காயல்பட்டினம் சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியில், வழமை போல இவ்வாண்டும் - நர்ஸரி கல்வி முடித்து, முதலாவது வகுப்பிற்குச் செல்லும் மழலையரை, கல்வியில் ஊக்கப்படுத்தும் நோக்குடன் மழலையர் பட்டமளிப்பு விழா, 03.04.2013 புதன்கிழமை மாலை 03.00 மணிக்கு நடைபெற்றது.
பள்ளி ஆசிரியை ராமேஷ்வரி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அடுத்து, சிறப்புரையாற்றிய பள்ளியின் முதல்வர் எம்.செண்பகவல்லி, விடுமுறைக் காலங்களில் குழந்தைகளை பெற்றோர் வழிநடத்த வேண்டிய முறைகள் குறித்து விளக்கிப் பேசினார். விடுமுறையை அனுபவிக்க விரும்பும் குழந்தைகளை அளவுக்கு மீறி கண்டிப்பதைத் தவிர்த்து, அவர்கள் விருப்பமறிந்து நல்வழி நடத்துமாறு பெற்றோரை அவர் கேட்டுக்கொண்டார்.
பின்னர், பள்ளியில் நர்ஸரி கல்வி முடித்து முதலாம் வகுப்பிற்குச் செல்லும் 70 மழலையருக்கு அவர் பட்டங்களை வழங்கி வாழ்த்தினார்.
வள்ளியம்மாள் நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை, பள்ளியின் மழலையர் பிரிவு பொறுப்பாசிரியர் ஃபர்ஸானா நெறிப்படுத்தினார்.
இவ்விழாவில், பள்ளியின் ஆசிரியையர், மாணவ-மாணவியர், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். |