காயல்பட்டினத்தில், இம்மாதம் 06, 07 தேதிகளில் (இன்றும், நாளையும்) தப்லீக் இஜ்திமா (ஒன்றுகூடல்) நடைபெறவுள்ளது.எஎ
இன்று மாலை 06.30 மணிக்கு மஃரிப் தொழுகையுடன் துவங்கும் நிகழ்ச்சிகள் நாளை இரவு 08.30 மணிக்கு இஷா தொழுகையுடன் நிறைவுறுகிறது.
இந்த இஜ்திமா நிகழ்வில், தமிழகத்தின் பல பகுதிகள், வெளி மாநிலங்கள், வெளி நாடுகளிலிருந்து சுமார் 50 ஆயிரம் ஆண்கள் திரள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இஜ்திமா நடத்துவதற்காக, காயல்பட்டினம் எல்.எஃப். வீதியில், பேருந்து நிலையத்தையொட்டி சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் எளிய பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இஜ்திமாவில் பங்கேற்கும் பொதுமக்களின் வசதிக்காக - உணவு, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்புக்காக தீயணைப்பு வாகனம், முதலுதவிக்காக மருத்துவ சிகிச்சைக் குடில் உள்ளிட்ட ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
இந்த இஜ்திமா நிகழ்விற்காக, கடந்த ஜனவரி மாதம் முதலே நிகழ்விடத்திலுள்ள புதர்கள் அகற்றப்பட்டு, பந்தல் அமைக்கும் பணி துவக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இஜ்திமாவில் கலந்துகொள்வதற்காக, நேற்று (ஏப்ரல் 05) முதல் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் பொதுமக்கள் திரளத் துவங்கியுள்ளனர். சென்னை தி.நகர் பகுதியிலிருந்து வந்த தப்லீக் ஜமாஅத்தினர், நேற்று மாலையில் காயல்பட்டினம் கடற்கரையில் அமர்ந்திருந்த காட்சிகள்:-
இதற்கு முன், காயல்பட்டினத்தில் 01.10.1954 அன்று இதுபோன்ற இஜ்திமா நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
[கூடுதல் தகவல் இணைக்கப்பட்டுள்ளது @ 10:57 / 06.04.2013] |