மண்டல இயக்குனர் டி. மோகனிடம், வழங்கினர்.
அதனை தொடர்ந்து மண்டல இயக்குனர் டி. மோகன் - மார்ச் 21, 2013 தேதியிட்ட அறிவிப்பினை, மார்ச் 22, 2013 அன்று நகர்மன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு வழங்கினார். அதில் - உறுப்பினர்கள் சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட மனுவின் மீதான விவாதம், காயல்பட்டினம் நகர்மன்றத்தில் ஏப்ரல் 5, 2013 அன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து - காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர், சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு ஒன்றினை தொடர்ந்தார். அந்த வழக்கு ஏப்ரல் 1 அன்று விசாரணைக்கு வந்தது. நகர்மன்றத் தலைவர் சார்பாக மூத்த வழக்கறிஞர் எம். அஜ்மல் கான் ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதி கே.கே. சசிதரன் - வழக்கறிஞர் அஜ்மால் கானின் வாதங்களை தொடர்ந்து, அரசிடம் சில விளக்கங்கள் கோர - வழக்கினை மீண்டும் ஏப்ரல் 3 அன்று விசாரிக்க ஒத்திவைத்தார்.
மீண்டும் இவ்வழக்கு இன்று (ஏப்ரல் 3) விசாரணைக்கு வந்தது.
இன்றைய விசாரணையில் நகர்மன்றத் தலைவர் சார்பில் M/S AJMAL ASSOCIATES சட்ட நிறுவனத்தை சார்ந்த வழக்கறிஞர் மெஹபூப் ஆதிப் ஆஜரானார். அரசு சார்பில் வழக்கறிஞர் கே. மகேஷ் ராஜா ஆஜரானார். தங்களை இவ்வழக்கில் இணைத்துக்கொள்ள விண்ணப்பத்திருந்த நகர்மன்ற உறுப்பினர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல். சுந்தரேசன் ஆஜரானார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சசிதரன் - நகர்மன்றத் தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முறைகள் பின்பற்றப்படவில்லை என்று கூறி ஏப்ரல் 5 (வெள்ளிக்கிழமை) அன்று நடைபெற இருந்த நம்பிக்கையில்லா தீர்மான கூட்டத்திற்கு தடை விதித்தார்.
1. Re:... posted bynaleefa (kayalpatnam)[03 April 2013] IP: 123.*.*.* India | Comment Reference Number: 26643
அஹா...வந்திருச்சா தடைவிதிச்சுட்டாங்களா ...பின்ன விதிக்காம என்ன பன்ன முடியும்..அப்படி என்ன குறை இருக்கிறது தலைவி மேல்..வாழ்த்துக்கள் தலைவி அவர்களே வாழ்த்துக்கள்.உங்கள் பணி இனி தடையில்லாமல் தொடர வாழ்த்துக்கள்.
6. எங்கயோ இடிக்குதே? posted byஹைதுரூஸ் ஆதில் (கோழிக்கோடு-கேரளா)[03 April 2013] IP: 122.*.*.* India | Comment Reference Number: 26649
சூடான செய்திகளை அந்த சூடு ஆறுவதற்கு முன் தருவதிலே முன்னணியில் இருப்பது இந்த இனைய தளம் தாம் என்பதில் மாற்று கருத்து இல்லை.
ஆனால்,
""""இதனை தொடர்ந்து - காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர், சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு ஒன்றினை தொடர்ந்தார். அந்த வழக்கு ஏப்ரல் 1 அன்று விசாரணைக்கு வந்தது. நகர்மன்றத் தலைவர் சார்பாக மூத்த வழக்கறிஞர் எம். அஜ்மல் கான் ஆஜரானார்."""
இந்த செய்தியை ஏன் அன்றே தரவில்லை. இல்லை அதெல்லாம் விசாரிக்காமல் நாம் எப்படி செய்தியை வெளிடுவது என்பது உங்களின் பதில் ஆக இருந்தால்....
