இவ்வாண்டு மே, ஜூன் மாதங்களில் இரத்தப் பரிசோதனை இலவச முகாம் நடத்திட ஜெய்ப்பூர் காயல் நல மன்ற (ஜக்வா) செயற்குழு தீர்மானித்துள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:-
இறையருளால் எமது “ஜக்வா“ அமைப்பின் பொதுக்குழுக் கூட்டம், மன்றத் தலைவர் ஹாஜி எம்.ஏ.எஸ்.செய்யித் அபூதாஹிர் அவர்கள் தலைமையில், ஹாஜி எம்.எம்.ஜஹாங்கிர் அவர்கள் இல்லத்தில் 31.03.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 11:15 மணி சுமாருக்கு நடைப்பெற்றது. எமது மன்ற செயலாளர் எம்.ஏ.செய்யது முஹம்மது அவர்கள் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார்.
இக்கூட்டத்தில் பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
1) 31.03.2013 முடிய கணக்குகள் சரி பார்க்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
2) இதுவரை நமது அமைப்பின் மூலம் வழங்கிய கல்வி, மருத்துவ உதவித் தொகையை இக்கூட்டம் அங்கீகரிக்கிறது.
3) நமதூரின் ஆறு இடங்களில் பஸ் கால அட்டவணை நிறுவுவதற்கு முழு ஈடுபாட்டுடன் முயற்சி செய்து வரும் நமது அமைப்பின் உறுப்பினர்களுக்கும், ஆசிரியர் அப்துல் ரஸாக் அவர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் இக்கூட்டம் பாராட்டுதலையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறது.
4) இன்ஷாஅல்லாஹ் வரும் மே – ஜூன் மாதங்களில் நமதூரில் இலவச இரத்தப் பரிசோதனை முகாம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது..
5) நமதூரில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள “ஷிஃபா“ குழுவில் நம் மன்றமும் இனைவது சம்பந்தமாக் அதன் நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவு செய்வதற்கு தலைவர் அவர்களுக்கு இக்கூட்டம் அனுமதி அளிக்கிறது.
6) நமதூர் இரயில் நிலையத்தில் நம் மன்றம் மூலம் செய்த வேலைகளுக்கு ஆன செலவுகளை இக்கூட்டம் அங்கீகரிக்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இறுதியாக மன்றத்தின் துணைச் செயலாளர் ஹாஜி பி.எம்.லுக்மான் மவ்லானா அவர்கள் நன்றி கூற மவ்லவீ எம்.ஏ.அப்துல் வதூத் ஃபாஸீ அவர்களின் துஆவைத் தொடர்ந்து, ஸலவாத்துடன் கூட்டம் நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
இக்கூட்டத்தில் மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பழைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
S.M.தாஹிர்
துணைத்தலைவர்
ஜெய்ப்பூர் காயல் நல மன்றம் (ஜக்வா) |