காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் 34ஆவது ஆண்டு விழா, 30.03.2013 சனிக்கிழமையன்று, பள்ளி வளாகத்தில் - மாணவ-மாணவியரின் கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு, ஹாஜ்ஜா வாவு ஜெய்னப், ஹாஜ்ஜா எஸ்.ஏ.ஃபாத்திமா, ஹாஜ்ஜா விளக்கு செய்யித் ஃபாத்திமா, ஹாஜ்ஜா எம்.ஏ.சுபைதா, ஹாஜ்ஜா எம்.கே.எஸ்.கிதுறு ஃபாத்திமா, எம்.ஏ.கே.கிதுரு ஃபாத்திமா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாணவர் எம்.டபிள்யு.காஸிம் ரிழ்வான் கிராஅத் ஓதி விழா நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். ஆசுிரியை ஃபாத்திமா நுஸைபா வரவேற்புரையாற்றினார். ஆசிரியை ஜெயா ரோஸ்லின் மேரி பள்ளி ஆண்டறிக்கையை வாசித்தார். இவ்விழாவில், டாக்டர் ஹமீதா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, கடந்த கல்வியாண்டில் சிறப்பிடங்களைப் பெற்ற மாணவ-மாணவியருக்கும், விளையாட்டு விழாவின்போது நடைபெற்ற போட்டிகளில் வென்ற மாணவ-மாணவியருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. மேடையில் முன்னிலை வகித்தோர் அப்பரிசுகளை வழங்கினர்.
பரிசுகளுக்கு, காயல்பட்டினம் விளக்கு குடும்பத்தைச் சேர்ந்த முன்னாள் மாணவர்கள் அனுசரணையளித்திருந்தனர். ஆசிரியை ப்ரியதர்ஷினி நன்றி கூற, துஆ - நாட்டுப்பாண்ணுடன் விழா நிறைவுற்றது.
இவ்விழாவில், பள்ளியின் மாணவ-மாணவியர், ஆசிரியையர், அலுவலர்கள், நிர்வாகிகள் மற்றும் பெற்றோர் திரளாகக் கலந்துகொண்டனர்.
பின்னர், மாணவ-மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தஃப்ஸ், ரங்கோலி நாட்டியம், உரையாடல், நாடகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை, பள்ளி மாணவ-மாணவியர் பார்வையாளர்கள் முன்னிலையில் செய்து காண்பித்தனர்.
விழா ஏற்பாடுகளை, பள்ளி துணைச் செயலாளர் கே.எம்.டி.சுலைமான் ஒருங்கிணைப்பில், தலைமையாசிரியர் ஸ்டீஃபன், ஆசிரிய-ஆசிரியையர், அலுவலர்கள் செய்திருந்தனர்.
[பள்ளி நிர்வாகம் கேட்டுக்கொண்டதற்கிணங்க, ஒரு படம் அகற்றப்பட்டது @ 11:26 / 08.04.2013] |