காயல்பட்டினம் நகர்நலப் பணிகளை முன்னிறுத்தி, சென்னை வாழ் காயலர்களை ஒருங்கிணைத்து செயல்பட்டு வரும் அமைப்பு “காயல்பட்டினம் சென்னை வழிகாட்டு மையம்” KCGC. இவ்வமைப்பின் நகர்நலப் பணிகளுக்கு இதுநாள் வரை தனித்தனி குழுக்கள் வரையறுக்கப்பட்டு, அனைத்துக் குழுக்கள் நிர்வாகத்தின் கீழ் அது இயங்கி வந்தது.
இந்நிலையில், முறையாக தேர்தல் நடத்தி அமைப்பிற்கான புதிய செயற்குழுவைத் தேர்ந்தெடுப்பதென, 09.02.2013 அன்று சென்னையில் நடைபெற்ற - அமைப்பின் அனைத்துக் குழு கலந்தாலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதன் அடிப்படையில், மின்னஞ்சல் முறையில் தேர்தல் நடத்தப்பட்டு, புதிய நிர்வாகக் குழு உறுப்பினர்களாக 7 பேர் அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் தமக்குள் கூடி, அமைப்பின் தலைவர், துணைத்தலைவர்கள், செயலாளர், துணைச் செயலாளர்கள், பொருளாளர் ஆகியோரைத் தேர்ந்தெடுப்பர் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதனடிப்படையில், இம்மாதம் 04ஆம் தேதியன்று சென்னையில் நடைபெற்ற - நிர்வாகக் குழு உறுப்பினர் கூட்டத்தில், அமைப்பிற்கு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, KCGC அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:-
வல்ல அல்லாஹ்வின் பேரருளால், மூன்றாவது ஆண்டாக செயல்பட்டு வரும் காயல்பட்டணம் சென்னை வழிகாட்டு மையத்தின் (KCGC) நிர்வாகத்திற்கான பொறுப்பாளர்கள் தேர்வு புதிய விதிகளின் அடிப்படையில் முதன்முறையாக இம்மாதம் 04ஆம் தேதியன்று நடைபெற்றது.
அக்கூட்டத்தில் அமைப்பிற்கு, பின்வருமாறு நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்:
தலைவர்:
சகோ. ஆடிட்டர் ரிஃபாய்
துணைத்தலைவர்கள்:
சகோ. ஸ்மார்ட் அப்துல் காதர்
சகோ. எச்.என்.சதகதுல்லாஹ்
செயலாளர்:
சகோ. எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம்
துணைச் செயலாளர்கள்:
சகோ. பல்லாக் சுலைமான்
சகோ. முஃக்தார்
பொருளாளர்:
சகோ. குளம் முஹம்மத் தம்பி
முன்னதாக சென்ற மாதம் 28ஆம் தேதியன்று மின்னஞ்சல் மூலம் நடந்து முடிந்த தேர்தலில் 23 செயற்குழு உறுப்பினர்கள் 7 பேருக்கான நிர்வாகப் பொறுப்புகளுக்கு வாக்களித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற அமர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட 7 பேரும் ஒன்று சேர்ந்து அந்தந்த பொறுப்புகளுக்கான நபர்களை தங்களுக்குள் ஒருமனதாகத் தேர்ந்தெடுத்தனர்.
சேவை என்ற போதிலும் அல்லாஹ்வால் வழங்கப்பட்ட இந்த அமானிதத்தை பொறுப்பாளர்கள் சரியாக நிறைவேற்றவும், சென்னைக்கு வருகை தரும் காயல் நகரவாசிகள் பல நன்மைகள் அடைந்திடவும் வல்ல அல்லாஹ் இவர்களுக்கு உதவிபுரிவானாக, ஆமீன்.
இவ்வாறு, KCGC நிர்வாகக் குழுவின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |