தூத்துக்குடி மாவட்டத்தில், வீர தீர செயல்கள் புரிந்தோருக்கு கபீர் புரஸ்கார் விருது வழங்கப்படவுள்ளதாகவும், தகுதியுடையோர் வரவேற்கப்படுவதாகவும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் அறிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:-
தூத்துக்குடி மாவட்டத்தில் - ஜாதி, மத, இன கலவரத்தின்போது, தனிநபர் ஒருவர் எதிர் ஜாதி, மத இனத்தவரின் உயிரையோ - உடமைகளையோ தனது உயிரையும் பொருட்படுத்தாது பாதுகாத்து வீர – தீர செயல்கள் புரிந்திருந்தால், அவருக்கு கபீர் புரஸ்கார் விருது வழங்கப்படும்.
தகுதியுள்ளவர்கள் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:
மாவட்ட சமூக நல அலுவலர்
மாவட்ட சமூக நல அலுவலகம்
5யு, டூவிபுரம் 11ஆவது தெரு
(சங்கர நாராயணன் பிள்ளை பூங்கா பின்புறம்)
தூத்துக்குடி – 628 003
இவ்வாறு, அந்த செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
|