""""மீண்டும் இவ்வழக்கு இன்று (ஏப்ரல் 3) விசாரணைக்கு வந்தது."""""
இதை மட்டும் ஏன் உடனடியாக வெளியிட்டீர்கள். எங்கயோ இடிக்குதே?
அதெல்லாம் கேட்பதற்கு உங்களுக்கு உரிமை இல்லை என்பது உங்கள் பதில் ஆக இருந்தால்.!? நாம் ஒன்றும் சொல்வதற்கு இல்லை.
7. Re:... posted byP.S.ABDUL KADER (JEDDAH)[03 April 2013] IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26653
இது நகரமன்ற தலைவியின் 2 ஆண்டு ஆட்சி சாதனை அணுகுமுறையில் அணைத்து சுயட்சை நகர மன்ற உறுபினர்களை ஆளும் அ.தி.மு.க.வில் இணைக்க வழிகாட்டியாக தூண்டுதலுக்கு கிடைக்கபெற்ற தீர்ப்பு.
இது ஆபிதா அம்மையார்க்கு கிடைத்த வெற்றி அல்ல.
இந்திய அரசியல் சட்டம் தெரியாது சாடிய சூழ்ச்சி காரருக்கு கிடித்த அடி.
நகரமன்ற உறுபினர்களை ஊக்கம் கொடுத்து சூழ்ச்சி செய்த சூழ்ச்சியாளர்க்கு இது ஒரு தக்க பாடம்.
8. Re:... posted byVilack SMA (HCM)[03 April 2013] IP: 14.*.*.* Vietnam | Comment Reference Number: 26654
நல்லா பொழுது போகுது .
பல வருடங்களுக்கு முன் துக்ளக் பத்திரிகை ஆசிரியர் திரு . சோ . அவர்கள் சொன்னது . நம் நாட்டு சட்ட திட்டங்களும் , நீதிமன்ற தீர்ப்புகளும் வேடிக்கையானது . கீழ் கோர்ட்டு தடை விதிக்கும் . மேல் கோர்ட்டு அதை நீக்கும் . இங்கே இருக்கும் சட்ட புத்தகங்கள்தானே அங்கேயும் இருக்கிறது . தீர்ப்பு வழங்குவதில் ஏன் இந்த முரண்பாடு என்று வேடிக்கையாக கூறினார் .
நம்பிக்கையில்லா தீர்மானம் வரும் . நம்பிக்கையுடன் இருப்போம் .
9. Re:... posted byCnash (Makkah)[03 April 2013] IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26655
அடுத்து என்ன.... உறுப்பினர்கள் எதாவது குழிதோண்டுற வழி தேட வேண்டியது தான் !!! எதையாவது செய்துகொண்டு இருந்தால் தானே நகராட்சியில் எந்த வேலையும் நடக்காமல் இருக்க செய்ய முடியும் ... இப்படி இன்னும் ஒரு மூன்று வருடம் முட்டி முட்டி பார்க்க வேண்டியது தான்.. என்ன செய்ய அங்கே ஒருவருக்கு மானபிரச்சனை...... சிலருக்கு வருமான பிரச்னை!!
இடையில் மக்கள் பிரச்சனைக்கு வழி... அது தன்னாலே தீர்ந்து விடும்.... அது தான் நம்ப மானமிகு உறுப்பினர்கள் அம்மா கட்சியில் இணைந்துவிட்டார்களே!!
11. வாங்க வாங்க posted bySUBHAN.N.M.PEER MOHAMED (ABU DHABI)[03 April 2013] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 26658
சரி சரி அடுத்த நகர் மன்ற கூட்டம் நடைபெறும் போது புகார் குடுத்த எல்லா உறுப்பினர்களும் வந்து உங்களுக்கு தரப்படும் பணத்தை மறக்காமல் வாங்கிட்டு போங்க ....அதையாவது மறப்பதாவது ....வெளினடப்புன்னு முடிவு செய்துவிட்டு வந்தாலும் அதை மட்டும் மறக்க மாட்டீர்கள்
13. ஆப்புகள் அணி மாறுகின்றன! posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (yanbu)[03 April 2013] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26666
ஆப்புகள் அணி மாறுகின்றன!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
"ஆ" க்குள்ள ஆப்பு "அ"வை நோக்கி செல்கிறது!
