காயல்பட்டினம் மரைக்கார் பள்ளித் தெருவைச் சேர்ந்த, ஹாஜி எம்.ஏ.மெஹர் அலீ - எம்.சித்தி கதீஜா தம்பதியின் மகன் எம்.ஏ.அஷ்ஃபக் அஹ்மத், சென்னை மருத்துவக் கல்லூரியில் (MMC) எம்.பி.பி.எஸ். (டாக்டர்) பட்டம் பெற்றுள்ளார்.
இம்மாதம் 03ஆம் தேதி மாலை 07.00 மணியளவில், கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற விழாவில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் கே.வீரமணி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, மாணவர் அஷ்ஃபக் அஹ்மத் உட்பட 164 பேருக்கு எம்.பி.பி.எஸ். (டாக்டர்) பட்டச் சான்றிதழை வழங்கினார்.
தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், கல்லூரி முதல்வர் கனகசபை உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
மாணவர் அஷ்ஃபக் அஹ்மத், கடந்த 2006-07 கல்வியாண்டில், நாமக்கல் வித்யா விகாஸ் மேனிலைப்பள்ளி மூலம் ப்ளஸ் 2 தேர்வெழுதி, 1200க்கு, 1163 மதிப்பெண்கள் பெற்றதும், வெளிப்பள்ளிகளில் பயின்று சிறந்த மதிப்பெண் பெற்றமைக்காக, 2007ஆம் ஆண்டு, காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தால் நடத்தப்பட்ட “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை - 2007” நிகழ்ச்சியின்போது அவர் பாராட்டி பரிசு வழங்கப்பட்டமை மற்றும் நகர பள்ளி மாணவ-மாணவியருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்குபெற்றமை குறிப்பிடத்தக்கது.
பட்டச் சான்றிதழுடன் மாணவர் அஷ்ஃபக் அஹ்மத்
குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன்...
தகவல்:
ஹாஃபிழ் S.M.S.மஹ்மூத் ஹஸன்
மற்றும்
M.N.செய்யித் அஹ்மத் புகாரீ |