"அ" விடமே நிலைக்குமா அல்லது "ஆ" வை நோக்கிநகரும? அவதானிப்போம்!
அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்!
அடுத்த அபாயமான அசிங்கமான் நாளை எண்ணி நாணும்,
ஆதம் சுல்தான்.
17. Re:... posted byshaik abbas faisal D (kayalpatnam)[03 April 2013] IP: 180.*.*.* India | Comment Reference Number: 26672
section 44a கு பதிலாக 44 b இல் பதவு செய்தால் தலைவி & கோ வின் ஆட்டம் முடிவுக்கு வந்து விடும், எனவே கொஞ்சம் பொறுத்திருந்து பாரும், பாப்போம், உங்கள் வழக்கரிஞ்சரின் வாதத்திறமையால் ஒன்னும் இந்த தடை இல்லை, நீதிபதி தானாகவே section தவறினால் தடை விதித்துள்ளார்.
19. Re:... posted byAM.NOORMOHAMEDZAKARIYA (KAYALPATNAM)[03 April 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 26675
அஸ்ஸலாமு அலைக்கும்...
இன்றைய விசாரணையில் நகர்மன்றத் தலைவர் சார்பில் M/S AJMAL ASSOCIATES சட்ட நிறுவனத்தை சார்ந்த வழக்கறிஞர் மெஹபூப் ஆதிப் ஆஜரானார். அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல். சுந்தரேசன் ஆஜரானார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சசிதரன் - நகர்மன்றத் தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முறைகள் பின்பற்றப்படவில்லை என்று கூறி ஏப்ரல் 5 (வெள்ளிக்கிழமை) அன்று நடைபெற இருந்த நம்பிக்கையில்லா தீர்மான கூட்டத்திற்கு தடை விதித்தார்.மிகவும் சந்தோசமான செய்தி .... யாருக்கு...?
மக்களுக்கா..? இரு தரப்பாரும் ஒரு சுமூக நிலையை அடைய .சமுகத்தின் அனைத்து அமைப்புகளும் முயற்ச்சிக்க வேண்டும்.எல்லா புகழும் அல்லாஹ்விற்கே! சத்தியம்(உண்மை) என்றும் அழிவதில்லை.
'(நபியே) உம்மைச் சிறைப்படுத்தவோ அல்லது உம்மைக் கொலை செய்யவோ அல்லது உம்மை ஊரை விட்டு வெளியேற்றவோ நிராகரிப்போர் சூழ்ச்சி செய்ததை நினைவு கூறுவீராக! அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர். அல்லாஹ்வும் அவர்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். சூழ்ச்சி செய்வோரில் எல்லாம் அல்லாஹ் மிகவும் மேன்மையுடையவன்' (அல்குர்ஆன் 8:30).
Section A யோ, Section B யோ எல்லாம் வல்ல நாயன் சத்தியத்திற்கு மட்டுமே துணை நிற்பான். நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தடை விதிக்கப்பட்ட தீர்ப்பினை எண்ணி நாம் ஆகாயம் வரை துள்ளிக் குதிக்கவும் வேண்டாம். ஆர்ப்பரித்து ஆனந்தக்கூத்தாடி ஆவேசப்படவும் வேண்டாம்.
நகர் மன்றத்தலைவி கூறியது போல் நமதூருக்கு எது நன்மையோ அதை அல்லாஹ் நாடுவான். நாமும் விருப்பு வெறுப்பு நீங்கி மனக் கசப்புகளை மறந்து இனி வருங்காலங்களில் இனியவராகத் திகழ வல்ல நாயன் அருள் புரிவானாக! ஆமீன். -ராபியா மணாளன்.
22. இறைவனின் தடை... யாரால் மாற்ற முடியும்...? posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[04 April 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 26687
அணைத்து சமுதாய மக்களின் நல் மதிப்போடு, ஆதரவோடு இந்த நகரமன்ற தலைவி பதவியேற்ற நாளில் ஆறு மாதத்திற்குள் இந்த நகரமன்ற தலைவியின் பதவியை தூக்கி வீசுகிறேன் பார் என்று நகரில் ஒரு தனிமனிதர் தனக்குள் ஒரு சபதம் எடுத்தார். அவர் சொன்ன ஆறு மாதம் கடந்து இரண்டு வருடமும் நிறைந்து விட்டது... மக்கள் போற்றும் காயல்பட்டினம் நகர பெண் தலைவி.. தலைவியாகவே நகர்மன்றத்தில் பதவி வகித்து வருகிறார்கள்....
நகரில் தலைதூக்கி வந்த தனிமனித ஆதிக்கங்களை வேரோடு சாய்த்தவர் - முற்று புள்ளி வைத்தவர் இந்த ஆபிதா சேக் என்பது குறிப்பிடத்தக்கது...
நகரின் அணைத்து சாதி சமய மக்களாலும் போற்றி புகழ கூடிய ஒரு நல்ல நகரமன்ற பெண் தலைவருக்கு பண பலத்தால், அரசியல் பலத்தால் இடையூறு செய்தவர்களுக்கு இறைவன் கொடுத்த தற்போதைய பயம்..
இந்த தடை உத்தரவால் ஆபிதா சேக் ஆதரவாளர்கள் எந்த ஆரவாரமும் செய்ய போவதுமில்லை...
நகரமன்ற தலைவியின் தீவிர ஆதரவாளன்
தமிழன் முத்து இஸ்மாயில்..
24. Re:... posted byபா.மு.ஜலாலி (Kayalpatnam)[04 April 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 26696
”இந்த மாமனிதரை’ நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். ஏனென்றால் ”விட்டில் புச்சி மாதிரி வலிய வந்து அவமானத்தை” தேடிக்கொள்ள இவரைவிட்டால் யார் இருக்கிறார்கள்?
நமது அவா நமதூர் நகரசபை தலைவி ஆபிதா ஷேக் அவர்களை வரும் சட்டமன்ற தேர்தலில் நமதூர் அனைத்து மக்கள் மற்றும் சுற்று வட்டார சிறுபான்மை மற்றும் அனைவரின் ஆதரவையும் பெற்று வேட்பாளராக அறிவித்து வெற்றி பெற பாடுபட வேண்டும்.
தலைவி அவர்களுக்கு அன்பான வேண்டுகோள். எம் போன்ற நடுநிலையாளர்களின் ஆதரவை எல்லா காலங்களிலும் தக்க வைத்து கொள்ள முன்வர வேண்டும்.
ஆதரவாளர்கள் ஒருபோதும் எதிர்க்க மாட்டார்கள். எதிர்பாளர்கள் ஒருபோதும் ஆதரிக்க மாட்டார்கள். அந்த எதிர்பாளர்களின் ஆதரவை பெறுவதில் தீவிர முனைப்பு காட்டவேண்டும். அந்த தருணத்தில் வெற்றி நமதே!
ஆபிதாவின் நிலையான ஆட்சிக்கு வாழ்த்துக்கள்!
தனிமனித ஆதிக்கம் அழியட்டும்!!
ஊர் நலம்பெற இதர 17 உறுப்பினர்களை எவ்வாறு தகுதி இழக்க செய்வது என்பதை நன்கு ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. புனைக்கு யார் மணி கட்டுவார்கள். நாமாகவே இருப்போம்.
மக்கள் சேவையில்
பா.மு.ஜலாலி
மக்கள் சேவா கரங்கள்
காயல்பட்டணம்.
செல் 94866 37576
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross